பெல்வத்தை தனது செழுமை நிறைந்த பால் உற்பத்திகளை உருவாக்க கால்நடை தீவனத்தை சொந்தமாக எவ்வாறு தயாரிக்கிறது

பல்வேறு வகையான பால் பொருட்களை உற்பத்தி செய்து நாட்டிற்கு பெறுமதியான அந்நியச் செலாவணியை சேமிக்க உதவும் இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமங்களில் ஒன்றான Pelwatte Dairy, இலங்கையின் பால் நுகர்வோரின் இதயங்களை வென்றுள்ளது. இதற்காக, நிறுவனம் அதன் பால் நுகர்வோருக்கு தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மேற்கொண்டு வருகிறது.

பெல்வத்தை தனது சொந்த கால்நடை தீவனத்தை தயாரிப்பதில் புகழ்பெற்று விளங்குகின்றது. 2009 ஆம் ஆண்டு முதல் கால்நடை தீவன உற்பத்தியின் தரத்தை பேணியவாறு, பெல்வத்தை அதன் சொந்த கால்நடை உணவு உற்பத்தியை  மேற்கொள்ள ஆரம்பித்தது. கறவை மாடுகளின் தீவனத்தின் தரம் மற்றும் அளவு என்பனை கறவை மாடுகள் உற்பத்தி செய்யும் பாலின் தரம் மற்றும் அளவு ஆகியவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதால், கறவை மாடுகளின் தீவனம் வழக்கமான மாட்டுத் தீவனத்தை ஒத்ததாக அமைந்திருக்காது. கறவை மாடுகளின் “உணவு பட்டியலை” இறுதியாக முடிவு செய்வதற்கு முன்னர், விலங்கின் எடை, அதன் வாழ்க்கை பருவ நிலை, அதன் உற்பத்தியின் அளவு போன்ற பல் வேறுபட்ட காரணிகள் மற்றும் உலர் தீவனத்திற்கும் விலங்குகளுக்கான திரவ தீவனத்திற்கும் இடையிலான அளவு உள்ளிட்ட விடயங்கள் பெல்வத்தையினால் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

தீவன ஆலைக்கு பொறுப்பான இயந்திரவியல் பொறியியலின் சிரேஷ்ட நிறைவேற்றதிகாரி பீ.ஏ.பீ. குமார இது தொடர்பில் தெரிவிக்கையில், “விலங்குகளின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும் நுகர்வோருக்கு சுவையான பாலை வழங்குவதற்கும் பசுவின் போஷாக்கு பிரதானமான மற்றும் முக்கியமான காரணியாக இருப்பதை பெல்வத்தை அடையாளம் கண்டுள்ளது. தினமும் 60 மெட்ரிக் தொன் உயர்தர கால்நடைத் தீவனத்தை உற்பத்தி செய்வதனை முன்னுரிமை அளித்து கால்நடை தீவன ஆலையை நாம் அமைத்துள்ளோம். இறக்குமதி தொடர்பான நாட்டின் பெறுமதி மிக்க அந்நியச் செலாவணியைச் சேமிப்பதில் பெயர் பெற்ற ஒரு தேசிய பால் உற்பத்தியாளர் எனும் வகையில், இந்த ஆலை நிறுவப்பட்டதில் இருந்து, பெல்வத்தை தனது சொந்த கால்நடைத் தீவனத்தை பல ஆண்டுகளாக உற்பத்தி செய்து வருகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இலங்கைக்குள் ஒவ்வொரு மாதமும் 300 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான மாட்டுத் தீவனத்தை உற்பத்தி செய்கிறோம். இந்த தீவனமானது, எமது சொந்த பால் விநியோகஸ்தர்களால் பயன்படுத்தப்படுகிறது. பெல்வத்தை உற்பத்தி தொகுதிகளில் இருந்து பெறப்படும் உயர்தர கால்நடை தீவனமானது, அவற்றின் உற்பத்தியின் பல்வேறு நிலைகளில், மூலப்பொருட்களின் உள்ளீடுகள் முதல் கால்நடைத் தீவனத் துகள்களின் வெளியீடு வரையான செயற்பாடுகள் வரை, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளதன் மூலம் அதன் தரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அத்தகைய உயர்தர தீவனமே எமது பால் பொருட்களுக்கு செழுமையான சுவையை அளிக்கிறதென நாம் நம்புகிறோம்.” என்றார்.

பெல்வத்தை கால்நடை தீவன உற்பத்திச் செயன்முறையானது முழுமையாக தரத்தை கடைபிடிக்க வேண்டியதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சோளம் மற்றும் அரிசி போன்ற மூலப்பொருட்கள் முதலில் தூசி மற்றும் ஏனைய கரடுமுரடான பொருட்கள் இன்றி நீக்கப்பட்டு நன்கு சுத்தம் செய்யப்படுகின்றன. சிறிய மற்றும் பெரிய மூலப்பொருட்கள் தொகுதிகளாக ஒழுங்கமைக்கப்பட்டு அவை கலக்கப்படுகின்றன. அதன் பின்னர் கலவையின் தரம் இறுதி தயாரிப்பின் ஒட்டுமொத்த தரத்தை தீர்மானிக்கிறது என்பதால் கலத்தலானது ஒரு முக்கியமான செயன்முறையாகும். அரைத்தல், மொத்த அடர்த்தியின் அளவு, விகிதாசாரத்தின் துல்லியம், கலக்கும் நேரம் ஆகியன ஒரு சிறந்த கலவைக்கு பங்களிக்கும் காரணிகளாகும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட மூலப்பொருட்களின் கலவை நகரும் பட்டிகள் மூலம் அரைப்பதற்காக அனுப்பப்படுகிறது. இது இறுதியில் தூள்  கலவை வடிவத்தை பெறுகிறது. அதன் பின்னர் வெல்லப்பாகு கலக்கப்படுகிறது. வெல்லப்பாகுகள் தட்டுத் தட்டான துகள்களுக்கு சுவையையும் உண்ணக்கூடிய உணர்வையும் தருகின்றன. வெல்லப்பாகு மற்றும் இம்மூலப்பொருள் கலவை ஆகியவற்றின் கலவையானது 85 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் 15 செக்கன்களுக்கு ‘சமைக்கப்படுகிறது’. அது சூடாக இருக்கும் போது, ​​நிலையாக பேணப்பட்ட கலவை உருட்டப்பட்டு, பின்னர் இந்த துகள்கள் குளிர்விக்கப்படும். இவ்வாறு பெறப்படும் குளிர்ந்த துகள்கள் சல்லடையில் அரிக்கப்பட்டு அதிலிருந்து வரும் சிறந்த துகள்கள், பொதியிடும் ஆலைக்கு அனுப்பப்படுகின்றன. எஞ்சியவை சிறந்த துகள்களின் தரத்தைப் பெறும் வரை மீண்டும் துகள்களாக்கும் ஆலைக்கு அனுப்பப்படுகின்றன. துகள்களின் நிலையான தன்மையையும் தரத்தையும் பேணவுதற்காகவும் அது மாத்திரமன்றி செலவுகளைக் குறைப்பதற்காககவும், ஈரப்பதன் கட்டுப்பாடு பேணப்படுகிறது. ஈரப்பதக் கட்டுப்பாடு ஆனது, துகள்களில் மேலதிகளவான நீர் இல்லாமலிருப்பதை அல்லது தேவையான நீரின் அளவை விட குறையாமல் இருப்பதை உறுதி செய்கிறது. Pelwatte Dairies Limited நிறுவனத்தின் தீவன ஆலையானது வழக்கமாக 3 வகையான முக்கிய கால்நடைத் தீவனங்களை உற்பத்தி செய்கிறது. ‘Pelwatte High Yielding Feed’ (பெல்வத்தை அதிக பால் விளைச்சல் தீவனம்) ஆனது, அதிக விளைச்சல் தரும் கறவை மாடுகளுக்கான செறிவான தீவனமாகும். இதில் அனுசேப மாற்ற சக்தி (2600-2750), புரதம் (16-17%), கொழுப்பு (5-7.5%) உள்ளன. ‘Pelwatte General Feed’ (பெல்வத்தை வழக்கமான தீவனம்) ஆனது சராசரி பால் விளைச்சல் தருகின்ற கால்நடைகளுக்கான செறிவான தீவனமாகும் என்பதுடன், இது அனுசேப மாற்ற சக்தி (2450-2550), புரதம் (13.5-14%), கொழுப்பு (5-7.5%) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ‘Pelwatte Calf Feed’ (பெல்வத்தை கன்றுத் தீவனம்) ஆனது, கன்றுகளுக்கான செறிவான தீவனமாகும் என்பதுடன், இதில் அனுசேப மாற்ற சக்தி (2800-2950), புரதம் (18-18.5%), கொழுப்பு (5-7.5%) உள்ளன.

சிரேஷ்ட நிறைவேற்றதிகாரி பீ.ஏ.பீ. குமார மேலும் தெரிவிக்கையில், “அதிக பால் விளைச்சல் தீவனமானது அதிக புரதம் கொண்ட செறிவூட்டப்பட்ட சக்தி கொண்ட அடர்த்தியான தயாரிப்பாகும். பொதுவாக, ஏனைய தீவனங்கள் அதிகமாக இல்லாத போது அதிக பால் விளைச்சல் தீவனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக அதிகளவான பால் உற்பத்தி செய்யும் பசுக்களுக்கு அதிக விளைச்சல் தரும் தீவனம் இன்றியமையாத உணவாகும். இந்த தீவனம் அதிக பால் உற்பத்தி செய்யும் மாடுகளுக்கு அவசியமான வலுவான, அடர்த்தியான புரதம் மற்றும் ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. ஆரோக்கியம் மற்றும் பால் உற்பத்தியைத் தக்கவைக்கும் வகையில், தீவன அளவை தொடர்ந்து அதிகரிக்கும் திட்டத்துடன் அதிக பாலுற்பத்தி செய்யும் கறவை மாடுகளுக்கு பெல்வத்தை உணவளிக்கிறது. அதிக விளைச்சல் தீவனத்தில் அதிக தானிய அளவுகள் காணப்படும் நிலையில் பாலின் தரம் மற்றும் பாலின் அளவு ஆகியன எதிர்மறையாக பாதிக்கும் என்பதால், அதிக விளைச்சல் தீவனத்தில் பேண வேண்டிய தானிய சதவீதத்தை கவனமாக பேணுவதற்கு பெல்வத்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எமது உற்பத்தி செயல்பாட்டில் நாம் பயன்படுத்தும் மூலப்பொருட்களில் சோளம், கோதுமை தவிடு, சோயா அவரை உணவு, d.c.p., தொழில்துறை உப்பு, கல்சியத் தூள், சோடியம் இருகாபனேற்று, அரிசித் தவிடு, பருப்பு உமி, பருப்பு தவிடு, தேங்காய் துண்டுகள், ஊக்கிகள் மற்றும் அரிசி  D-எண்ணெய் ஆகியன அடங்குகின்றன. முக்கியமாக, பெல்வத்தை பால் மாட்டுத் தீவனங்கள் உள்ளூர் தீவன மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். எனவே இவை சிறிய அளவிலான தீவன மூலப்பொருள் உற்பத்தித் தொழிலுக்கு உதவியளிக்கின்றது. இருப்பினும், Pelwatte தேவைக்கேற்ப சொந்தமான தீவன மூலப் பொருட்களையும் உற்பத்தி செய்கிறது. பல்வேறு சந்தர்ப்பங்களில், பெல்வத்தை நிறுவனம் நாடு முழுவதும் உள்ள கால்நடை விவசாயிகளின் விசேட தேவைகளைப் பூர்த்தி செய்து வந்துள்ளது.” என்றார்.

பொதுவான தீவனமானது சராசரி உற்பத்தி அளவுள்ள கறவை மாடுகளுக்கும் ஆண் மாடுகளுக்கும் வழங்கப்படும் தீவனமாகும். அவை அதிக உணவோ அல்லது குறைவான உணவோ உண்பவை அல்ல. அவற்றிற்கும் ஊட்டமளிக்கும் வகையிலான பெல்வத்தை பால் உணவுத் தீவனங்கள் வழங்கப்படுகின்றன.

ஏற்கனவே பாலுற்பத்தியை வழங்கும் முதிர்ந்த மாடுகளின் திண்ம தீவனத்துடன் ஒப்பிடுகையில் கன்றுகளுக்கு பாரிய அளவிலான திரவ வகை உணவு அளிக்கப்படுகிறது. கன்றுகள் பெரும்பாலும் செழுமையான பாலுடன் இணைந்தவாறு உணவளிக்கப்படுகின்றன. அது மாத்திரமன்றி, கன்றுகள் வளரும் பருவத்தை கொண்டுள்ளதால், அவற்றின் புரத தேவைகள் அதிகமாக காணப்படும். இதற்காக சோயா மற்றும் ஏனைய தானிய அடிப்படையிலான துகள்கள் அதிகளவில் வழங்கப்படும்.

உயர்தர பால் உள்ளீடுகளைத் தக்கவைக்க, அதன் முக்கிய விநியோக சங்கிலி மையமான விவசாயிகளுக்கு நிறுவனம் தொடர்ச்சியான வெகுமதிகளை வழங்கி வருகிறது. பெல்வத்தை தற்போது இலங்கையில் பெருமளவிலான பால் பண்ணையாளர்களுக்கு ஆதரவளித்து வருகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *