ஸ்டைலான Nova 9 SE மற்றும் 11th Gen MateBook D 15 இலங்கையில் அறிமுகம் செய்யும் Huawei

புத்தாக்க தொழில்நுட்ப வர்த்தகநாமமான Huawei, ஸ்டைலான Nova 9 SE ஸ்மார்ட்போன் மற்றும் நவீன MateBook D15 மடிகணனி ஆகியவற்றை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலம், அதன் பிரபலமான தொழில்நுட்ப தயாரிப்புகளின் வகைகளை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

Nova 9 SE ஆனது Huawei இன் Nova ஸ்மார்ட்போன் வகையில் புதிய நடுத்தர வகை சாதனமாக இணைகின்றது. சக்திவாய்ந்த கெமரா தொகுதி, புதுமையான அம்சங்கள் மற்றும் இளம் தலைமுறையினரை ஈர்க்கும் ஸ்டைலான வடிவமைப்பு ஆகியவற்றின் மூலம் இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. Huawei யின் MateBook மடிகணனி வகையானது, தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட பெயராகும். இந்த 11th Gen MateBook D 15 ஆனது, MateBook வகையின் பாரம்பரிய அம்சங்களுடன் மிகவும் மேம்படுத்தப்பட்ட மேலும் பல அம்சங்களையும் கொண்டுள்ளது.

Huawei Nova 9 SE ஆனது 6.78 அங்குல, 90Hz refresh வீதத்தைக் கொண்டுள்ள LCD திரையை கொண்டுள்ளதுடன், செல்பி கெமராவை நிறுவுவதற்காக திரையின் நடுவில் சிறுதுளையைக் (punch-hole) கொண்டுள்ளது. ஸ்டைலான வடிவமைப்பானது, முப்பரிமாண கண்ணாடியிலான பின்புறம் மற்றும் அழகிய வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது, நீலம், வெள்ளை, கறுப்பு (crystal blue, pearl white, midnight black) ஆகிய வண்ணங்களில் வருகின்றது.

Nova 9 SE ஆனது 108MP AI குவாட் (நான்கு) கெமரா தொகுதியைக் கொண்டுள்ளது. இது, 108MP பிரதான கெமரா, 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் வில்லை, 2MP பொக்கே வில்லை, 2MP உருப் பெருக்க மெக்ரோ வில்லை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 108MP அல்ட்ரா HD பிரதான கெமரா ஆனது, பயனர்களுக்கு உயர் தெளிவுத் திறனான மற்றும் அதிக விபரங்களை உள்ளடக்கிய புகைப்படங்களைப் பிடிக்க உதவுகிறது. முன் மற்றும் பின்புற கெமராக்கள் இரண்டையும் ஒரே தடவையில் இயக்கும் dual-view வீடியோ, தொடர்ச்சியான முன்பக்க மற்றும் பின்புற வீடியோ பதிவு, தனித்துவமான வீடியோ எடிட்டிங் தெரிவுகள் போன்ற புத்தாக்கமான வீடியோ பதிவு அம்சங்களுடன், சமூக வலைத்தளங்களில் vlog செய்வதற்கான சாத்தியக்கூறுகளை மேலும் அதிகப்படுத்துகிறது. அவ்வாறே இதன் 16MP முன்புற கெமராவும் அதே போன்று சக்தி வாய்ந்தது என்பதுடன் பகலோ, இரவோ எவ்வேளையிலும் உயர்தர புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க அனுமதிக்கிறது.

இது 8GB RAM மற்றும் 128GB உள்ளக சேமிப்பகத்துடன் இணைந்து Qualcomm Snapdragon 680 processor மூலம் இயக்கப்படுகிறது. அத்துடன், பயனர்களுக்கு சாதனத்தை வேகமான வகையில் சார்ஜ் செய்ய உதவுகின்ற, 66W Huawei SuperCharge தொழில்நுட்பத்தையும் இது ஆதரிக்கிறது.

Huawei இன் நவீன மடிகணனியான MateBook D 15 ஆனது அதிக ஆற்றல் மிக்க அம்சங்களுடனான, மிகச் சிறிய, மெல்லியதான மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மடிகணனியாகும். இது 1.56kg நிறை கொண்டதாக உள்ளதுடன், சாம்பல் மற்றும் வெள்ளி (Space Grey, Mystic Silver) வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது அதியுச்ச பார்வை அனுபவத்தை வழங்கும் வகையிலான, IPS 15.6 அங்குல Huawei முழுத் திரை தோற்றத்தை (Huawei Full View) வழங்கும் திரை மற்றும் Full HD 1920×1080 தெளிவுத்திறனுடன் வருகிறது. கண்களின் வலியை தடுக்கும் இதிலுள்ள eye restrain mode முறைமை மற்றும் ஒளி ஏற்ற இறக்க நிலைமையை கட்டுப்படுத்தும், திரை மேல் அமைந்த blue light (நீல ஔி) சான்றளிப்பானது, சாதனத்தின் நீண்ட நேர பயன்பாட்டின் போது கண்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. திரையிலுள்ள மெல்லிய சட்டகம் காரணமாக, பரந்த திரை அனுபவம் வழங்கப்படுவதுடன், அது மடிகணனியின் முழு வடிவமைப்பிற்கும் நேர்த்தியான தோற்றத்தை அளிக்கிறது.

இம்மடிகணனி, புதிய 11th Gen Intel Core Processor மற்றும் 16GB RAM மூலம் செயற்படுவதன் காரணமாக, பல சாதனங்களுடன் ஒருங்கிணைந்து செயலாற்றும் cross-device collaboration மூலம், மேம்பட்ட செயல்திறனை வழங்குகிறது. இதன் Intel Iris Xe Graphics ஆனது, வேகமான கிரபிக்ஸ் செயலாக்கத்திற்கான செயற்றிறனை வழங்க உதவுகிறது.

தங்கு தடையற்ற cross-device collaboration வசதியை ஆதரிக்கும் Super Device வசதி மற்றும் மேலும் அதிக பாதுகாப்பிற்கான கைரேகை உணரியை கொண்ட ஸவிட்ச் பட்டன் போன்ற புதுமையான அம்சங்களை இது கொண்டுள்ளது. இதன் Smart Device  அம்சமானது, இயர்போன்கள், ஸ்பீக்கர்கள், மவுஸ், கீபோர்டுகள் உள்ளிட்ட சாதனங்களை கம்பியற்ற வகையில் இணைக்க பயனர்களுக்கு உதவுகிறது.

Huawei MateBook D 15 ஆனது, மிகச் சிறிய, சக்திவாய்ந்த சார்ஜருடன் வருகிறது. இது 65W USB-C வகை சார்ஜர் வசதியைக் கொண்டுள்ளதால், மடிகணனியை வேகமாக சார்ஜ் செய்ய உதவுவதுடன், ஸ்மார்ட்போன்களையும் சார்ஜ் செய்வதற்கும் அனுமதிக்கிறது. இவ்வசதியானது, பயணங்களின் போது பல்வகை தேவைகளை ஈடு செய்ய உதவுகிறது.

Huawei Nova 9 SE மற்றும் MateBook D 15 ஆகிய இரண்டு சாதனங்களும், தற்போது Huawei அனுபவ மையங்கள், அங்கீகரிக்கப்பட்ட Huawei விற்பனையாளர்கள் மற்றும் சிங்கர் காட்சியறைகளில் கிடைக்கின்றன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *