வேம்பு மற்றும் சந்தனத்தின் இயற்கையான சாற்றுடன் கூடிய புதிய மூலிகை கொலோனை அறிமுகப்படுத்தும் பேபி செரமி

இலங்கையின் முன்னணி குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமான பேபி செரமி, உயர் தரத்திலாலான பாதுகாப்பு நியமங்களுக்குட்பட்ட குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளை வழங்கி, பல தலைமுறைகளாக நம்பிக்கைக்குரிய வர்த்தகநாமமாக திகழ்கின்றது. அதன் பரந்த அளவிலான தயாரிப்பு வரிசையின் புதிய இணைப்பே 100% இயற்கை சாற்றுடன் கூடிய பேபி செரமி வேம்பு மற்றும் சந்தன மூலிகை கொலோன் ஆகும்.

பெற்றோர்கள் தமது குழந்தைகளின் வாழ்வின் முதல் சில ஆண்டுகளில் சிறந்த கவனிப்பை வழங்குவதில் கவனம் செலுத்துகின்றனர். ஏனெனில், இக் காலப்பகுதி உடல் மற்றும் உணர்வு ரீதியிலான வளர்ச்சியின் அடிப்படையில் முக்கியமானதென்பதுடன், பல தலைமுறைகளாக பெற்றோர்கள் மூலிகை குழந்தைப் பராமரிப்பு தீர்வுகளை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளனர்.

இலங்கையில் சுமார் ஆறு தசாப்த காலமாக பிரசன்னத்தைக் கொண்டிருக்கும் வர்த்தகநாமமாகத் திகழும் பேபி செரமி, இலங்கைக் குடும்பங்களில் ஒரு பகுதியாக இருப்பதாலும், குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் வளர்ப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிப்பதாலும் ஆயிரக்கணக்கான பெற்றோர்களால் விரும்பப்படுகின்றது. இந்த வர்த்தகநாமமானது, ஒரு தத்துவமாக அனைத்து தயாரிப்பு சூத்திரங்களும் மிருதுவானதாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிப்படுத்துவதுடன், கடுமையான தரம், பாதுகாப்பு மற்றும் சிறியவர்களுக்கான அதன் அக்கறையை மீண்டும் வலியுறுத்துகிறது.

உண்மையான இலங்கை வர்த்தகநாமமாக பேபி செரமி உள்நாட்டுக்கு வலுவாக பொருந்தும் மற்றும் இணைப்பைக் கொண்ட மூலப்பொருட்களுடன் தயாரிப்புகளை உருவாக்க தீவிரமாக பணியாற்றி வருகின்றது. இதற்கு இணங்க, அண்மையில் அறிமுகமான பேபி செரமி மூலிகை சவர்க்கார வரிசையின் மூலம், பெற்றோர்கள் தங்கள் விலைமதிப்பற்ற சிறார்களுக்கு சிறந்ததை வழங்குவதில் மேலதிக தெரிவை சேர்த்துள்ளது. இந்த வர்த்தகநாமத்தின் மூலிகை சவர்க்கார வரிசையானது 3 வேறுபட்ட வரிசைகளைக் கொண்டது. பொகுரு வட, சந்துன் கொஹோம்ப வெனிவெல் பிச்ச மற்றும் வதகஹா ஆகியன உயர் தர நியமங்களுக்கு ஏற்பட்ட தயாரிக்கப்படுகின்றன.

மூலிகை சவர்க்கார வரிசை உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டு வரும் உள்நாட்டு மூலிகைகளின் இயற்கையான நன்மைகளால் ஈர்க்கப்பட்டு, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மூலிகை கொலோனானது ஒரு புதிய மூலிகை வாசனையுடன் வருவதுடன், இது தாய் மற்றும் குழந்தையை புத்துணர்வுடனும் நறுமணத்துடனும் வைத்திருக்க உதவுகிறது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பேபி செரமி மூலிகை கொலோன் தொடர்பில் கருத்து தெரிவித்த, பேபி செரமியின் சந்தைப்படுத்தல் முகாமையாளர், தனுஷ்க சில்வா கருத்து தெரிவிக்கையில், “சிறந்த குழந்தை பராமரிப்பு தீர்வுகளை வழங்குவதாக உறுதியளிக்கும் ஒரு வர்த்தகநாமமாக, எங்கள் விஸ்வாசமான வாடிக்கையாளர்கள் உள்நாட்டுக்கு ஏற்ற இயற்கைச் சாறுகள் சிலவற்றை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட எங்கள் புதிய மூலிகை பராமரிப்பு தயாரிப்புகளை ஏற்றுக்கொள்வதனைப் பார்த்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள் பல வருடங்களாக எங்களின் மீது வைத்துள்ள நம்பிக்கையானது இலங்கை பெற்றோருடன் இணைந்து நமது பயணத்தைத் தொடர, தொடர்ந்து புத்தாக்கங்களில் ஈடுபடவும், சந்தைக்கு புதிய தயாரிப்புகளை வழங்கவும் ஊக்குவித்துள்ளது,” என்றார்.

புதிய பேபி செரமி மூலிகை கொலோனானது IFRA (International Fragrance Association) இனால் சான்றளிக்கப்பட்டதென்பதுடன்,  தோலில் மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கும் பொருட்டு தோலியல் சார்ந்த பரிசோதனைக்குட்படுத்தப்படுவதுடன், 100% இயற்கை சாறுகளை உள்ளடக்கிய மிக உயர்ந்த உள்நாட்டு மற்றும் சர்வதேச நியமங்களை கடைபிடித்து தயாரிக்கப்படுகிறது.

பேபி செரமி இலங்கையின் முன்னணி குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமென்பதுடன், இது சுமார் ஆறு தசாப்தங்களாக மிக உயர்ந்த தரமான மற்றும் பாதுகாப்பான குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளை வழங்குகிறது. அனைத்து குழந்தைப் பராமரிப்பு தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு விரிவான குழந்தை பராமரிப்பு தயாரிப்பு வரிசையை பேபி செரமி கொண்டுள்ளது. இதன் பரந்த அளவிலான குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளானது பேபி சவர்க்காரம், பேபி ஷாம்பூ, பேபி கொலன், பேபி கிறீம் மற்றும் லோஷன், பேபி அணையாடைகள், ஈர துடைப்பான்கள்,  சலவைத்தூள் மற்றும் திரவம், உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. அனைத்து பேபி செரமி தயாரிப்புகளும் குழந்தையின் தோலில் மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கும் பொருட்டு உயர் தரம் மற்றும் நியமங்களுக்கு ஏற்பவும் தயாரிக்கப்படுகின்றன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *