உயர் ரக, நேர்த்தியான V30 மூலம் Portrait புகைப்பட எதிர்காலத்தை வெளிப்படுத்தும் vivo

உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான vivo, அதன் vivo V30 கையடக்கத் தொலைபேசியை இன்று வெளியிட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட Aura Light Portrait அம்சம் மற்றும் அதன் ஸ்டைலான V தொடரின் உயர் ரக வடிவமைப்புடன் அதன் சிறந்த உயர் வகை தயாரிப்பாக இது அமைகிறது. புதிய V30 ஆனது, உயர் ரக வடிவமைப்பைக் காண்பிக்கும் வகையில், ஒருங்கிணைந்த 120 Hz 3D வளைந்த திரையை கொண்டுள்ளதோடு, பயனர்களின் தனித்துவமான ஸ்டைல்களை பிரதிபலிக்கும் வகையில் சிறந்த புதிய வண்ண தெரிவுகளில் இது அமைக்கப்பட்டுள்ளது.

vivo Sri Lanka பிரதம நிறைவேற்று அதிகாரி Kevin Jiang இது பற்றித் தெரிவிக்கையில், “V தொடர் எப்பொழுதும் ஒளியியல் மற்றும் எளிமையான அழகியலுக்கு பெயர் பெற்றதாக காணப்படுகின்றது. இது vivo வின் புத்தாக்கமான கண்டுபிடிப்புகள் மூலம் Portrait புகைப்படம் எடுத்தல் மற்றும் வடிவமைப்பு ஆகிய இரண்டையும் கொண்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. சவாலான குறைந்த வெளிச்சம் கொண்ட இரவு நிலைகளிலும் கூட, பயனர்களுக்கு பிரமிக்க வைக்கும் Portrait புகைப்படங்களை எளிதாகப் பிடிக்க உதவும் சக்திவாய்ந்த கருவியை வழங்க நாம் Aura Light Portrait அம்சத்தை மேம்படுத்தியுள்ளோம்.” என்றார்.

vivo V30 ஆனது, அதன் மேம்பட்ட புகைப்படவியல் திறன்கள் மூலம், பயனர்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு பொன்னான தருணத்தையும் அழியாத வகையில் கைப்பற்றுவதற்கு உறுதியளிக்கிறது. ஒவ்வொரு Portrait இலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலான, V30 sports இன் மேம்படுத்தப்பட்ட வழக்கமான பிளாஷ் ஒளியிலும் பார்க்க 19 மடங்கு பெரியதாகவும் 50 மடங்கு மிருதுவானதாகவும் அமையும் மற்றும் ஒளி-வெளியேற்றும் பகுதியான Aura Light அம்சமும் வழங்குகிறது. அது மாத்திரமன்றி, Smart Color Temperature Adjustment அம்சமானது, முந்தைய மறுசீரமைப்புடன் ஒப்பிடுகையில், பொருள் காணப்படும் சூழலின் அடிப்படையில், நிறத்தின் அளவை புத்திசாலித்தனமாக அடையாளம் கண்டு சரிசெய்வதன் மூலம், பரந்த நிற அளவு வகைகளை வழங்குகிறது.  Aura Light பிரகாசத்தை சரிசெய்யும் வகையில், சென்ரிமீற்றர் அளவிலான துல்லியத்துடன் பொருளின் தூரத்தை நிகழ்நேரத்தில் கண்டறியக்கூடிய Distance-Sensitive Lighting அம்சத்தையும் இது ஆதரிக்கிறது. பொருள் மிக அருகே இருக்கும்போது, ​​ஒளி மிக மென்மையாகவும், சமநிலையாகவும் இருக்கும் என்பதோடு, பொருள் வெகு தொலைவில் இருக்கும்போது ஒளி பிரகாசமாக அமையும். இதன் மூலம் பயனர்கள் ஒரு நொடியில் சரியாக அமையும் Portrait புகைப்படங்களைப் பிடிக்க முடியும்.

அது தவிர, 50 MP AF Ultra Wide-Angle கெமரா, Auto Focus மற்றும் 119° wide angle ஆகிய அம்சங்களை v30 கொண்டுள்ளது. இது பயனர்கள் பரந்த பிரதேசங்களை அல்லது விசேட குழு புகைப்படத் தருணங்களைத் தவறவிடாமல் எளிதாக எடுக்க அனுமதிக்கிறது. Auto Focus இணைக்கப்பட்ட, பொதுவான 8 MP Wide-Angle கெமராவை விட 6.25 மடங்கு pixel எண்ணிக்கையைக் கொண்ட, V தொடரில் உள்ள முதலாவது 50 MP Ultra Wide-Angle கெமரா இதுவாகும். இதற்கு மேலதிகமாக, குழு புகைப்படங்களுக்கான AI Group Portrait புகைப்பட அம்சத்தையும் இந்த கெமரா கொண்டுள்ளது. இது Portrait புகைப்படத்தில் 30 பேர் வரை தெளிவாக இருப்பதை உறுதி செய்கிறது. VCS True Color பிரதான கெமராவுடன் V30 வருகிறது. இதிலுள்ள vivo-exclusive Camera-Bionic Spectrum (VCS) தொழில்நுட்பமானது, கெமராவின் பார்வையை மனிதக் கண்ணின் பார்வைக்கு ஒத்ததாக மாற்ற உதவுகிறது. இது முந்தைய தலைமுறையுடன் ஒப்பிடுகையில் புகைப்படத்தின் தெளிவை 25% ஆகவும், வண்ண மறுசீரமைப்பை 15% ஆகவும் அதிகரிக்கிறது.

அதன் ஈர்க்கக்கூடிய புகைப்படத் திறனுக்கு அப்பால், தனித்துவமான வெளிப்புற வடிவமைப்பு, ஸ்டைல் மற்றும் புத்தாக்கத்தை ஒருங்கிணைப்பதில் vivoவின் அர்ப்பணிப்பை vivo V30 கோடிட்டுக் காட்டுகிறது. கையில் பிடிப்பதற்கு வசதியான மேம்பட்ட வகையிலான 3D Curved Screen திரை வடிவமைப்பானது, நீண்ட நேரத்திற்கு V30 இனை வைத்திருக்க எளிதாக்குகிறது. இது உயர் காட்சியையை உறுதி செய்யும் வகையில், 1.5K Ultra Clear Sunlight AMOLED திரை மற்றும் 120 Hz refresh rate ஐயும் கொண்டுள்ளது. 2800 nits உச்ச உள்ளக திரை வெளிச்சம் மற்றும் 1200 nits உச்சபட்ச ஒட்டுமொத்த திரை வெளிச்சம் ஆகிய அம்சத்துடன், பிரகாசமான சூரிய ஒளியில் கூட உச்ச பார்வை அனுபவத்தை வழங்குகிறது. 7.45 mm தடிப்பம் கொண்ட V30 ஆனது, மிகச் சிறிய சட்டகத்தில் ஒரு பெரிய திறன் கொண்ட 5,000 mAh (TYP) மின்கலத்தை இணைக்கிறது. இதற்காக, தொழில்துறையில் முன்னணியில் உள்ள One-Piece Encapsulation தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு, மின்கல உறையை மெல்லியதாக மாற்றும் மீள்கட்டமைப்பும் இதில் உள்ளடங்குகின்றது.

இயற்கையால் ஈர்க்கப்பட்ட புதிய வண்ணம், மூலப்பொருள் மற்றும் இறுதி முடிவு (Color, Material, Finish – CMF) புத்தாக்க கண்டுபிடிப்புகளை V30 அறிமுகப்படுத்துகிறது. Waving Aqua பதிப்பானது ஒரு மெல்லிய கண்ணாடி மேற்பரப்பில் பச்சை சார்ந்த நீல நிறத்தைக் கொண்டுள்ளது. இது ஒரு Rippling Magnetic Particle செயன்முறையைப் பயன்படுத்தி, அழகிய நீர்ச் சிற்றலை வடிவத்தைக் கொண்டுள்ளது. பரவப்பட்ட பிசின் மூலம் சிறிய காந்தத் துகள்களை நுணுக்கமாக அமைத்து, மின்னும் நீர்ச் சிற்றலை விளைவை இது உருவாக்குகிறது. V30 ஆனது, நிறம் மாறும் Peacock Green நிறத்திலும் வருகிறது. இது புற ஊதா ஒளியில், செறிவான நீல நிறமாக மாறக்கூடியது. Noble Black வண்ணமானது Fluorite AG Glass மூலம் அமைக்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட Extended RAM technology மற்றும் Qualcomm Snapdragon® 7 Gen 3 ஆகியன இணைக்கப்பட்ட V30 ஆனது, ஒப்பிட முடியாத பல்பணி அனுபவத்திற்காக மிருதுவான மற்றும் தடையற்ற செயற்றிறனை வழங்குகிறது. மின்கல தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, அதிலுள்ள 80W Flash-charge மூலம், 5,000 mAh (TYP) மின்கலத்தை 48 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். தினசரி பயன்பாட்டிற்காக, மின்கல ஆயுளை V30 இரட்டிப்பாக்கியுள்ளது. 1600 சார்ஜிங் சுழற்சிகளுக்குப் பின்னரும், 80% இற்கு அதிக மின்கலத்தின் திறனை கொண்டிருப்பதன் மூலம், 4 வருட மின்கல ஆயுளை அது பேணுகிறது.

புத்தாக்க கண்டுபிடிப்புகளை நேர்த்தியாக ஒருங்கிணைத்து, ultra-slim வடிவமைப்பு, அற்புதமான வண்ண வகைகள், மற்றும் அதிநவீன அம்சங்களைக் கொண்டுள்ளதன் மூலம் ஒரு சிறந்த உயர் வகை கையடக்கத் தொலைபேசி ஆக vivo V30 விளங்குகின்றது. இது உண்மையாகவே முதல் பார்வையில் ஈர்க்கக்கூடிய அழகியலைக் கொண்டுள்ளது.

(END)

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *