வீட்டுப்பயனாளர்கள்மற்றும்சிறுவணிகங்களுக்கு Smart Tank பிரிண்டர்களைஅறிமுகப்படுத்தும் HP

வீட்டுப் பயனாளர்கள், நுண் மற்றும் சிறு வணிகங்களின் அன்றாட அச்சிடும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய Smart Tank பிரிண்டர்களை HP அண்மையில் வெளியிட்டுள்ளது. இன்றைய ஹைபிரிட் உலகில், மலிவு விலையிலும், பயனர் நட்பு மிக்கதான அம்சங்களுடன் மாத்திரமன்றி ஸ்மார்ட் பிரிண்டிங் தீர்வுகளுடன் கூடிய அச்சிடும் தீர்வுகளுக்கான தேவையும் அதிகரித்து வருகின்றது.

அதிகரித்து வரும் தொழில்முனைவோர் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு உதவியாக, தங்கு தடையின்றி அமைத்துக் கொள்ளக் கூடிய செயன்முறைகள், ஸ்மார்ட் அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட இணைப்புகளை ஏற்படுத்தக் கூடிய தெரிவுகள் மூலம் உரிய தேவையை அறிந்து, HP Smart Tank பிரிண்டர்கள் மேம்பட்ட பயனர் அனுபவத்தை வழங்குகின்றன. சுய செயற்பாட்டுக்கான Wi-Fi® திறன்கள், ஸ்மார்ட் செயலி மற்றும் ஸ்மார்ட்டான மேம்பட்ட அம்சங்களை உள்ளடக்கிய எளிதாக்கப்பட்ட மேம்பட்ட செயற்பாடு ஆகிய வசதிகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. HP இன் Smart Tank புதிய பிரிண்டர்கள், முன்கூட்டியே நிரப்பப்பட்ட மை மூலம் 6,000 கறுப்பு வெள்ளை பக்கங்களை அல்லது 6,000 வண்ணப் பக்கங்களை பிரிண்ட செய்யும் ஆற்றல் கொண்ட, தடையின்றி அச்சிடுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த பிரிண்டர்கள் புதிய சென்சர் அடிப்படையிலான Ink Tank தொழில்நுட்பம் மூலம் இயக்கப்படுவதால், இது மை தீர்ந்து போவதற்கு முன்பாகவே பயனர்களை எச்சரிக்கின்றன. தெரிவு செய்யப்பட்ட மாதிரிகளில் பயனர்களுக்கு duplex பிரிண்டிங் மேலதிக வசதியும் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் தாளின் இரு புறமும் தன்னிச்சையான முறையில் அச்சிட முடியும்.

HP பிரிண்டிங் தயாரிப்புகள் தொடர்பான இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் நாடுகளுக்கான சிரேஷ்ட பணிப்பாளர் சுனிஷ் ராகவன் இது பற்றி தெரிவிக்கையில், “நுண், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் போட்டித்தன்மை வாய்ந்த, அதிக நன்மை பயக்கக் கூடிய தீர்வுகளை மும்முரமாக தேடி வருகின்றன. தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் முதன்மையான சவால்களில் ஒன்று, சரியான அச்சிடல் இயந்திரத்தை தெரிவு செய்வதில் காணப்படும் சங்கடமாகும்.  குறிப்பாக, இங்கு பயன்படுத்த எளிதாக இருத்தல், தடையின்றி இணைப்பை ஏற்படுத்தல், குறைந்தபட்ச இடத்தில் வைக்கக் கூடியதாக இருத்தல் ஆகியவற்றுடன், வேகம், நம்பகத்தன்மை, கட்டுப்படியான விலை ஆகிய அம்சங்கள் அவர்களது தினசரி அச்சிடும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. இந்தக் விடயங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் HP Smart Tank பிரிண்டர் வகைகள் யாவும் சிறு வணிகங்கள், தொழில் முனைவோர், அதிக அச்சிடும் தேவைகளைக் கொண்ட தனிநபர்கள் ஆகியோருக்கு தொந்தரவில்லாத, ஸ்மார்ட்டான, இணைப்பை பல்வேறு வகையில் ஏற்படுத்தக் கூடிய அனுபவத்தை வழங்கும் வகையில், இவை துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதன் முக்கிய நன்மைகள்

Smart Tank அச்சிடல் கருவிகள் எளிதாக நிறுவிக் கொள்ளல் மற்றும் அச்சிடுதல், பிரதி எடுத்தல், ஸ்கேன் செய்தல், தொலைநகல் செய்தல் போன்ற தினசரி பயன்பாட்டில் பயனர் அனுபவத்தை மேம்படுத்துகின்றன. இதற்காக ஸ்மார்ட் வழிகாட்டல் பொத்தான்கள், நவீன HP Smart செயலி ஆகியவற்றிற்கு நன்றி சொல்ல வேண்டும். அடையாள அட்டை பிரதி எடுப்பதற்கான பொத்தான் போன்ற அம்சங்கள் அச்செயன்முறைகளை எளிதாக்குகின்றன. இது தானாகவே அடையாள அட்டையை கண்டறிந்து அச்சிடுகின்றது. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த பிரிண்டர்களில் ஒருங்கிணைந்த மை தொட்டிகள், மை குறைவடைந்ததை அவதானிக்கும் சென்சர்கள், காகித சென்சர்கள், வீட்டிலோ அல்லது சிறிய அலுவலகங்களிலோ நம்பகமான இணைப்புகளை வழங்கக் கூடிய சுய செயற்பாட்டுக்கான Wi-Fi® ஆகிய வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி, HP Wolf Essential Security அம்சமானது, முக்கியமான தகவல்களைப் பாதுகாப்பதோடு, வீட்டிலிருந்து வேலை செய்கின்ற மற்றும் கற்கின்றவர்களுக்கு அவர்களது குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.

கட்டுப்படியான தன்மை

Smart Tank வகைகள், அதிக அளவிலான அச்சிடுதல் தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதால், செலவு குறைந்த வண்ண மற்றும் ஒற்றை நிற அச்சிடல் வசதியை வழங்குகின்றன. இது 6,000 கறுப்பு அல்லது 6,000 வண்ண பக்கங்களை அச்சிடும் மை போத்தலை கொண்டிருப்பதால் பக்க அச்சிடலுக்கான செலவு மிகக் குறைவாக அமைகின்றது. 1 வருட வழக்கமான உத்தரவாதத்துடனும் தெரிவு செய்யப்பட்ட Smart Tank பிரிண்டர் வகைகளில் மேலும் ஒரு வருட நீடிக்கப்பட்ட உத்தரவாதத்துடனும் இவற்றை கொள்வனவு செய்யலாம்.

நிலைபேறான வடிவமைப்பு

Smart Tank பிரிண்டர்கள் நுகர்வோரால் 45% பிந்தைய மீள்சுழற்சி உள்ளடக்கத்தை கொண்டதும், சூழல் செயல்திறனுக்காக EPEAT Silver மற்றும் Energy Star ஆகிய இரு சான்றிதழ்களையும் கொண்டுள்ளன. அவை மின்சக்தி சேமிப்புக்கான தன்னிச்சையான Auto On/Off தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. இதன் மூலம் பயனர்களின் மேலதிக செயற்பாடின்றி அவை இயங்குகின்றன. ஏற்படும் கழிவுகளைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த பிரிண்டர்கள், கழிவுகள் உருவாகாத தொட்டிகள் மற்றும் கசிவுகள் அற்ற மீள் சுழற்சி செய்யக்கூடிய மை போத்தல்களுடன் வருகின்றன. அது மாத்திரமன்றி, அதன் மேம்பட்ட மை முகாமைத்துவ தொகுதியானது, மை சென்சர்களை கொண்டுள்ளதனால், மையின் அளவை எளிதாகக் கண்காணிப்பதையும், அவற்றை பராமரிப்பதையும் உறுதி செய்கின்றன.

Smart Tank தொடருக்கான SKU களில் HP Smart Tank 210 Printer, HP Smart Tank 520 All-in-One Printer, the HP Smart Tank 530 Wireless All-in-One Printer, the HP Smart Tank 580 Wireless All-in-One Printer, HP Smart Tank 670 All-in-One Printer, HP Smart Tank 750 All-in-One Printer ஆகியன உள்ளடங்குகின்றன.

புதிய Smart Tank பிரிண்டர்கள் ரூ. 55,000 எனும் விலையில் ஆரம்பிக்கின்றன. HP Smart Tank பிரிண்டர் வகைகள் மற்றும் அதன் கிடைக்கும் தன்மை தொடர்பான மேலதிக தகவலுக்கு, VS One Pvt Ltd. (அங்கீகரிக்கப்பட்ட HP விநியோகஸ்தர்) மற்றும் Accell Technologies (மீள்விற்பனையாளர்) நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளவும்.

HP பற்றி

HP Inc. (NYSE: HPQ) நிறுவனமானது, உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் என்பதோடு, மக்களின் யோசனைகளை உயிர்ப்பிப்பதற்கான தீர்வுகளை உருவாக்குவதோடு, மிகவும் முக்கியமான விடயங்களுடன் அவற்றை இணைக்கவும் உதவுகிறது. 170 இற்கும் மேற்பட்ட நாடுகளில் செயற்படும் HP நிறுவனமானது, தனிநபர் கணனி, பிரிண்டிங், முப்பரிமாண பிரிண்டிங், ஹைப்ரிட் பணிகள், கேமிங் உள்ளிட்ட பல்வேறுபட்ட பரந்த அளவிலான புத்தாக்கமான மற்றும் நிலைபேறான சாதனங்கள், சேவைகள் மற்றும் சந்தா சேவைகளையும் வழங்குகிறது. இது தொடர்பான மேலதிக தகவலுக்கு: http://www.hp.com.

ENDS

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *