உங்கள் எதிர்காலத்திற்காக முதலீடு செய்யுங்கள்: ஹோகந்தரவில் மலிவு விலையில் ஆடம்பரத்தை வழங்கும் Groundworth St. Katherine Gardens

முன்னணி ரியல் எஸ்டேட் மற்றும் முதலீட்டு நிறுவனமான Groundworth Partners, ஹோகந்தரவில் தனது பெறுமதி வாய்ந்த ரியல் எஸ்டேட் திட்டமான Groundworth St. Katherine Gardens திட்டத்தை அண்மையில் ஆரம்பித்து வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பிரத்தியேக திட்டமானது, புகழ்பெற்ற St. Katherine சமூகத்தில் மலிவு விலையிலான காணியை சொந்தமாக்குவதற்கான, ஒப்பற்ற வாய்ப்பை வழங்குகிறது. தற்போது இதில் எஞ்சியுள்ள 18 காணிகளில் ஒரு பேர்ச் ஆனது, ரூ. 1.595 மில்லியனில் ஆரம்பமாகின்றது.

இது பற்றி Groundworth Partners நிறுவனத்தின் இணை நிறுவுனரும் அதன் நிர்வாகப் பணிப்பாளருமான கசுன் அந்த்ரஹென்னத்தி தெரிவிக்கையில், “எமது குழுவானது, காணிகளுக்கு சிறந்த மேம்பாட்டை மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல், ரியல் எஸ்டேட் பிரிவில் அதற்கு நீடித்த பெறுமதியை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளது. உங்கள் முதலீடு செழித்தோங்குவதை உறுதி செய்வதற்காக, உரிய செயன்முறைகளின் அடிப்படையில் நாம் காணிகளைத் தெரிவு செய்கிறோம். அமைவிடம் என்பது முக்கியமானது என்பதால், வலுவான வளர்ச்சியுடன் சாத்தியமான வகையில் நீங்கள் விரும்பக்கூடிய இடத்தில் உங்கள் அமைவிடத்தை அமைப்பது மிகவும் முக்கியமானதாகும். இலகுவாக சென்றடைவது அத்தியாவசியமான ஒன்று என்பதால், அமைவிடமானது குறைந்தபட்சம் 20 அடி அகலமான வீதியோடு இணைந்திருப்பதற்கு நாம் முன்னுரிமை அளிக்கிறோம். அனைத்து விடயங்களுக்கும் வசதியான வாழ்க்கை மிக அத்தியாவசியமான ஒன்று என்பதால், அனைத்து விதமான வசதிகள் மற்றும் தேவைகளுக்கும் மிக அருகில் காணப்படும் காணியை நாம் தேடித் தெரிவு செய்கிறோம். தெளிவான காணி உறுதியானது, உறுதிப்படுத்தப்பட்ட காணி உரிமையுடன் இலகுவான முதலீட்டு செயற்பாடுகளுக்கு உத்தரவாதமளிக்கும். காலப் போக்குடன் பெறுமதி அதிகரிப்புக்கான சாத்தியமுள்ள காணிகளைத் தெரிவு செய்வது சவாலானதாக இருந்த போதிலும், எமது குழு மீது எனக்கு அபரிமிதமான நம்பிக்கை உள்ளது. கொழும்பில் பல புதிய திட்டங்களையும் எதிர்பார்ப்புகளைக் கடந்த விடயங்களையும் முன்னெடுக்க நாம் ஆர்வமாக உள்ளோம்.” என்றார்.

இலக்கம் 85, ஹொரஹேன வீதி, ஹோகந்தர கிழக்கில் அமைந்துள்ள Groundworth St. Katherine Gardens திட்டமானது, ஒரு முக்கிய அமைவிடத்தில் அமைந்துள்ளது. அத்துருகிரிய அதிவேக நெடுஞ்சாலை இடைமாறலில் இருந்தும் ஹோகந்தர நகரத்திலிருந்தும் 3 நிமிட தூரத்தில் இந்த இடத்தை அடைய முடியும். ஒரு மையப் புள்ளியாக விளங்கும் இந்த இடத்திலிருந்து தலவத்துகொடைக்கு 5 நிமிடங்களிலும், கொட்டாவ, மாலபே, மஹரகம ஆகிய இடங்களுக்கு 10 நிமிடங்களிலும் இலகுவாக செல்ல முடியும். நீர், மின்சாரம், வடிகால் மற்றும் விசாலமான 20 அடி அகலமான பிரதான வீதி போன்ற அத்தியாவசிய வசதிகள் உள்ளிட்ட, அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன், சிறந்த வாழ்விடத்திற்கான வசதிக்கு இந்த திட்டம் முன்னுரிமை அளிக்கிறது.

Groundworth Partners நிறுவனமானது, தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முதலீட்டுப் பெறுமதியை வழங்கி, உரிய காணிச் செயன்முறைகளைப் பேணுவதில் புகழ்பெற்று விளங்கும் ஒரு நிறுவனமாக திகழ்கின்றது. அதே போன்றே St. Katherine Gardens ரியல் எஸ்டேட்டும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதால், உயர்தர உட்கட்டமைப்பு மற்றும் உள்ளூராட்சி சபை விதிமுறைகளுக்கு அமைவான கட்டங்களை நிர்மாணிக்கக் கூடிய காணிகளை அது வழங்குகின்றது.

முதலீட்டுத் திறனைத் தாண்டி, பாதுகாப்பான மற்றும் சிறந்த ஒரே எண்ணம் கொண்ட சமூகத்தை உருவாக்க Groundworth St. Katherine Gardens தன்னை அர்ப்பணித்துள்ளது. சிறப்பாக நிர்மாணிக்கப்பட்ட கார்பட் இடப்பட்ட வீதிகள், முறையான வடிகால் அமைப்புகளுடன் ஒரு சிறந்த சமூகத்துடன் இணைந்த இந்த அமைவிடமானது, குடியிருப்பாளர்களுக்கு அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதியளிக்கிறது.

தற்போது 18 காணிகள் மாத்திரமே மீதமுள்ள நிலையில், Grounworth St. Katherine Gardens இல் உங்களுக்கான ஒரு இடத்தை பெறுவதற்கான வாய்ப்பைத் தவறவிடாதீர்கள். இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு www.groundworthpartners.com/property/st-katherine-gardens-hokandara/ இணையத்தளத்தை பார்வையிடுங்கள் அல்லது 0777 450 050 எனும் இலக்கத்தை தொடர்புகொண்டு, உங்களுக்கான இடத்தை ஆராய்ந்து, இந்த செழிப்பான சமூகத்துடன் இணைந்து உங்கள் எதிர்காலத்தை திட்டமிடுங்கள்.

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *