வாழ்க்கையில் மாற்றம் ஒன்றே மாறாத ஒன்றாகும். அந்த வகையில் ஸ்மார்ட்போன் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும், இந்நவீன காலத்தில் கவனத்திற்குள்ளாக்கும் ஸ்மார்ட்போன் புத்தாக்க கண்டுபிடிப்புகளின் திருப்புமுனையை நாம் காண்கிறோம். ஸ்மார்ட்போன்கள், தனியே தொடர்பாடலுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் எனும் நிலையிலிருந்து வெகுதூரம் கடந்து வந்துவிட்டன. அது மிகப் புத்தாக்கமான சாதனங்களில் ஒன்றாக வாழ்க்கையைத் தொடர்ந்தும் வளப்படுத்தி வருகிறது என்பதுடன், நம் விரல் நுனியில் அனைத்தையும் வழங்கி வருகிறது. இன்றைய காலகட்டத்தில், ஒரு சிறந்த கெமரா, உயர் சக்தி கொண்ட மின்கலம், உயர்தர அம்சங்கள் மற்றும் அழகிய வடிவமைப்பு ஆகியவற்றின் கலவையான சிறப்பான வளைவுடனான வடிவமைப்பைக் கொண்ட சக்திவாய்ந்த ஸ்மார்ட் சாதனமொன்று நிச்சயமாக சந்தைகளின் கவனத்தை ஈர்க்கச் செய்யும். ஒவ்வொரு புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டின் போதும், அந்தந்த தரக்குறியீடுகள் தங்கள் போட்டியாளர்களுக்கு முன்னால் நிலைத்து நிற்பதற்காக, தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் தங்கள் ஸ்மார்ட்போன்களை மேலும் மேம்படுத்துவதற்கான வழியைத் தேடுகின்றன. வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் தலைமுறையின் தேவைகளுக்கு ஏற்ப ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தின் போக்குகள் தொடர்ந்தும் உருவாகி வருகின்றன. இன்று புரட்சிகரமாக காணப்படும் ஒன்று, நாளை பெரும்பாலான சாதனங்களில் வந்து விடலாம்.
இதை மனதில் கொண்டு, vivo அதன் சமீபத்தில் நிறைவடைந்த வருடாந்த vivo டெவலப்பர் மாநாட்டில் (VDC), பல்வேறு தொடரான தொழில்நுட்ப முன்னேற்றங்களை அறிவித்தது. இது சாதனத்தின் செயல்திறன், மென்பொருள் சேவைகள், IoT மற்றும் நிறுவனத்தின் பயனர் சார்ந்த உத்திக்கு அடித்தளமாக இருக்கும் தொழில்துறை வாய்ப்புகளின் பலத்தை வெளிப்படுத்துவனவாக அமைவதுடன், இது ஒரு விரிவான தொகுதியை கோடிட்டுக் காண்பிக்கிறது.
2021 vivo டெவலப்பர் மாநாட்டில், vivo வின் புத்தாக்கங்களை செயற்படுத்தும் அதன் பயனர் சார்ந்த உத்தியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி உரையாற்றிய vivo வின் சிரேஷ்ட உப தலைவர் Shi Yujian தெரிவிக்கையில், “2021 vivo வின் முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவரும் ஆண்டாகும். காரணம், நாம் தரமான தயாரிப்புகளை உருவாக்கும் நிறுவனமாக இருந்து, தொழில்நுட்பம் மற்றும் எமது வடிவமைப்பு தத்துவத்தால் மேம்படுத்தப்பட்ட புரட்சிகர தயாரிப்புகளை உருவாக்கும் நிறுவனமாக மாறியுள்ளோம்” என்றார்.
“எமது பயனர்கள் vivo மீதான அவர்களின் அணுகுமுறையை ‘vivo தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்தல்’ என்பதில் இருந்து ‘vivo தயாரிப்புகளை விரும்புதல்’ எனும் நிலைக்கு மாறுவார்கள் என்று நாம் நம்புகிறோம். எமது திருப்தியான பயனர்கள், எமது தயாரிப்புகளை அவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்குப் பரிந்துரை செய்கின்ற, எமது தயாரிப்பின் தூதுவர்களாக மாறுவதைக் காண்பதை எதிர்பார்த்து நிற்கிறோம். எமது தயாரிப்புகள் மூலம், நாம் உயர்வாக அடையாளப்படுத்தக்கூடிய மற்றும் தனித்துவமான தரக்குறியீட்டை உருவாக்குகிறோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
- கணனிமய செயல்திறன்
சிறந்த மிருதுவான இயக்கத்தை அனுமதித்தல் மற்றும் மின்சக்தி நுகர்வு செயல்திறனில் சிறப்பாக செயற்படும் கணனிச் செயல்திறனை மேம்படுத்துவதற்காக, vivo உயர்ந்த நிகழ்நேர கணனி எஞ்சின்களை (computing engine) வடிவமைத்துள்ளது. குறிப்பாக, அறிவார்ந்த திட்டமிடல் கணனி எஞ்சின் மற்றும் அதிவேக data-chasing-loading கணனி எஞ்சின் உள்ளிட்ட கணனி எஞ்சின்களை வடிவமைத்துள்ளது. இவை தொடர்பில், இந்நிகழ்வில் vivo உப தலைவரும் vivo செயற்கை நுண்ணறிவு உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான Zhou Wei அறிமுகம் செய்து வைத்தார்.
- நினைவக முகாமைத்துவம்
vivo நினைவக முகாமைத்துவ திறன் மற்றும் செயற்றிறனை மேம்படுத்த புத்தாக்கங்களில் முதலீடு செய்துள்ளது. system resident memory life cycle, application memory allocation, DRAM and SoC internal cache ஆகியவற்றின் விரிவான முகாமைத்துவத்தை உறுதி செய்வதற்காக நிறுவனம் ஒரு சுயாதீனமான virtual cache தொகுதியை விருத்தி செய்தது.
- தனித்துவமான Antenna RF வடிவமைப்பு
நுகர்வோர் தங்கள் ஸ்மார்ட்போன்களில் சிக்னல் பிரச்சினைகள் மற்றும் மோசமான இணைய இணைப்பு ஆகியவற்றில் சிக்கலை எதிர்கொள்கின்றனர். கையடக்க சாதனம் எனும் வகையில், சில நிலைமைகளின் போது ஸ்மார்ட்போன்கள் சிக்னலை அடைவதற்கான தடையை எதிர்கொள்கின்றன. இந்த பிரச்சினையானது, vivo இன் சமீபத்திய கண்டுபிடிப்பான Unique Antenna RF வடிவமைப்பு மூலம் தீர்க்கப்பட்டது. இந்த புத்தாக்க கண்டுபிடிப்பானது பயனர்கள் எதிர்கொள்ளும் அத்தகைய சிக்னல் தடைகளைத் தீர்த்து, பயனர் அனுபவத்தை மேம்படுத்துகிறது. அது மாத்திரமன்றி, இதிலுள்ள AI தொழில்நுட்பமானது, வீட்டிலிருந்து வீடியோக்களைப் பார்க்கும்போது வீடியோ இயக்கத்தில் பிரச்சினை மற்றும் குறைந்த இணைய வேகம் உள்ளிட்ட, Wi-Fi சிக்னல் பலவீனமாக இருக்கும்போது அடையாளம் காண்கின்றது. பலவீனமான Wi-Fi சிக்னலை எதிர்கொள்ளும் போது உறைவடைந்து நிற்கும் விகிதத்தை பெருமளவு குறைப்பதுடன், சிறந்த இணைய அனுபவத்தை உறுதிசெய்ய, தொகுதியானது புத்திசாலித்தனமாக சிறந்த வலையமைப்பை தேர்ந்தெடுக்கிறது.
- IoT ecosystem
vivo வின் IoT ecosystem அமைப்பானது, அதன் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் மேம்படுத்தப்பட்டு, சாதனங்களின் இணைப்பு, தரவு ஓட்டத்தின் செயல்திறன் மற்றும் செயலிகளை விரைவாக்கி மேம்படுத்துவதுடன், பயனர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமான ஸ்மார்ட் ஹோம் அனுபவத்தை வழங்குகிறது. அதன் IoT தொகுதி அமைப்பின் கீழ், vivo சீனாவில் சுமார் 60 ஸ்மார்ட் தரக்குறியீடுகளுடன் ஒத்திசைந்து செய்ற்பட்டுள்ளது.