NCE ஏற்றுமதி விருதுகளில் பெருமைமிக்க தங்க விருதை வெற்றி பெற்ற Ocean Lanka

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சபையினால் (NCE) ஏற்பாடு செய்யப்பட்ட, 31ஆவது வருடமாக இடம்பெறம் ஏற்றுமதி விருதுகள்-2023 இல், ஏற்றுமதியாளர்களுக்கான விநியோகஸ்தர்கள் (Suppliers to Exporters Sector) பிரிவின் “Extra Large” எனும் பிரிவில், இலங்கையின் மிகப் பெரிய நெசவுத் துணி உற்பத்தியாளரான Ocean Lanka (Pvt) Ltd நிறுவனம் தங்க விருதைப் பெற்றுள்ளது. இந்த விருதானது, நிறுவனத்தின் சிறப்பான அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிப்பதோடு, நெசவுத் துணி உற்பத்தியில் சிறந்து விளங்குதல், குழுப்பணி மற்றும் புத்தாக்கத்தில் அதன் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.

ஏற்றுமதித் துறையில் சிறந்த செயற்பாடுகளை அங்கீகரிக்கும், இலங்கை வர்த்தகத்துறை நாட்காட்டியின் முதன்மையான நிகழ்வான NCE ஏற்றுமதி விருதுகள் (NCE Export Awards), அதன் 31ஆவது பதிப்பைக் கொண்டாடியது. இந்த விருதுகள், மேம்பட்ட உலகளாவிய பார்வையை ஏற்படுத்தும் நுழைவாயிலை அமைக்கவும், இலங்கை அரசாங்கத்தின் பொருளாதாரக் கருத்துக்களுடன் இணங்கி, வணிகத்தின் வெற்றியின் முக்கிய தூண்களான மக்கள், இலாபம், பூகோளம் ஆகியவற்றையும் வலியுறுத்துகின்றன. இந்த பாராட்டுகள் வெறும் கௌரவங்களுக்கு அப்பாற்பட்டு, ஏற்றுமதியாளர்கள் முக்கிய இடத்தை பெறவும் அவர்கள் பல்வேறு சர்வதேச சந்தைகளை அணுகவுமான வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன.

இந்த அங்கீகாரத்தைப் பற்றி தனது கருத்துகளை வெளிப்படுத்திய Ocean Lanka Pvt Ltd. நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான Dr. Austin Au, “NCE ஏற்றுமதி விருதுகள்-2023 இல் தங்க விருதைப் பெற்றமை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைவதோடு, மிகவும் பெருமையடைகிறோம். இந்த அங்கீகாரம் Ocean Lanka நிறுவனத்தின் முழு குழுவினரினதும் அர்ப்பணிப்பிற்கும் கடின உழைப்பிற்கும் ஒரு சான்றாகும். நெசவுத் துணி உற்பத்தியில் எல்லைகளைக் கடந்து தொடர்ந்து முன்னேறவும், சிறந்து விளங்கவுமான எமது நிலைபேறான தன்மைக்கான உறுதிப்பாட்டை பேணவும் இது எம்மை ஊக்குவிக்கிறது.” என்றார்.

Ocean Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் சிறந்த அர்ப்பணிப்பை NCE ஏற்றுமதி விருதுகள் அடையாளப்படுத்துவதோடு மாத்திரமன்றி, நிறுவனத்திற்கு எண்ணற்ற நன்மைகளையும் கொண்டு வருகின்றது. 31ஆவது வருடாந்த ஏற்றுமதி விருதுகளில் நிறுவனம் பெற்ற அங்கீகாரத்திற்கு மேலதிகமாக, Ocean Lanka (Pvt) Ltd ஆனது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளில் அது பெற்றுக் கொண்ட வெற்றியையும் இவ்வேளையில் அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. நிறுவனத்தின் ஒப்பற்ற செயற்றிறன் மற்றும் சாதனைகள் மிக உயர்ந்த மட்டத்தில் கௌரவிக்கப்பட்டுள்ளமையானது, அது ஏற்கனவே பெற்ற சாதனைப் பதிவுகளுக்கான கௌரவத்திற்கு மேலும் ஒரு படியை சேர்க்கிறது.

Ocean Lanka (Pvt) Ltd நிறுவனம், ஆடைத் துறையில் சிறந்து விளங்குவதைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான சான்றாக இந்தப் பாராட்டுகள் அமைகின்றன. தரம், புத்தாக்கம், நிலைபேறான நடைமுறைகள் ஆகியவற்றில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பானது, அதனை உலக சந்தையில் முன்னணியில் நீடிக்க வைத்துள்ளது.

Ocean Lanka (Pvt) Ltd நிறுவனமானது, இந்த மதிப்பிற்குரிய அங்கீகாரத்திற்காக இலங்கையின் தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, நாட்டின் ஏற்றுமதித் துறையின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு பங்களிப்பதில் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்படும் என்பதையும் தெரிவிக்கின்றது.

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *