புத்தாக்கமான அலுமினிய தயாரிப்புகள் மூலம் வாழ்விடங்களுக்கு மாற்றத்தை வழங்கும் Alumex

Alumex PLC ஆனது, முன்னோக்கிச் சிந்திக்கும், சிறந்து விளங்குகின்ற, கட்டுமானப் பொருட்கள் துறையில் உள்ள Hayleys குழுமத்தின் முதன்மையான நிறுவனமாகும். அது தனது தயாரிப்பு வரிசையின் விரிவாக்கத்தை தொடர்ச்சியாக வெளியீட்டு வருகிறது. அன்றாட வாழ்க்கைச் சூழலில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அதிநவீன அலுமினிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி அதன் மூலம் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சுகவாழ்வை மேம்படுத்த அது முயற்சிக்கிறது.

வசதியை மேம்படுத்த, செயற்பாடு, அழகியல் அல்லது பாதுகாப்பை மேம்படுத்த விரும்பும், வீட்டு உரிமையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது Alumex. கையடக்கத் தொலைபேசி வைக்கும் தாங்கி முதல் முகம் பார்க்கும் கண்ணாடிகள், பல்தேவை இறாக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பிரத்தியேக தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், வீட்டு உபகரணங்களின் தொகுப்புகளை Alumex உருவாக்கியுள்ளது.

Alumex PLC நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரமுக் தெடிவெல இது தொடபில் தெரிவிக்கையில், “Alumex PLC ஆகிய நாம், எமது விசேடத்துவத்தை தொடர்வதோடு, வசதியை மேம்படுத்துதல், செயற்பாடு, அழகியல் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பில், எமது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் தற்கால தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், மிக உயர் தரமான மூலப்பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட எமது தயாரிப்புகளின் நீடித்த பாரம்பரியத்தில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். எமது வாடிக்கையாளர்களுக்கு விடாமுயற்சியுடன் நாம் மேற்கொள்ளும் சேவையானது, எமது அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கான ஒரு சான்றாகும்.” என்றார்.

ஒரு வீட்டை மேம்படுத்தும் போது அல்லது நிர்மாணிக்கும் போது, நீண்ட கால தீர்வுகளையே கட்டடக் கலைஞர்களிடம் பெரும்பாலானோர் கோருகிறார்கள். Alumex Building System (ABS) இன் Sliding Windows (தள்ளும் யன்னல்கள்) நீடித்து நிலைத்திருக்கும் என்பதோடு, நவீன தோற்றத்தையும் வழங்குகிறது. அத்துடன் மரத்தாலான பொருட்கள் மாத்திரமே ஸ்டைலான தெரிவு என்ற கருத்தை அது சவால் செய்கிறது. Alumex ஆனது மரத்தினாலான நிறைவை வழங்குவதோடு, அலுமினியத்தின் உறுதியையும் ஒருங்கிணைத்து, சமகாலத்திற்கு ஏற்ற வகையிலான, நீண்ட கால தீர்வை வழங்குகிறது. இதன் மூலம் செலவைக் குறைத்து சேமிப்பை அதிகரிக்கிறது. இத்துறையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மூலமான தெரிவுகள் ஊடாக, நாம் வாழும் இடங்களை மேம்படுத்தி, நிலைபேறானதன்மையை அது ஊக்குவிக்கிறது. Alumex தயாரிப்புகள், காலத்துடனான தேவையை ஈடு செய்யும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளதோடு, 30 வருடங்கள் வரையிலான உத்தரவாதம் மூலம் அது மேலும் ஆதரிக்கப்படுகிறது.

“Dwelling” Alumex பல்நோக்கு இறாக்கையானது (Multi-purpose rack by Alumex), Alumex இனால் விநியோகிக்கப்படுகிறது. இது வீட்டின் பல்வேறு இடங்களுக்கு பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, நாம் வசிக்கும் இடங்களுக்கு இன்றியமையாத ஒன்றாகவும் காணப்படுகிறது. சமையலறை, குளியலறை, கெரேஜ் போன்ற இடங்களில் அதிக சேமிப்பு இடம் தேவைப்படும் நுகர்வோருக்கு, பல்வேறு நன்மைகள் கொண்ட இந்த இறாக்கை ஏற்றதாக அமைந்துள்ளது.

நிறுவனத்தின் Alumex கதவுகளுக்கு அடியிலான தீர்வுகள் (Alumex threshold solutions), கதவுகளின் அடிப்பகுதிக்கும் தரைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, பூச்சிகள் நுழைவதைத் தடுக்கவும், வளிச் சீராக்கியில் (AC) இலிருந்து தேவையற்ற வகையில் சக்தி விரயமாவதைத் தடுக்கும் வகையில், காற்று கசிவைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை அது வழங்குகிறது. திருகாணிகள் அல்லது 3M-வகை ஸ்டிக்கரைப் பயன்படுத்தி, இதனை இலகுவாக நீங்கள் நிறுவிக் கொள்ளலாம்.

Alumex ஏணி வகைகளில் புதிய இணைப்பாக இணையும், Alumex BB Ladder வகை ஏணிகள் இலங்கை சந்தைக்கு விரைவில் வரவுள்ளது. 2.5 அடி அகல படி கொண்ட இந்த ஏணியானது, உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ, சேமிப்பு கிடங்கிலோ உள்ள எட்ட முடியாத இடங்களை இலகுவாக அடைவதற்கான சிறந்த தீர்வை வழங்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணரும் வகையில், Alumex BB ஏணிகள், வழுக்குவதை தடுக்கும் படிகள் முதல் பாதுகாப்பான பூட்டும் செயற்பாடு வரையான பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

Alumex வழங்கும் மற்றொரு தயாரிப்பே ‘Dwelling’ Mirror collection by Alumex (முகம் பார்க்கும் கண்ணாடிகள்) ஆகும். இவை நேர்த்தியையும் நடைமுறைத்தன்மையையும் இணைக்கிறது. இந்த முகம் பார்க்கும் கண்ணாடிகள் பாதுகாப்பு ஸ்டிக்கர்களுடன், 5 மிமீ தடிப்பம் கொண்ட பெல்ஜியம் கண்ணாடியைக் கொண்டுள்ளதன் மூலம், நீண்ட ஆயுளையும் வாடிக்கையாளருக்கு மன அமைதியையும் உறுதிப்படுத்துகின்றன. பல் அம்ச வடிவமைப்பு காரணமாக, கிடைமட்டமாகவும், செங்குத்தாகவுமான வெவ்வேறு நிலைகளில் எளிதாக அதனை நிறுவ முடியும். அதற்கு ஏற்ற வகையில் வசதியான திருகாணிகளுக்கான துளைகள் மற்றும் அத்துடன் வழங்கப்படும் திருகாணிகள், வோல் பிளக்குகளும் வழங்கப்பட்டுள்ளன. மூன்று வண்ண தெரிவுகளுடன், அலங்காரம் கொண்ட கண்ணாடிகளை விரும்பும் நுகர்வோருக்கு ஏற்ற தெரிவாக இவை காணப்படுகின்றன. இவை அனைத்தும் முழுமையான 10 வருட உத்தரவாதத்தை கொண்டுள்ளன. இந்த முகம் பார்க்கும் கண்ணாடிகள் இடங்களுக்கு அழகு சேர்ப்பதோடு, செயற்பாட்டை மேம்படுத்துகின்றன.

‘Dwelling’ பல் செயற்பாட்டு அம்சம் கொண்ட Aluminium Mobile/Tab stands (அலுமினியம் கையடக்கத்தொலைபேசி அல்லது டெப் சாதனங்களுக்கான ஸ்டாண்டுகள்) வலிமையானதாகவும் நீடித்து நிலைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. உயர்தர அலுமினியப் மூலப்பொருட்களிலிருந்து வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தாங்கிகள் ஒப்பிடமுடியாத தாங்கும் திறனை வழங்குவதோடு, அதன் அடிப்பாகம் இலகுவில் உடையாத வகையில் ஆக்கப்பட்டுள்ளது. இந்த பல்துறை அம்ச அலுமினிய புத்தாக்க கண்டுபிடிப்பானது, கையடக்கத் தொலைபேசி அல்லது டெப் சாதனமானது, கிடைமட்டமாகவோ அல்லது செங்குத்தாகவோ இருக்கும் நிலையிலும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகின்றது. இது படிப்பதற்கு, அலுவலகத்தில் வேலை செய்வதற்கும், அல்லது பொழுதுபோக்கிற்கு ஏற்றதாக காணப்படுகின்றது.

இதில் குறிப்பிடும்படியான மற்றுமொரு தயாரிப்பே, Aluminium rulers by Alumex (Alumex இன் ‘Dwelling’ அலுமினிய அளவுகோல்) தொகுப்பாகும். இவை துல்லியமான மற்றும் பல்துறைத் தேவையைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. காலத்தால் அழியாத, தெளிவான மற்றும் துல்லியமான அளவீடுகள் இதில் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு மாணவருக்கோ, கட்டடக் கலைஞருக்கோ, பொறியாளருக்கோ, கலைஞருக்கோ, வடிவமைப்பாளருக்கோ, ஆசிரியருக்கோ அல்லது துல்லியமான அளவீடுகள் தேவைப்படும் எவருக்கும், இந்த பல் தேவை அளவுகோல்கள் சரியான தெரிவாகும். இவை சென்ரிமீற்றர் மற்றும் அங்குலம் ஆகிய அளவீடுகள் இரண்டையும் கொண்ட இரட்டைப் பக்க அளவீடுகளைக் கொண்டுள்ளன. நேர்கோடுகளை வரைவதற்கும், வெட்டுவதற்கு அல்லது தைப்பதற்காண மேற்பரப்புகளை அளவிடுவதற்கு போன்ற மேலும் பல தேவைகளுக்கும் ஏற்றதாக இவை அமைகின்றன.

Alumex தயாரிப்புகள் மூலம், நிலையான தரத்தையும் நிலைபேறான த்தன்மையிலும் தங்களது முதலீடுகளை வீட்டு உரிமையாளர்கள் மேற்கொள்கிறார்கள். சூழலுக்கு தாக்கத்தை கணிசமாகக் குறைக்கும் பொருட்களை மீள்சுழற்சி செய்யும் ஒரு வட்ட செயன்முறையை நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. Alumex இன் வித்தியாசத்தைக் கண்டறிந்து, உங்கள் சுற்றுப்புறத்தில் தாக்கங்களைக் குறைப்பதோடு, உங்கள் வாழ்விடத்தை மேம்படுத்தும் தயாரிப்புகள் மூலம் உங்கள் அன்றாட வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *