KOICA தொழில் வழிகாட்டல் தள திட்டமானது, முக்கியத்துவவமான தொழில் மற்றும் நிறுவனத் தகவல், வேலைவாய்ப்பு ஆகியவற்றின் ஆதரவுடன் பயிற்சியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை வலுவூட்டுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து வருகிறது. பங்குதாரர்களைப் புதுப்பிப்பதற்கும், இடம்பெற்று வரும் முயற்சிகளை முன்னிலைப்படுத்துவதற்கும், உள்ளடக்க மேம்பாட்டுப் பட்டறை நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. KOICA தொழில் வழிகாட்டல் தளத்தின் முதன்மை குறிக்கோள், பயிற்சி பெறுபவர்களுக்கு அவர்களின் தொழில் பாதைகளை திறம்பட வழிநடத்த தேவையான கருவிகளை வழங்குவதாகும். விரிவான வேலை மற்றும் நிறுவனத் தகவல்களுக்கான அணுகல், அத்துடன் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வேலைவாய்ப்பு ஆதரவு உள்ளடக்கம் ஆகியன இதில் அடங்குகின்றன.
அது மாத்திரமன்றி, நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்குத் தகுதியான பணியாளர்களைத் தெரிவு செய்யும் வாய்ப்பை வழங்குவதன் மூலம், தொழில்துறை தேவைகளுக்கும் திறமையான நிபுணர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதை இந்த தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த உள்ளடக்க மேம்பாட்டு பட்டறை ஆனது, TVET பயிற்சியாளர்களுக்கு பெறுமதியானதாக இருக்கும் என்பதுடன், பயிற்சியாளர்களின் வேலை மற்றும் நிறுவனத் தகவல்களுக்கான பயிற்சியாளர்களின் தேவைகளை, வலுவான வேலைவாய்ப்பு ஆதரவு உள்ளடக்கத்துடன் நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்துகிறது.
இலங்கையில் வலுவான தொழில் வழிகாட்டல் தளம் இல்லாமை தொடர்பில் எடுத்துக் கூறிய, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி எம். சமந்தி சேனாநாயக்க, அத்தகைய முயற்சியின் மகத்தான மதிப்பை இங்கு சுட்டிக் காட்டினார். மேலும் மாணவர்களின் திறன்களை அடையாளம் காணவும், தகவலுடன் கூடிய தொழில் தெரிவுகளை மேற்கொள்ளவும் இத்தளத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். இதற்கு தனது முழு ஆதரவையும் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்த அவர், இந்த முயற்சியை வெற்றிகரமாகச் செயற்படுத்துவது தொடர்பில் அனைத்து பங்குதாரர்களுக்கும் இடையிலான கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
தொழிற்கல்வி மற்றும் தொழில் மேம்பாட்டு முயற்சிகளின் நலனுக்கான பெறுமதி வாய்ந்த ஒத்துழைப்பையும் நுண்ணறிவுகளை மேம்படுத்துவதற்கும், தற்போதுள்ள நிபுணர்களிடையே அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் இந்த ஒன்றுகூடலின் முக்கியத்துவத்தை, மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கே.ஏ. லலிததீர வலியுறுத்திக் கூறினார்.
இந்நிகழ்வின் இறுதியாக, KOICA இலங்கை அலுவலகத்தின் பிரதி நாட்டுப் பணிப்பாளர் கிம் யோங் வான், கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று உரையாற்றியதோடு, செயலமர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதோடு, எதிர்காலத்தில் அதன் தாக்கம் குறித்து தனது அபிலாஷைகளை வெளிப்படுத்தினார். தொழிற்கல்வியில் கூட்டு முயற்சிகளை முன்னெடுப்பதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை அவர் இங்கு சுட்டிக் காட்டினார்.
இந்த அற்புதமான திட்டத்தின் வளர்ச்சி தொடர்பான நிகழ்வில் பங்கெடுத்த மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவின் மதிப்பிற்குரிய வல்லுநர்கள் மற்றும் திறன் மேம்பாட்டு மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆகியோர், NVQ நிலை 5 முதல் 7 வரையிலான வரம்பிற்குள் செயற்படும் தொழிற்பயிற்சியாளர்களுக்குத் தனித்தனியாக வடிவமைக்கப்பட்ட தொழில் வழிகாட்டல் மற்றும் வேலைவாய்ப்புத் தகவல்களை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த முயற்சியானது, இவ்வாறு இடம்பெறுவது முதன் முறை என பாராட்டினர்.
இந்த நிகழ்வானது, KOICA தொழில் வழிகாட்டல் தளத்தின் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிப்பதோடு, வெற்றிகரமான தொழில் முன்னேற்றத்திற்குத் தேவையான அறிவு மற்றும் வளங்களைக் கொண்டு, தனிநபர்களை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை அது எடுத்துக் காட்டுகிறது.