மேம்படுத்தப்பட்ட VivoBook S15 (S533) இனை அறிமுகப்படுத்தும் ASUS Sri Lanka

ஆளுமை மற்றும் செயல்திறனுக்கு இடையில் சரியான சமநிலையைத் தரும் இலகுவாக எடுத்துச் செல்லக் கூடிய மடிக்கணனிகளைக் கொண்ட VivoBook S தொடருக்கான அற்புதமான புதிய  மேம்படுத்தப்பட்ட தயாரிப்புகளை ASUS அறிவித்துள்ளதுடன், இதன் உறுதியான தோற்றம் உங்கள் நாடித்துடிப்பினை எகிற வைப்பது உறுதியாகும்.

இந்தத் தொடரானது நவீன 11th Generation Intel® Core™ புரசசர்களினால் வலுவூட்டப்படுவதுடன்,  சிறந்த கிராபிக்ஸ் அனுபவத்தை வழங்க NVIDIA GeForce MX350 கொண்டுள்ளது. இதனோடு 40% செயற்திறன் அதிகரிப்பினை வழங்கும் ASUS Intelligent Performance Technology (AIPT)இனையும் கொண்டுள்ளது. இதன் சக்தி வாய்ந்த தொழில்நுட்ப அம்சங்களானது 16 GB RAM மற்றும் மிக வேகமான சேமிப்பகத்திற்காக அதிக திறனைக் கொண்ட PCIe® SSD with Intel Optane™ Memory H10  இனைக் கொண்டுள்ளது.

இதன் Intel-powered Wi-Fi 6 (802.11ax) அதிவேக வலையமைப்பு வேகத்தை வழங்குவதுடன் இது Wi-Fi 5 (802.11ac) இனை விட 3 மடங்கு அதிகமானதாகும். இது 4 மடங்கு வலையமைப்பு ஆற்றலையும், பெரிய அளவிலான 4K UHD வீடியோ பரிமாற்ற நேரங்களை 70% வரை குறைக்க 75%-lower latency இனையும் கொண்டுள்ளது.

VivoBook S15 தனித்துவமான வடிவமைப்புடன் கூடிய நேர்த்தியான தோற்றத்தைக் கொண்டது. 15 அங்குல மடிக்கணனியானது திடமான வைர-வெட்டு விளிம்புகள் மற்றும் உலோக இழையமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் இது நான்கு ஸ்டைலான வண்ணங்களில் கிடைக்கிறது – Resolute Red, Gaia Green, Dreamy White மற்றும் Indie Black – அவை பாவனையாளரின் ஆளுமையை பிரதிபலிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

மடிக்கணனியை நீங்கள் திறக்கும் போது இதன் நேர்மறை உணர்வு தொடர்வதுடன், மஞ்சள் நிற “color-blocking” Enter key  ஆனது வெளிப்படுகின்றது. இந்தத் தொடரில் தனித்துவமான வடிவமைப்புகள் மற்றும் சொற்றொடர்களைக் கொண்ட ஸ்டிக்கர்களும் உள்ளன, அவை ஒவ்வொன்றும் நான்கு வெவ்வேறு VivoBook வண்ணங்களுடன் ஒத்துப்போவதுடன், இளம் பாவனையாளர்கள் தங்கள் VivoBook  இனை மேலும் தனிப்பயனாக்க அனுமதிக்கிறது.

மிகவும் இலகு நிறைகொண்ட, மெல்லிய VivoBook S தொடரானது இலகுவாக எடுத்துச் செல்லக் கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் Thin-bezel NanoEdge  திரைகள் முழுமையான காட்சி அனுபவத்தை வழங்குவதுடன், சிறிய தோற்றம் காரணமாக உங்கள் மேசை மற்றும் பையில் தேவைப்படும் இடப்பகுதி மிகக் குறைந்ததாகும். இதன்  திரையான விரிந்த பார்வைக் கோணம், அதி FHD திரையானது தெளிவான காட்சிகளுக்கான சிறப்பான நிற மீளுற்பத்தியைக் கொண்டுள்ளது. VivoBook S15 வின் உயர் திரை இடப்பரப்பானது பன்முக செயற்பாடுகளுக்கு மிகவும் உகந்ததாக உள்ளது.

ASUS VivoBook S தொடர் மடிக்கணினிகளில் மொபைல் சாதனங்களுடன் தடையற்ற ஒருங்கிணைப்பை அனுமதிக்கும் MyASUS மென்பொருளின் அண்மைய பதிப்பும் அடங்கும். சிறப்பம்சங்களாவன;

  • PC கணனி மற்றும் மொபைல் சாதனங்களுக்கு இடையில் கோப்புகள் அல்லது வலை இணைப்புகளை தடையின்றி பகிர்ந்து கொள்ள வேண்டிய பாவனையாளர்களுக்கான வேகமான மற்றும் எளிதான வயர்லெஸ் கோப்பு மற்றும் URL இடமாற்றங்கள்
  • எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் மடிக்கணனியிலிருந்து மொபைல் சாதனங்களில் தரவை அணுகுவதற்கான தொலை கோப்பு அணுகல்
  • பாவனையாளர்கள் பன்முக செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடிய வகையில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டெப்லட்கள் திரைகளை பிரதிபலிக்கும் Screen mirroring   மற்றும் screen extender வசதி அல்லது அவற்றை கூடுதல் திரையாக பயன்படுத்தக் கூடிய வசதி.

ASUS VivoBook S15 தற்போது இலங்கையில் கிடைக்கின்றது. மேலதிக தகவல்களுக்கு  www.asus.com/lk

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *