Hemas Consumer Brands இன் சமூகப் பொறுப்புள்ள, பெண்களுக்கான சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமமான Fems, உள்நாட்டிலுள்ள மூன்று முக்கிய சுகாதார நப்கின் உற்பத்தியாளர்களில் ஒருவராக விளங்குவதில் பெருமை கொள்வதோடு, தற்போது இலங்கையில் உள்ள சுகாதார நப்கின்களுக்கான மொத்த தேவையில் 92% ஐ பூர்த்தி செய்கிறது. கணிசமான முதலீட்டுடன் நிறுவப்பட்ட தனது அதிநவீன உற்பத்தி தொழிற்சாலையில் சுகாதார நப்கின்களை தயாரிப்பதற்காக, உயர்தர பொருட்களை Fems இறக்குமதி செய்கிறது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் சுகாதார நப்கின்கள் குறைந்த வரிகளை கொண்டிருப்பதன் காரணமாக, எளிதாக அணுகக்கூடிய பெண்களுக்கான சுகாதார தயாரிப்புகளை Fems இனால் மிகவும் கட்டுப்படியான விலையில் வழங்க முடிகின்றது. இதன் மூலம் சமூகத்தில் சிறந்த தூய்மையையும், பொதுச் சுகாதாரத்தையும் மேம்படுத்த முடிகிறது.
2016 இல் முன்னெடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, சுமார் 50% ஆன குடும்பங்கள் மாதவிடாய் ஏழ்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, 15-47 வயதுக்குட்பட்ட 50% ஆன பெண்கள் 2016 ஆம் ஆண்டில் சுகாதார நப்கின்களுக்கு பணம் செலவிடுவதில்லை என கண்டறியப்பட்டது. அந்த வகையில் சுகாதார நப்கின்களுக்கு கட்டுப்படியான தன்மையை ஏற்படுத்தும் வகையில், ‘Fems AYA’ எனும் உயர்தர சுகாதார நப்கினை, மிகக் குறைந்த விலை கொண்டதாக கடந்த 2021 ஜூனில் Fems அறிமுகப்படுத்தியது.
இலங்கையில் சுகாதார நப்கின்களை இலகுவாக அணுகுவதற்கான வசதியை ஏற்படுத்துவது ஒரு அவசரப் பிரச்சினையாக உள்ளது என்பதைப் புரிந்துகொண்டு, இலங்கையில் சுகாதார நப்கின்களை தொடர்ச்சியாக பயன்படுத்தாத 70% பெண்களிடையே நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துவதிலான சவாலை எதிர்கொள்ளும் வர்த்தக நாமங்களில் Fems ஒன்றாகும். அப்போதிருந்து, மாதவிடாய் மற்றும் பெண்களின் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் அதே வேளையில், 300,000 குடும்பங்களுக்கு மாதவிடாய் தயாரிப்புகளை அணுகக்கூடியதாகவும், கட்டுப்படியான விலையில் வழங்குவதன் மூலம் எண்ணற்ற பெண்கள் மற்றும் சிறுமிகளை Fems வலுவூட்டுகின்றது. சிறு வயதிலிருந்தே சுகாதார நப்கின் பழக்கத்தை வளர்க்கும் வகையில், சுகாதார நப்கின் பெறும் ஒரு உபகரணத்தை வடிவமைத்து, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள், அலுவலகங்கள், கபேக்கள் உள்ளிட்ட சுமார் 75 இடங்களில் வைத்து பேணியது. அது மாத்திரமன்றி நாடு முழுவதும் 160 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளில், பெண்களின் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பட்டறைகளை Fems நடாத்தியதோடு, மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் தூய்மை தொடர்பில் 250,000 பெண்களுக்கு அறிவூட்டியுள்ளது.
சிறந்த மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் தூய்மை பற்றிய விழிப்புணர்வு ஆகியன, இலங்கையில் பெண்களின் சுகாதாரம் தொடர்பில் காணப்படும் முக்கிய பிரச்சினைகளாகும் என்பதோடு, மாதவிடாய் என்பது விலக்கப்பட்ட மற்றும் சமூக இழிவான ஒன்று எனும் ஆழமாக வேரூன்றிய விடயத்துடன் இணைந்ததாக காணப்படுகின்றது. மாதவிடாய் குறித்த தொன்றுதொட்டு வரும் களங்கத்தை மாற்றியமைத்து, பெண்களை மாதவிடாய் பற்றி பேசுவதற்கு வசதியாக அதில் ஆண்களின் பங்கையும் எடுத்துக் காட்டிய முதலாவது வர்த்தகநாமமாக Fems விளங்குகின்றது. மாதவிடாய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அது தொடர்பான உரையாடலை இயல்பாக்கவும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து, இலங்கையில் மாதவிடாய் இரத்தத்தை சிவப்பு நிறமாக, அதன் தொலைக்காட்சி விளம்பரங்களில் காட்டும் துணிச்சலான நடவடிக்கையை எடுத்த முதல் வர்த்தக நாமமாக Fems திகழ்கின்றது.
பெண்களுக்கான ஆற்றல்மிக்க எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான தனது அயராத முயற்சிகளின் உச்சக்கட்டமாக, அனைத்துப் பெண்களுக்கும் அவர்களின் வாழ்க்கையின் எந்தவொரு கட்டத்திலும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கடந்து உயர உதவவும், வலுவூட்டவும், அங்கீகாரமளிக்கவும், கடந்த 2023 மே மாதம் H.E.R அறக்கட்டளையை Fems நிறுவியது. இந்த அறக்கட்டளையானது, மாதவிடாய் வறுமையை தீர்க்க உதவ உறுதியளித்து, அவர்களது கல்வி மட்டத்தை உயர்த்துதல் மற்றும் பெண்களின் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துதல் மற்றும் எதிர்கால சந்ததியினரான பெண்கள் மற்றும் சிறுமிகளை, அவர்களின் முழுத் திறனை அடைய ஊக்கப்படுத்துகின்றது. மாதவிடாய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, பெண்களுக்கான சுகாதாரம் தொடர்பான பொருட்களை நாட்டிலுள்ள அனைத்துப் பெண்களுக்கும் கட்டுப்படியான விலையில் சுதந்திரமாகவும் கிடைக்கக்கூடிய வகையிலான எதிர்காலத்தை ஏற்படுத்த, சுகாதார அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்ற Fems எதிர்பார்க்கிறது.