தீவா கரத்திற்கு வலிமை மகளிர் தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டம் ஆனது, Women in Management (WIM) மற்றும் Hemas Consumer Brands நிறுவனத்தின் முதன்மையான சலவை பராமரிப்பு வர்த்தகநாமமான தீவாவின் கூட்டு முயற்சியாகும். 150 இற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் 6ஆவது பிராந்திய நிகழ்வானது 2024 ஒக்டோபர் 07ஆம் திகதி அநுராதபுரத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. நுவரகம் பலாத்த மத்திய பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இது தொடர்பான முழு நாள் கருத்தரங்கானது, தொழில் முயற்சியாளர்கள் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான அறிவு, திறன் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றுடன் பெண் தொழில்முனைவோரை தயார்படுத்தியது.
வடக்கு, வடமேல், தென், ஊவா, மத்திய மாகாணங்களை உள்ளடக்கியவாறு இலங்கை முழுவதிலும் உள்ள பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு வலுவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்களின் வெற்றிகரமான தொடராக இடம்பெற்ற இந்நிகழ்வானது, மற்றுமொரு மைல்கல்லாக அமைந்தது. இந்த கருத்தரங்கின் போது, பங்கேற்பாளர்கள் வணிகப் பதிவு, நிதி முகாமைத்துவம், வாடிக்கையாளர் பராமரிப்பு, விலை வியூகங்கள், வர்த்தகநாம பிரபலப்படுத்தல் மற்றும் பொதியிடல் போன்ற அத்தியாவசிய தொழில் முனைவோர் திறன்கள் தொடர்பான அறிவைப் பெற்றனர். ஒன்லைன் சந்தைகளிலும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, மிகவும் போட்டி நிறைந்த டிஜிட்டல் துறையில் சிறு வணிகங்களை மேம்படுத்துவதிலும் பெறுமதி வாய்ந்த நுண்ணறிவுகளை இது வழங்கியது.
Hemas Consumer Brands நிறுவனத்தின் வீட்டு பராமரிப்பு பிரிவின் முகாமையாளர் நாமல் பெனாண்டோ, இது தொடர்பில் தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டபோது, “தனது வர்த்தகநாமத்தின் நோக்கத்திற்கு உண்மையாக இருந்து, ‘தீவா கரத்திற்கு வலிமை பெண்கள் தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டம்’ மூலம் நாடளாவிய ரீதியில் உள்ள பெண் தொழில்முயற்சியாளர்களை வலுவூட்டுவதில் முக்கிய பங்காற்றியுள்ளது. இத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளதோடு, எதிர்காலத்தில் மேலும் அதிகமான பங்கேற்பாளர்கள் இத்திட்டத்தில் இணைவார்கள் என நம்புகிறோம். இந்தத் திட்டமானது, பங்கேற்பாளர்களுக்கு மாத்திரமல்லாது, அவர்களின் குடும்பங்கள், உள்ளூர் சமூகங்கள் மற்றும் அந்தந்த மாவட்டத்தின் பொருளாதாரத்தை தன்னிறைவு அடையச் செய்வதற்கு பெரிதும் உதவும் என நாம் நம்புகிறோம்,” என்றார்.
தீவா கரத்திற்கு வலிமை திட்டமானது, தொடர்ச்சியாக வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கும் அதனை மேம்படுத்துவதற்கும் பெண்களை உற்பத்தியாளர்கள் எனும் நிலையிலிருந்து வெற்றிகரமான வணிக உரிமையாளர்களாக உருமாற்றவும் உதவுகிறது. ஏற்கனவே இடம்பெற்ற நிகழ்வுகளைப் போலவே, இந்த நிகழ்ச்சியும் நிலைபேறான வணிகங்களை உருவாக்குவதற்குத் தேவையான ஆதாரங்களை பங்கேற்பாளர்களுக்கு வழங்கியதோடு, பொருளாதார நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் அவர்களது எதிர்கால நிதி நிலைமையை கட்டுப்படுத்துகிறது.
தங்கொட்டுவ, யாழ்ப்பாணம், காலி, வெலிமடை, மாத்தளை போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளில் 275 இற்கும் மேற்பட்ட பெண் தொழில்முனைவோர் வலுவூட்டப்பட்ட நிலையில், அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சித் திட்டமானது, மற்றுமொரு வெற்றிகரமான மைல்கல்லாக அமைந்தது. ‘தொட்டிலை ஆட்டும் கைகளே உலகை ஆளுகிறது’ எனும் முதுமொழியில் இருந்து உருவான இந்தத் திட்டம் தொடர்பான தீவாவின் அர்ப்பணிப்பானது, பெண் தொழில்முனைவோராக தமது முழுத் திறனை அடைய பெண்களை வலுவூட்டுவதற்கு உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள் மற்றும் WIM போன்ற அமைப்புகளுடனான அதன் கூட்டாண்மை மூலம் மேலும் வலுவடைகிறது.
தீவா கரத்திற்கு வலிமை தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் வெற்றியானது, நாடு முழுவதும் உள்ள பெண்கள் மத்தியில் தொழில் முனைவோர் மனப்பான்மையை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுகிறது.
Hemas Consumer Brands பற்றி
60 வருடங்களாக வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளின் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands, குடும்பங்கள் சிறந்த நாளைய தினத்தை அனுபவிப்பதற்கு வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகிறது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட முன்மொழிவுகளில் புத்தாக்கத்தை ஏற்படுத்தவும், மேம்படுத்தவும் உள்ளூர் தகவல் தரவுகளைப் பயன்படுத்துவதில் பெருமை கொள்கிறது. இது இலங்கையில் நம்பகமான வீட்டுப் பெயர் வர்த்தக நாமமாக தன்னை நிறுவுதல் எனும் அவர்களது நோக்கத்தை அடைய உதவியுள்ளது. இலங்கையின் நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் அதன் தயாரிப்புகளில் உயர் தரம் மற்றும் பெறுமதியை வழங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் உந்தப்பட்டுள்ள Hemas Consumer Brands, நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக வளப்படுத்துகிறது.