உங்கள் வடிவமைப்பு திறனை வெளிப்படுத்துங்கள்: தனிப்பயனாக்கக்கூடிய பல்வேறு வண்ணங்களில் Griffin Deco Board உற்பத்தியை மீள அறிமுகம் செய்த Anton

1958 ஆம் ஆண்டிலிருந்து செயற்படும், 100% முழுமையாக இலங்கைக்குச் சொந்தமான வீடுகளுக்கான தீர்வுகளை தயாரித்து வழங்கும் Anton நிறுவனம், உள்ளூர் PVC மற்றும் குழாய்த் தொழில் துறையில் முன்னோடி நிறுவனமும், St. Anthony’s Industries Group (Pvt) Ltd நிறுவனத்தின் ஒரு அங்கமுமாகும். நிறுவனம் தனது பிரபலமான Griffin Deco Boards உற்பத்தியை மீண்டும் ஆரம்பித்துள்ளதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இவை, அழகுக்காகவும், செயற்பாட்டுக்குரிய இடங்களை உருவாக்குவதற்காகவும் இலங்கையர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட சூழலுக்கு உகந்த தயாரிப்புகளாகும்.

இதன் மீள் அறிமுகம் தொடர்பில், St. Anthony’s Industries நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரியான லஹிரு ஜயசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “Griffin Deco Board தயாரிப்புகளை இலங்கைச் சந்தைக்கு மீண்டும் அறிமுகப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். Griffin Deco Board தயாரிப்பானது, பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவுகின்ற, நிலைபேறான, பயனர் நட்பு மிக்க, செலவு குறைந்த தீர்வை வழங்குகின்ற, கட்டுமானங்களுக்கு நிறைவை வழங்குகின்ற ஒரு தயாரிப்பாகும். சூழல் பாதிப்புகளைக் குறைக்கும் அதே வேளையில், அழகான மற்றும் செயற்பாட்டுக்குரிய இடங்களை உருவாக்குவதற்காக Griffin இலங்கையர்களை வலுவூட்டும் என நாம் நம்புகிறோம்.” என்றார்.

Griffin Deco Boards தயாரிப்பானது, சூழல் பொறுப்பு மற்றும் பயனர் நன்மைகள் ஆகிய விடயங்களுக்கும் முன்னுரிமை அளித்து, பாரம்பரிய சுவர் பாவுகைகளுக்கு (wall tiles) பதிலான ஒரு சிறந்த மாற்றீட்டுப் பொருளாக விளங்குகிறது. இந்த பாரம் குறைந்த PVC இனால் ஆக்கப்பட்ட கீலங்கள், celuka செயன்முறையைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு, ஒப்பிட முடியாத அம்சங்களைக் கொண்டதாக விளங்குகின்றன. Griffin ஆனது, நிலைபேறான தன்மையை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதோடு, பாரம்பரிய மூலப்பொருட்களுடன் ஒப்பிடும்போது, இது சூழல் தாக்கத்தை குறைக்கிறது. பூச்சிகளின் பாதிப்பற்ற, நீரை எதிர்க்கும் தன்மை கொண்ட, தீ ஏற்படுவதில் V-0 மதிப்பீட்டைக் கொண்ட Griffin Deco Board தயாரிப்புகள் நீண்ட கால செயற்திறனை உறுதி செய்கிறன. பாரம் குறைந்த Griffin Deco Board, சுவரை பூசுவதற்கான தேவையை இல்லாமல் செய்வதோடு, நிறுவுதல் மற்றும் சுத்தம் செய்வதற்கும் இலகுவானதாகும். பணத்திற்கான சிறந்த பெறுமதியை வழங்கி, சுவருக்கு சிறந்த பாதுகாப்பை Griffin Deco Boards உற்பத்திகள் வழங்குவதோடு, கட்டுமான செலவுகளையும் குறைக்கிறது. மேலும், Griffin Deco Boards தனிப்பயனாக்கக்கூடிய இயற்கையுடன் ஒன்றியதாக “Customization Beyond Its Limits” (தனிப்பயனாக்கத்தின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது) எனும் அதன் தத்துவத்தை உறுதி செய்கிறது. மீள் அறிமுகம் செய்யப்பட்ட Griffin Deco Board தயாரிப்புகள் பல்வேறு வடிவமைப்புத் தேவைகளுக்கு ஏற்றவாறான, Walnut Brown, Oak, Silver Snow, Palm, Veneto Marble, Ivory Sand உள்ளிட்ட அற்புதமான நிறங்களில் வருகின்றன.

இந்த பல் பயன்பாட்டு கீலங்கள் வெளிப்புற விளம்பரப்படுத்தல்கள், மரப் பொருட்களின் அழகுபடுத்தல், உள்ளக வடிவமைப்பு, கட்டுமானம் உள்ளிட்ட பரந்த அளவிலான பயன்பாடுகளுக்கு உதகின்றன. Griffin Deco Boards தயாரிப்புகள் உங்கள் அடுத்த திட்டத்திற்கான சரியான தீர்வை வழங்கும். Griffin Boards பல்வேறு நுட்பமான செயற்பாடுகளுக்கு ஏற்றதாக விளங்குகின்றன. குறிப்பாக, பொதுவாக நாம் பயன்படுத்தும் கருவிகளைப் பயன்படுத்தி தங்குதடையின்றி வெட்டவும், துளையிடவும், நிறப்பூச்சுகளை பூசவும், இணைப்புகளை உள்ளீடு செய்யவும் அனுமதிக்கிறது.

Griffin Deco Board இன் வித்தியாசத்தின் அனுபவத்தை பெற, அனைத்து இலங்கையர்களுக்கும் St. Anthony’s Industries Group (Pvt) Ltd அழைப்பு விடுக்கிறது. உங்கள் அடுத்த நிர்மாணத் திட்டத்தை Griffin மூலம் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பில் மேலதிக விபரங்களை அறிய, அங்கீகரிக்கப்பட்ட முகவரை நாடவும் அல்லது Anton நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளவும்.

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *