30 வருட நிறைவின் விசேடத்துவத்தை கொண்டாடும் Neptune Recyclers

இலங்கையில் மீள்சுழற்சி செய்யக்கூடிய கழிவு முகாமைத்துவ துறையில் உள்ள முன்னணி நிறுவனமான Neptune Recyclers நிறுவனம், அதன் 30ஆவது ஆண்டு நிறைவை 2023 நவம்பர் 14ஆம் திகதி, அதன் களஞ்சிய வளாகத்தில் கொண்டாடியது.

Expack Corrugated Cartons PLC இன் துணை நிறுவனமும், பெருமைக்குரிய Aberdeen Holdings Group இன் ஒரு அங்கமாக இயங்கி வரும் Neptune Recyclers ஆனது, பசுமை மற்றும் அதிக சூழல் உணர்வுள்ள, இலங்கைக்கு சாதகமான மாற்றங்களை உருவாக்குவதற்கும் நிலைபேறான தீர்வுகளை வழங்குவதற்கும் உறுதிபூண்டுள்ள நிறுவனமாகும். முகாமைத்துவ பணிப்பாளர் அப்துல்லாஹ் காசிம், நிறைவேற்றுப் பணிப்பாளர் றிஸான் ஜஃபர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி பஸ்லீன் மஜீத் ஆகியோரின் தூரநோக்கு கொண்ட தலைமைத்துவ குழுவின் வழிகாட்டலின் கீழ், தொழில்துறைத் தரங்களை நிர்ணயித்தவாறு, பிராந்தியத்தில் சூழலை பொறுப்பாக பேணும் ஒரு நிறுவனமாக இது விளங்குவதோடு, வட்டப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் நிறுவனம் தன்னை அர்ப்பணித்துள்ளது.

அவர்களது வர்த்தகநாம மீள்நிலைப்படுத்தல் முயற்சிகளின் ஒரு அங்கமாக, “இலங்கையின் வட்டப் பொருளாதாரத்தை முன் கொண்டு செல்லுதல்” எனும் ஒரு புதிய வாசகத்தை Neptune Recyclers ஏற்றுள்ளது. இது இலங்கையின் வட்டப் பொருளாதாரம் மீதான அவர்களது மேம்படுத்தப்பட்ட கவனத்தையும், வட்டப் பொருளாதாரத்தில் அவர்களது அனைத்து பங்குதாரர்களிடையேயும் பகிரப்பட்ட மதிப்பை உருவாக்கும் அதே வேளையில், நாட்டிற்கு மிக நிலைபேறான எதிர்காலத்தை உருவாக்குவதில் வழிவகுக்கும் அவர்களது அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.

இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லை நினைவுகூரும் வகையில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வை, நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அப்துல்லாஹ் காசிம், நிறைவேற்றுப் பணிப்பாளர் றிஸான் ஜஃபர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி பஸ்லீன் மஜீத் ஆகியோர் ஆரம்பித்து வைத்ததோடு, இதில் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை, குறிப்பாக கழிவு முகாமைத்துவம் மற்றும் வட்டப் பொருளாதார நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு நிலைபேறான தன்மை சவால்களை எதிர்கொண்டுள்ளது. இருப்பினும், Neptune Recyclers இந்த சவால்களை எதிர்கொள்வதிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதிலும் முன்னணியில் உள்ளது. அந்த வகையில் இந்நிறுவனம் 600,000 மெட்ரிக் தொன் கழிவுகளை மீள்சுழற்சி செய்துள்ளதோடு, இலங்கையில் சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் நல நிலைபேறான தன்மை முயற்சிகளுக்காக 160 மில்லியன் டொலர்களை பங்களிப்பு செய்துள்ளது.

இந்நிகழ்வில், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் தொடர்பான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டும் வகையில் உரை நிகழ்த்திய Neptune Recyclers நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அப்துல்லாஹ் காசிம், வட்டப் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டினார். இங்கு அவர் தெரிவிக்கையில், “உள்நாட்டு மீள்சுழற்சி திட்டங்களுக்கான எமது ஆதரவானது, இந்த பூகோளத்தை காப்பாற்றுவதற்காக மாத்திரமல்லாது, வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், உள்ளூர் பொருளாதாரங்களை மேம்படுத்துதல் மற்றும் பொறுப்புணர்வு பற்றிய உணர்வை வளர்ப்பதுமாகும்” என்றார். Neptune Recyclers, 30 வருடங்களாக மீள்சுழற்சியில் ஈடுபட்டதை பெருமையுடன் கொண்டாடும் இவ்வேளையில், வட்டப் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியையும் அவர் இதன்போது தெரிவித்தார்.

வட்ட பொருளாதாரக் கொள்கைகளில் வலுவான கவனத்தை செலுத்துவதன் மூலம், Neptune Recyclers கழிவுகளைக் குறைப்பதை தொடர்ச்சியாக முன்னெடுத்து, வளங்களைப் பாதுகாக்கவும், நிலைபேறான நடைமுறைகளை மேம்படுத்தவுமான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. நிலைபேறான தன்மைக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பானது, சூழல் தொடர்பான விடயங்களுக்கு மாத்திரமல்லாது, வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், அவர்களது ஊழியர்களின் நல்வாழ்வை உறுதி செய்தல் என நீண்டு செல்கின்றது.

ஒரு பொறுப்புள்ள பெருநிறுவன பிரஜையாக இருப்பதற்கும், இலங்கையை மிக நிலைபேறான எதிர்காலத்தை நோக்கி கொண்டு செல்வதற்கும் Neptune Recyclers அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்காக அவர்கள் இவ்வேளையில் தங்களது நன்றியைத் தெரிவிக்கின்றனர். அத்துடன், பசுமையான நாளையை நோக்கிய பயணத்தில் மேலும் பல ஆண்டுகள் பல்வேறு வெற்றிகளை எதிர்கொள்ளவும், வட்ட பொருளாதாரத்தை தழுவவும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Neptune Recyclers மற்றும் இலங்கையில் வட்டப் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வது தொடர்பான அவர்களது முயற்சிகள் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு, அவர்களது உத்தியோகபூர்வ இணையத்தளமான  www.neptunerecyclers.com ஐ பார்வையிடவும்.

Photo caption:

(இ-வ) Neptune Recyclers 30 ஆண்டு நிறைவு விழாவில், Neptune Recyclers முகாமைத்துவ பணிப்பாளர் அப்துல்லாஹ் காசிம் மற்றும் முகாமைத்துவக் குழுவினர், நிறுவனத்தின் சிரேஷ்ட தலைமைக் குழுவுடன்…

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *