பெண்களுக்கான காசல் வீதி மருத்துவமனையில், இலங்கையில் இரண்டாவது தடவையாக ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளன. பேபி செரமி (Baby Cheramy), குழந்தைகளுக்கு வாழ்க்கையில் சிறந்த தொடக்கத்தை வழங்குவதில் பெற்றோருக்கு ஆதரவளிக்கும் அதன் உறுதிப்பாட்டைக் கடைப்பிடிக்கும் வகையில், இதில் உயிர் வாழும் 5 குழந்தைகளுக்காக, அதன் பெற்றோருக்கு ஆதரவளிக்கும் வகையில், ஒரு வருட காலத்திற்கு தனது முழுமையான குழந்தைப் பராமரிப்பு தயாரிப்புகளை வழங்க உறுதியளித்துள்ளது. பல தசாப்தங்களாக, தங்களது குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் சுகவாழ்வு தொடர்பில், மில்லியன் கணக்கான இலங்கைப் பெற்றோர்கள் பேபி செரமியின் குழந்தைகளுக்கான மென்மையான தயாரிப்புகளின் பராமரிப்பை நம்பியுள்ளனர். குழந்தை பராமரிப்பு பிரிவில் பேபி செரமியை முன்னணியில் திகழ இது வழிவகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பேபி செரமி சவர்க்காரங்கள், கொலோன்கள், கிரீம்கள், டயபர்கள் உள்ளிட்ட பொருட்களை மென்மையான மற்றும் தூய்மையான உணர்வை, புதிதாகப் பிறந்த இந்தக் குழந்தைகளும் அனுபவிப்பார்கள். சமூகத்திற்கு ஆதரவளிக்கும் ஒரு பொறுப்பான வர்தகநாமம் எனும் வகையில், இதற்கு முன்னரும், இலங்கையில் முதன்முதலாக ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழுந்தைகளின் பெற்றோருடன் இணைந்து, அவர்களுக்கும் ரூபா ஒரு மில்லியன் பெறுமதியான தயாரிப்புகளை பேபி செரமி நன்கொடையாக வழங்கியிருந்தது.
பேபி செரமி, வர்த்தகநாம முகாமையாளர் ஹிரான் பெப்டிஸ்ட் இது தொடர்பில் தெரிவிக்கையில், “ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளின் பிறப்பானது ஒரு தனித்துவமான நிகழ்வாகும். புதிய பெற்றோருக்கு குழந்தைப் பராமரிப்பு தேவைகளை பூர்த்தி செய்வது ஒரு சவாலான பணி எனும் வகையில், எமது ஆதரவு அவசியமான ஒரு விடயமாக அமைகின்றது. இக்குழந்தைகளை தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்வதற்காக, ஒரு வருடத்திற்கான, ரூ. 10 இலட்சம் பெறுமதியான பேபி செரமியின் அனைத்து வகையான தயாரிப்புகளையும் பெற்றோருக்கு வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். குழந்தைகளுக்கு பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவதானது, பெற்றோருக்கும் எமக்கும் முன்னுரிமை வகிக்கும் ஒரு விடயமாகும். அந்த வகையில், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு பாதுகாப்பான, நம்பகமான சூழலை பேபி செரமி வழங்குகிறது.” என்றார்.
வருங்காலத்தில் பெற்றோராக மாறவுள்ள மற்றும் புதிய பெற்றோர் தொடர்பில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட பேபி செரமி, நாடு முழுவதும் ”தரு பெட்டியட்ட சுரக்ஷித லொவக்’ (குழந்தைச் செல்வத்திற்கு பாதுகாப்பான உலகம்) எனும் எண்ணக்கருவின் கீழ், பெற்றோருக்கான கிளினிக் நிகழ்ச்சிகளை நடாத்தி வருகிறது. இது, தாய் மற்றும் தந்தை ஆகிய இருவருக்கும், தாயின் கர்ப்ப காலத்தில் ஏற்படும் சவால்களை சமாளிப்பதற்கான உதவிக்குறிப்புகளுடன், குழந்தைக்கு பாதுகாப்பான உலகத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை அடிப்படையாக் கொண்ட நிகழ்வாகும். இந்த பெற்றோர் கிளினிக்குகள், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் ஆரம்ப குழந்தைப் பருவ பராமரிப்பு மேம்பாட்டு அதிகாரசபை ஆகியவற்றினால் அங்கீகரிக்கப்பட்டவையாகும்.
சமூகத்தில் பொறுப்புமிக்க ஒரு வர்தகநாமம் எனும் வகையில், முதலிடத்தில் திகழ்கின்ற, அனைவராலும் மிகவும் விரும்பப்படுகின்ற, நம்பகமான குழந்தைப் பராமரிப்பு வர்த்தகநாமமான பேபி செரமி, குழந்தைகளுக்கான பாதுகாப்பான உலகத்தை உருவாக்கும் நோக்கில், சமூகங்களை மேம்படுத்துவதற்காக, இது போன்ற பல்வேறு அர்த்தமுள்ள திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறது.