இலங்கை முழுவதிலும் உள்ள இளவயது மாணவர்களை வலுவூட்டி, அவர்கள் சமமான, தரமான கல்வியை பெறும் வகையில் முன்னெடுத்துள்ள திட்டமான, ஜனசக்தி ஷில்ப சக்தி தரம் 5 புலமைப்பரிசில் திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக ஜனசக்தி லைஃப் நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக 10 வருடங்களுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சித் திட்டமானது, இலங்கையிலுள்ள இளைஞர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை ஊக்குவிக்கிறது.
கொழும்பு, கண்டி, மாத்தளை, ஹெட்டிபொல உள்ளிட்ட முக்கிய நகரங்களை உள்ளடக்கியதாக, 50 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், 2024 இல் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 5,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர். பல்வேறு பின்னணியைச் சேர்ந்த மாணவர்களை சென்றடைந்துள்ள இத்திட்டமானது, அடுத்த தலைமுறையினருக்கு பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றது.
இந்த திட்டத்தில் ஒரு உற்சாகமான குலுக்கல் போட்டியும் இடம்பெற்றது. இதில் மூன்று அதிர்ஷ்டசாலிகள் மவுன்டன் சைக்கிள்களை பரிசாகப் பெற்றனர். ஹெட்டிபொலவைச் சேர்ந்த ரமேஷா திவ்யாஞ்சலி, மாத்தளையைச் சேர்ந்த கிஹான் இந்துவர, கண்டியைச் சேர்ந்த சந்தீப்த வீரசிங்க ஆகியோருக்கே இப்பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த பரிசுகள், கற்றலிலும் தனிப்பட்ட வளர்ச்சியிலும் ஆர்வத்தை வெளிப்படுத்திய மாணவர்களை பாராட்டுவதற்கும் அவர்களை மேலும் ஊக்கப்படுத்துவதற்குமான, ஒரு அங்கமாக அமைகின்றது.
இந்த நிகழ்ச்சி பற்றி, ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரவி லியனகே தெரிவிக்கையில், “கல்வியானது, சமூக மாற்றத்தை முன்னெடுப்பதற்கும் தனிமனிதர்களை வலுவூட்டுவதற்கும் மிகவும் சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாகும் என, ஜனசக்தி லைஃப் ஆகிய நாம் உறுதியாக நம்புகிறோம். கல்வியின் மூலமே இளம் சிறுவர்கள் தங்களது முழுத் திறனையும் உணர்ந்து, சமூக-பொருளாதாரத் தடைகளைத் தாண்டி, தங்களுக்கும் தமது சமூகங்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும். அடுத்த தலைமுறை தலைவர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்களை உருவாக்குவதற்கான எமது நோக்கத்தை ஷில்ப சக்தி புலமைப்பரிசில் திட்டம் வெளிப்படுத்துகிறது. புலமைப்பரிசில்களை வழங்குவதன் மூலமும், பல்வேறு பின்னணியில் உள்ள மாணவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும், அவர்களுக்கான களத்தை சம அளவில் ஏற்படுத்துவதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இதன் மூலம் ஒவ்வொரு மாணவரும், அவர்களது சூழ்நிலைகள் காரணமான தடைகளை கடந்து வெற்றி பெற வாய்ப்பு ஏற்படுகின்றது. 2024 இல், 5,000 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த வாய்ப்பை நாம் வழங்கியுள்ளதற்கு அமைய, இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் தரமான கல்வி, அத்தியாவசிய திறன்களை பெற்று, தன்னம்பிக்கையை வளர்ப்பதை காண்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். சமூக ஈடுபாடு மற்றும் இளையோர் மேம்பாட்டின் முக்கியத்துவம் தொடர்பான எமது நம்பிக்கையை இத்திட்டத்தின் வெற்றி உறுதிப்படுத்துகிறது. எமது திட்டங்களை தொடர்ச்சியாக இவ்வாறு விரிவுபடுத்துகையில், இலங்கைக்கு பிரகாசமான, சமத்துவமான எதிர்காலத்தை வடிவமைப்பதற்கும், இளைஞர்களை வலுவூட்டுவதற்கும் நாம் அர்ப்பணிப்புடன் இருந்து வருகிறோம்.” என்றார்.
விரிவாக்கப்பட்ட இந்த திட்டமானது, ஜனசக்தி லைஃப்பின் பணிநோக்கிற்கு மேலும் சிறந்த வெளிப்பாட்டை ஏற்படுத்துவதுடன், கல்வியின் மூலம் இளைஞர்களை வலுவூட்டி, அவர்களுக்கு சம வாய்ப்பு, சமூக மேம்பாடு ஆகியவற்றின் பரந்த தூரநோக்கத்தை வலியுறுத்துகிறது. மாணவர்களை மேம்படுத்துதல், சிறந்து விளங்கச் செய்தல் மற்றும் அனைவருக்கும் சமமான மற்றும் வளமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும் கல்வி முயற்சிகளை முன்னெடுப்பதற்கான அர்ப்பணிப்புடன் ஜனசக்தி லைஃப் திகழ்கின்றது.
Ends
ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி பற்றி
1994 இல் ஆயுள் காப்புறுதி நிறுவனமாக நிறுவப்பட்ட ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனம், சுமார் 30 ஆண்டுகளாக ஒரு புத்தாக்க கண்டுபிடிப்பாளராகவும், அனைத்து மனைகளும் அறியும் பெயராகவும் தொழிற்துறையில் முத்திரை பதித்துள்ளது. 75 இற்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் பிரத்தியேக வாடிக்கையாளர் அழைப்பு மையத்துடன் விரிவடைந்து வரும் ஆயுள் காப்புறுதி வலையமைப்புடன் ஜனசக்தி லைஃப் நாடு முழுவதும் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது. “வாழ்க்கையை மேம்படுத்துதல் மற்றும் கனவுகளை வலுப்படுத்துதல்” ஆகிய நோக்கத்தைக் கொண்டுள்ள ஜனசக்தி லைஃப், தனது வாடிக்கையாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் காப்புறுதிக்கு அப்பாற்பட்ட சேவையை வழங்குவதன் மூலம் ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னணியில் இருப்பதில் உறுதியாக உள்ளது. ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனம், காப்புறுதி, நிதி, முதலீடு, ரியல் எஸ்டேட் துறைகளில் இயங்கி வரும் ஜனசக்தி குழுமத்தின் ஒரு உறுப்பு நிறுவனமாகும்.
ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர் சபை: பிரகாஷ் ஷாஃப்டர், ரவி லியனகே, ரமேஷ் ஷாஃப்டர், வரினி டி கொஸ்தா, அன்னிகா சேனாநாயக்க, சிவகிருஷ்ணராஜா ரெங்கநாதன், கலாநிதி நிஷான் டி மெல், நாதன் சிவகணநாதன், கலாநிதி ஜெஹான் குணதிலக, திலிப் டி எஸ். விஜேரத்ன ஆகியோரைக் கொண்டுள்ளது.