செயற்கை நுண்ணறிவு (AI) ஆனது உலகளாவிய ரீதியில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றதும் வணிகங்களை உருமாற்றத்திற்கு உள்ளாக்கி வருகின்றதுமான இந்த சகாப்தத்தில், எதிர்வரவுள்ள Sigiriya AI இன் அறிமுகத்தை LankaGPT பெருமையுடன் அறிவித்துள்ளது. இலங்கை, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளில் உள்ள 30 பேர் கொண்ட குழுவினால் உருவாக்கப்பட்ட இந்த அற்புதமான AI தளமானது, 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடுவதற்கு தயாராக உள்ளது. Sigiriya AI ஆனது இலங்கையர்களால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள இலங்கையர்களுக்காக அமைக்கப்பட்ட இவ்வகையான முதலாவது தயாரிப்பாகும்.
Sigiriya AI இன் ஆரம்பப் பதிப்பானது, சிங்களம் மற்றும் தமிழ் மொழிக்கு ஆதரவான வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு எழுத்து அடிப்படையிலான தளமாக அமையும் என்பதோடு, பல்வேறு பேச்சுவழக்குகள், பிராந்திய சொற்றொடர்கள், நுணுக்கமான உச்சரிப்புகளை உள்ளடக்கியதாக இது அமையும். 10 பில்லியன் சிங்கள தரவுத் தொகுப்புகள் மற்றும் 10 பில்லியன் தமிழ் தரவுத் தொகுப்புகள் உள்ளிட்ட தனியுரிம தரவுத் தொகுப்புகளைப் பயன்படுத்தி, பல்வேறு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கைச் சந்தையில் நுழைந்து, மத்திய கிழக்கு, கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட இலங்கையர் கணிசமான அளவில் வாழும் பிராந்தியங்களுக்கு விரிவுபடுத்துவதை இந்த தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஏனைய தென்கிழக்கு ஆசிய நாடுகள் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பரந்த தமிழ் பேசும் சமூகங்களுக்கும் இந்த தளம் ஆதரவளிக்கிறது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த, LankaGPT Technologies (Pvt) Ltd நிறுவனத்தின் இணை நிறுவுனரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான லசித குணசிங்க, “LankaGPT ஆகிய நாம், பொருளாதார மற்றும் சமூகத் துறையை மேம்படுத்துவதில் AI ஆற்றக்கூடிய பங்கை அவதானித்து நன்கு புரிந்துகொண்டோம். அந்த வகையில் இக்காரணத்திற்காக, புத்தாக்கங்களை ஏற்படுத்தி, சமூகங்களை மேம்படுத்துதல் மற்றும் நிலைபேறான வளர்ச்சியை மேம்படுத்துதல் ஆகிய நம்பிக்கையுடன் கல்வி, விவசாயம், சுகாதாரத் துறைகளுக்கு இந்த தளத்தை இலவசமாக வழங்குவதற்கு நாம் மிக உறுதியுடன் இருக்கிறோம். Sigiriya AI ஆனது, பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கும் முக்கியமான துறைகளை ஆதரிப்பதற்கான தொழில்நுட்பத்தை விரைவாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை கோடிட்டுக் காட்டுகிறது. அத்துடன், AI இற்கான இலவச அணுகல் சமூகத்தில் நீண்ட சாதகமான தாக்கங்களை உருவாக்க உதவும் என நாம் நம்புகிறோம்.” என்றார்.
Sigiriya AI ஆனது நாட்டின் ஒரு முக்கிய சாதனையை காண்பிப்பதோடு, இது LankaGPT இன் உலகளாவிய ரீதியில் போட்டியிடும் திறனையும் வெளிப்படுத்துகிறது. உலகெங்கிலும் உள்ள இலங்கை சமூகங்களின் மேம்பாடு மற்றும் நல்வாழ்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட, பல்வேறு இலாப நோக்கற்ற நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு மூலம் இந்த முயற்சி சாத்தியமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.