SLIM Digis 2.3 விருதுகளில் பிரகாசித்த Fems மற்றும் Clogard Fresh இன் டிஜிட்டல் வெற்றியை கொண்டாடும் Hemas Consumer Brands

தமது புத்தாக்கமான டிஜிட்டல் சந்தைப்படுத்தல் உத்திகளுக்கு ஒரு சிறந்த சான்றாக, மதிப்புமிக்க SLIM Digis 2.3 விருதுகளில் Fems மற்றும் Clogard Fresh ஆகியன, முறையே மெரிட் விருது மற்றும் டிஜிட்டல் வெண்கல விருதுகளைப் பெற்றுள்ளன.

மாதவிடாய் சுகாதாரத்தை வலியுறுத்தும் Fems இன், “மகள்கள் தினம்” எனும் அதன் சிறந்த டிஜிட்டல் பிரசாரத்திற்காக, SLIM Digis இனால் Merit விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மகள்கள் தின கொண்டாட்டத்துடன் இணைந்தவாறு 2022 ஒக்டோபரில் இந்த பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதயத்தைத் தூண்டும் இந்த பிரசாரமானது, தந்தைக்கும் மகள்களுக்கும் இடையிலான இறுக்கமான உறவை திறமையாக காண்பித்ததன் மூலம், மாதவிடாய் ஆரோக்கியம் தொடர்பில் சமூகத்தில் காணப்படும் களங்கத்தை நீக்கும் வகையில் அமைந்திருந்தது.

இந்த பிரசாரமானது, ஒரு சக்தி வாய்ந்த செய்தியை சமூகத்திற்கு வழங்கியதோடு, பெண்களின் வாழ்க்கையில் ஆண்களின் முக்கிய பங்கை வலியுறுத்தியது. அத்துடன் மாதவிடாய் பற்றிய உரையாடல்களில் வெட்கப்பட வேண்டாம் என்பதை அவர்களிடையே ஊக்குவிக்கிறது. இதன் மூலம் மாதவிடாய் ஆரோக்கியம் பற்றிய சமூகத் தடைகளை முறியடிப்பதற்கும் மாதவிடாய் தொடர்பில் வெளிப்படையான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனும் Fems இன் அர்ப்பணிப்பு, இங்கு மீண்டும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது இவ்வர்த்தகநாமத்தின் முற்போக்கான அணுகுமுறையை பிரதிபலிக்கிறது.

வாய்ச் சுகாதார பராமரிப்பில் Clogard Fresh (க்ளோகார்ட் ப்ரெஷ்) முன்னணியில் திகழ்கின்றது. அதன் மாறுபட்ட ‘உங்களால் மறைக்க முடியாத புத்துணர்ச்சி’ எனும் பல்தரப்பட்ட தளத்தில் அமைந்த டிஜிட்டல் பிரசாரத்திற்காக, டிஜிட்டல் வெண்கல விருதை அது வென்றுள்ளது. புதிய தலைமுறை பார்வையாளர்களை மூலோபாய இலக்காகக் கொண்டு, Instagram, TikTok, WhatsApp, Facebook போன்ற பிரபல சமூக வலைத்தளங்களில் இப்பிரசாரம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அனைவரையும் ஈர்க்கும் வகையிலான, பல்வேறு கட்டத்தில் அமைந்த இந்த பிரசாரமானது, டீஸர்கள், சமூகவலைத்தள செல்வாக்கு மிக்கவர்கள் மூலமான சந்தைப்படுத்தல், கேள்விகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இடம்பெற்றது. இவை அனைத்தும் பார்வையாளர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பவையாகவும் அதன் மூலம் வர்த்தகநாமத்தின் சந்தைப் பங்கை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.

இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தினால் (SLIM) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த SLIM Digis 2.3 விருது விழாவானது, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் வெற்றியின் மாபெரும் கொண்டாட்டமாக அமைந்தது. பல்வேறு பிரிவுகளுக்கான தெரிவுகளுக்காக, 190 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்த இந்த நிகழ்வானது, தொழில்துறையின் மிகவும் புத்தாக்கமான மற்றும் பயனுள்ள சிறந்த டிஜிட்டல் பிரசாரங்களை அங்கீகரித்து கௌரவித்தது.

Fems மற்றும் Clogard Fresh ஆகிய இரண்டு வர்த்தகநாமங்களும் முன்மாதிரியான படைப்பாற்றல், மூலோபாய சிந்தனை, சந்தையில் சாதகமான தாக்கம் ஆகிய அம்சங்களை அதன் பிரசாரங்களில் வெளிப்படுத்தியுள்ளன. இவ்வர்த்தகநாமங்கள் SLIM Digis 2.3 இல் பெற்ற வெற்றியானது, சிறந்து விளங்க வேண்டும் என்பது தொடர்பான அவர்களது அர்ப்பணிப்பை மட்டுமல்லாது, டிஜிட்டல் துறையில் பல்வேறு வகையான பார்வையாளர்களுடன் இணைவதற்கான அவர்களின் திறனையும் காண்பிக்கிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *