7UP® சூப்பர் டூப்பர் ரெஃப்ரெஷர் மற்றும் ராஷ்மிகா மந்தனா உடன் உங்கள் கோடைகாலத்தைப் புத்துயிரூட்ட தயாராகுங்கள்

7UP® வர்த்தகநாம தூதரும் சூப்பர்ஸ்டாருமான ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள சூப்பர்-டூப்பர் புத்துணர்ச்சியூட்டும் கோடைகால பிரசாரத்தை 7UP® அண்மையில் வெளியிட்டுள்ளது. 7UP® உடன் ராஷ்மிகாவின் அனுபவத்தை இந்த காணொளி காட்டுகிறது. அத்துடன் இது இலங்கை முழுவதும் 7UP® இனது புதிய வாசகமான ‘Super Duper Refresher’ என்பதை உயிரூட்டுகிறது.

ஒரு வெப்பமான, வெயில் நாள் கொண்ட காட்சியில் ஆரம்பிக்கும் இப்புதிய காணொளியில், ராஷ்மிகா கடைக்காரர் ஒருவரிடம் 7UP® ஒன்றை கோருவது காட்டப்படுகின்றது. கடைக்காரர் ராஷ்மிகாவிடம் 7UP® குளிரூட்டப்பட்ட போத்தலைக் கொடுக்கிறார், ஆனால் அவர் அதனை ஒரு வித்தியாசமான உணர்வுடனேயே கொடுக்கிறார். இது ராஷ்மிகாவை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. ராஷ்மிகா 7UP® போத்தலைத் திறக்க, காட்சியானது தொலைதூரத்திலுள்ள பனிப்பாறை பகுதிக்கு மாறுகிறது. அங்கு ஒரு நீர்க் குமிழ், புத்துணர்ச்சியை ஆக்கப்பூர்வமாக சித்தரிக்கிறது. அது மெதுவாக உருவாகி, பனி மூட்டமான மலைகளைக் கடந்து, ராஷ்மிகா தனது வாய்க்கு அருகில் போத்தலை கொண்டு வர அது அவரை நோக்கி வருகிறது. இந்த 7UP® போத்தலானது, நீங்கள் எங்கிருந்த போதிலும், புத்துணர்ச்சியின் இறுதி வடிவத்தை உங்களை நோக்கி இழுக்கும் காந்தம் போன்றது என்பதை அது காட்டுகிறது.

தற்போது புத்துணர்ச்சியின் பாரிய குமிழியாக இருக்கும் நீர்க்குமிழ், செக்கனுக்கு செக்கன் பெரிதாக வளர்கிறது. ராஷ்மிகா போத்தலைத் திறக்கும்போது, புத்துணர்ச்சியின் குமிழி இன்னும் அதிக வேகத்தில் அவரை நோக்கி விரைகிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்த கடைக்காரர், புத்துணர்ச்சியின் குமிழி நெருங்கும்போது ஒரு குடையைத் திறக்கிறார். இறுதியில் சந்தையின் நடுவில் உள்ள ராஷ்மிகா மீது குமிழி வெடித்து, அவர் நீரால் நனைந்து விடுகிறார். இது 7UP® ஒவ்வொரு மிடரிலும் கொண்டு வரக்கூடிய புத்துணர்ச்சியின் உற்சாக உணர்வைக் குறிக்கிறது. இதனைத் தொடர்ந்து இக்காணொளி 7UP® போத்தல் மற்றும் அதன் புதிய ‘சூப்பர் டூப்பர் ரெஃப்ரெஷர்’ எனும் வாசகத்துடன் நிறைவடைகிறது.

இப்பிரசார நிகழ்வில் கருத்துத் தெரிவித்த PepsiCo இலங்கை பிராந்தியத்தின் இணை பணிப்பாளர் அனூஜ் கோயல், “7UP என்பது ஒரு புத்துணர்ச்சி மட்டுமல்ல – இது ‘சூப்பர் டூப்பர் ரெஃப்ரெஷர்’ ஆகும். இது ஒரு கோடைகால நாளிலோ அல்லது அவசியமான எந்தவொரு தருணத்திலும் குடிக்க உகந்தது. எமது வர்த்தகநாம தூதுவரான ராஷ்மிகா மந்தனா, அவர் கொண்டுள்ள ஈர்க்கும் சக்தியை இரசிகர்களுக்குள் கடத்தும் ஆற்றல் மூலம் இந்த உணர்வை உயிர்ப்பிக்கிறார். இந்த விளம்பரப் பிரசாரம் இலங்கையில் உள்ள எமது நுகர்வோரால் விரும்பப்படும் என நாம் எதிர்பார்க்கிறோம். ஏனெனில் இது 7UP இனை குறிக்கும் அனைத்து அம்சங்களையும் காட்டுகிறது.

புதிய விளம்பரப் பிரசார (TVC) அறிமுகம் குறித்து, வர்த்தகநாம தூதரான ராஷ்மிகா மந்தனா தெரிவிக்கையில், “பல வருடங்களாக எமது வாழ்வில் புத்துணர்ச்சியூட்டும் ஒரு வர்த்தகநாமமான 7UP உடன் இணைந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விளம்பர படத்தில் பணிபுரிந்தமை மிகவும் வேடிக்கையான அனுபவமாக இருந்தது. இது சூப்பர்-டூப்பர் புத்துணர்ச்சியின் உச்சத்தை வெளிப்படுத்துவதோடு, உங்களை மேலும் மேலும் அதிகமாக கேட்கத் தூண்டுகிறது. இந்த புதிய பாத்திரத்தில் எனது இரசிகர்கள் என்னைப் பார்ப்பதை காண நான் ஆவலோடு காத்திருக்கிறேன்.” என்றார்.

7UP® TVC ஆனது தொலைக்காட்சி, டிஜிட்டல், வெளிப்புற காட்சிப்படுத்தல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் 360 பாகை முழு வீச்சிலான பிரசாரமாக வெளியிடப்படவுள்ளது. 7UP® பளபளப்பான எலுமிச்சை மற்றும் தேசிக்காய் சுவையுடன் தனியான மற்றும் பலர் அருந்தும் பொதிகளாக, நவீன மற்றும் வழக்கமான சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் முன்னணி இணைய-வர்த்தக தளங்களிலும் கிடைக்கிறது.

விளம்பர பிரசாரத்தைப் பார்வையிட இங்கே கிளிக் செய்யவும் : https://www.youtube.com/watch?v=bL_hxNa5X-E

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *