
ஹேலிஸ் சோலார் நிறுவனம் அறிமுகப்படுத்தும் ‘கடன் இல்லாத ஒரு கடன்’ Hayleys Fentons இன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவான ஹேலிஸ் சோலார், இலங்கை குடும்பங்களுக்கு ‘கடன் இல்லாத ஒரு கடன்’ மூலம் அவர்களின் மின்சார தேவைகளைக் கட்டுப்படுத்த அதிகாரம் அளிக்கிறது. சூரிய சக்தியை அனைவருக்கும் மலிவு விலையில் வழங்குவதற்காக, பிரத்தியேக நிதித் திட்டங்களின் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், பல குடும்பங்களுக்கு மின் கட்டணம் ஒரு குறிப்பிடத்தக்க செலவாகிவிட்டது. சூரிய சக்திக்கு மாறுவது இந்தச் செலவை எளிதில் அகற்றும் ஒரு வழியாகும். நிதியளித்தல் ஒரு சவாலாகவே இருப்பதோடு, இறுதியில் குடும்பத்தின் மாதாந்த பட்ஜெட்டில் மற்றொரு சுமையை இலகுவாக சேர்த்தும் விடுகிறது. எனவே, “கடன் இல்லாத ஒரு கடன்” திட்டத்தின் ஊடாக, சூரிய முதலீடுகளுக்காக, ஹேலிஸ் சோலாருடன் இணைந்து பிரத்தியேக கட்டணங்களை வழங்கும் இலங்கையில் உள்ள உயர்மட்ட நிதி பங்காளிகளிடமிருந்து நுகர்வோர் நிதி வசதிகளை அணுக முடியும். இந்த ஏற்பாட்டின் மூலம் நுகர்வோர் குறைந்த மாதாந்த வங்கி தவணையை செலுத்த முடியும், இது அவர்களின் தற்போதைய மாதாந்த மின் கட்டணத்தை விட குறைவாகவே உள்ளது. இதன் விளைவாக, வங்கித் தவணையைச் செலுத்திய பிறகு சேமிப்பை அவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தில் முதலீடு செய்யும் அதே வேளையில், 20 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரத்தை அனுபவிக்கும் வாய்ப்பும் கிடைக்கின்றது.
பிரத்தியேக கட்டணங்கள் கொமர்ஷல் வங்கி, இலங்கை வங்கி, மக்கள் வங்கி, சம்பத் வங்கி, செலான் வங்கி, CDB, People’s லீசிங் மற்றும் LOLC பினான்ஸ் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும். இந்த நம்பகமான நிதித் தலைமைகளுடனான ஹேலிஸ் சோலாரின் கூட்டாண்மையானது, சுமூகமான, தடையற்ற அனுபவத்தை உறுதிசெய்து, சூரிய ஒளிக்கு மாறுவதை எளிதாக்குகிறது.
‘நயக் நோவேன நயக்’ மூலம் முதலீட்டில் சாத்தியமான மாதாந்திர சேமிப்பைக் கணக்கிட, https://loancalculator.hayleyssolar.com ஐப் பார்வையிடவும் அல்லது 0112 102 102 ஐ தொடர்பு கொள்ளவும்.
முற்றும்