Oceanswell – Greenpeace South Asia இணைந்துஇந்துசமுத்திரஆழ்கடல்களில்முதன்முறைமுன்னெடுத்தமூலையூட்டிகளின்ஆய்வு!

Greenpeace South Asia மற்றும் இலங்கை கடல்சார் பாதுகாப்பு அமைப்பான Oceanswell ஆகியன, Greenpeace நிறுவனத்தின் முதன்மையான Rainbow Warrior கப்பல் மூலம், இந்து சமுத்திரத்தின் ஆழ்கடலில், டொல்பின்கள், திமிங்கிலங்கள் உள்ளிட்ட முலையூட்டிகளின் (Cetacean) வெளிப்பாடு மற்றும் ஒலியியல் ஆய்வுகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து, கொழும்பு திரும்பியுள்ளன. புகழ்பெற்ற Cetacean ஆராய்ச்சியாளரும் Oceanswell நிறுவுனருமான Dr. Asha de Vos தலைமையில் Oceanswell ஐச் சேர்ந்த இலங்கையின் இளம் குழுவினருடன் இணைந்து இந்த விஞ்ஞான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

10 நாட்களில் மொத்தமாக 2,431 கி.மீ.களை உள்ளடக்கியதாக, இலங்கையின் கிழக்கு மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு தெற்கே உள்ள சர்வதேச கடல் பகுதியில் அமைந்துள்ள Ninety East Ridge இன் வடக்கு பகுதியில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டது. இந்த 10 நாட்களில் உயிரினங்களின் வெளிப்பாடு மற்றும் ஒலியியல் அம்சங்கள் மூலம் கடலின் தொலைதூரப் பகுதியில் முலையூட்டிகளின் பன்முகத்தன்மையை ஆராய்ந்து ஆவணப்படுத்துவதே இந்த ஆய்வின் இலக்காக இருந்தது. இந்த ஆய்வுக் குழு பகல்நேர காட்சி ஆய்வுகளை 24 மணி நேர ஒலியியல் ஆய்வுகளுடன் இணைந்தாக, அப்பகுதியில் காணப்படும் Cetacean வாழ்க்கையின் வரைபடத்தை உருவாக்கியது. Spinner, Spotted, Striped, Bottlenose ஆகிய குறைந்தபட்சம் 4 வகையான டொல்பின்கள் இங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, Oceanswell இன் ஒலியியல் தரவு பகுப்பாய்வானது தற்போது வரை நிலுவையில் உள்ளது.

இது பற்றி Dr Asha de Vos தெரிவிக்கையில், “இந்து சமுத்திரத்தின் குறித்த பகுதியில், பிரத்தியேகமான Cetacean காட்சி மற்றும் ஒலியியல் ஆய்வு நடத்தப்படுவது இதுவே முதன் முறையாகும். இந்து சமுத்திரத்தில் இந்த முலையூட்டிகள் தொடர்பில் இன்னும் ஒப்பீட்டளவில் சரியாக அறியப்படவில்லை என்பதால், இந்த இரண்டு வாரங்களில் நாம் சேகரித்த தரவுகள், நமது அறிவுத் தளத்திற்கு பெரிதும் பங்களிக்கும் என்பதோடு, எமது பெருங்கடலில் மிகவும் தொலைதூர பகுதிகள் எவ்வாறு அமையும் எனும் தோற்றத்தை இதன் மூலம் அறியலாம். நல்ல செய்தி என்னவென்றால், குறைந்தது நான்கு வகையான டொல்பின்களின் பல கூட்டங்களை நாம் பார்வையிட்டதோடு, அவற்றின் ஒலிகளை நாம் கேட்டோம். அத்துடன் பெரும்பாலான கூட்டங்களில், சிறிய குட்டிகளையும் நாம் அவதானித்தோம். இனப்பெருக்கத்திற்கு அல்லது குட்டிகளை ஈனுவதற்கு உகந்த இடமாக இந்த பகுதி காணப்படுகின்றது என்பதை இது காட்டுகிறது. எமது ஆராய்ச்சி மற்றும் உயிரின பாதுகாப்பு தொடர்பான முயற்சிகளில், நீண்ட கால அடிப்படையில் விசேட கவனம் செலுத்துவது எவ்வாறு என்பதைப் புரிந்துகொள்வதற்கு, இந்த இயற்கையின் ஆய்வு முக்கியமானதாகும். உள்நாட்டு கடல்களுக்கு அப்பால் ஆழ் கடல்களுக்குச் சென்று இந்த பயணத்தை வெற்றிகரமாக முடிக்க, Rainbow Warrior கப்பல் பெரிதும் உதவியுள்ளது. இந்து சமுத்திரத்தின் குறித்த பகுதியில் என்ன நடக்கிறது என்பதை உண்மையில் வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக, நீரில் நாம் செலவிட்ட காலத்தில் சேகரிக்கப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்ய ஆரம்பிக்கவுள்ளோம் என்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

Greenpeace South Asia பிரசார முகாமையாளர் Avinash Chanchal Kumar இங்கு கருத்துத் தெரிவிக்கையில், “இந்து சமுத்திரமானது, நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் சூழல் தொகுதிகளின் ஆச்சரியமூட்டும் உயிர்ப் பல்வகைத்தன்மையின் தாயகமாகும். இந்தக் கடலானது, மிக வேகமாக வெப்பமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, இங்கு வாழும் உயிர்ப் பல்வகைமையின் தன்மையைப் புரிந்துகொள்வது அவசியமாகும். இப்பிராந்தியத்திலுள்ள காலநிலையின் உண்மையான நிலைமைகளை நன்கு புரிந்துகொள்ள, அப்பகுதியைச் சேர்ந்த சமூகங்கள் மற்றும் நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றுவதை உறுதிசெய்வது, Greenpeace South Asia ஆகிய எமது முயற்சிகளில் ஒன்றாகும். இந்த ஆய்வில் சேகரிக்கப்பட்ட தரவுகள், இங்குள்ள கடல் உயிர்ப் பல்வகைமை பெருக்கத்தை நன்றாகப் புரிந்துகொள்ள உதவும் என்பதில் நாம் ஆர்வமாக உள்ளோம்.” என்றார்.

2019 ஆம் ஆண்டு முதல், உலகளாவிய ரீதியில் பல்வேறு கடல் பிராந்தியங்களில் பல முக்கிய முலையூட்டிகள் தொடர்பான ஆய்வுகளை Greenpeace முன்னெடுத்துள்ளது. இது குறிப்பாக, ஒலியியல் ஆய்வு முயற்சியில் 63,950 கிலோமீற்றர் பயணத்தை உள்ளடக்கியதாகும். இந்த ஆய்வுகளில், 1,181 குழுக்களின் ஒலியியலை அடையாளம் காண வழிவகுத்துள்ளன. இந்த முக்கிய கண்டுபிடிப்புகளில் 388 Sperm Whales குழுக்கள், 31 Beaked Whales குழுக்கள், 713 டொல்பின் குழுக்கள் உள்ளடங்குவதோடு, ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பகுதிகளில் கடல்வாழ் உயிரினங்களின் பரவல் மற்றும் பன்முகத்தன்மையை இது காட்டுகிறது.

2023 இல் அங்கீகரிக்கப்பட்ட ஐ.நா. உலகளாவிய சமுத்திர ஒப்பந்தமானது, சமுத்திரங்களில் பாரிய அளவிலான பாதுகாக்கப்பட்ட பகுதிகளை உருவாக்க அனுமதிக்கின்றது. இயற்கையான வேட்டையாடும் உயிரினங்களின் (பாரை, டொல்பின்கள், சுறாக்கள் போன்றவை) வெற்றிகரமான இருப்புக்கான வாய்ப்பை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட சமுத்திர சரணாலயங்கள், நீர் காபனிரொட்சைட் இருப்புகளைப் பாதுகாப்பதற்கான சிறந்த வாய்ப்பை ஏற்படுத்துகின்றன.

சமுத்திரங்களின் உயிர்ப் பல்வகைமையைப் பாதுகாக்கவும், காலநிலை மாற்ற பிரச்சினைகளை குறைக்கவு ம், அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை ஆதரிப்பதற்காகவும் உலகளாவிய சமுத்திர ஒப்பந்தத்தை அங்கீகரிக்குமாறு, பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் Greenpeace South Asia அழைப்பு விடுக்கின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *