Lanka Hospitals இல் ZEISS KINEVO 900 சாதனத்தை நிறுவிய DIMO Healthcare

இலங்கையிலுள்ள முன்னணி பல்துறை கூட்டு நிறுவனமான DIMO நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவும் ZEISS வர்த்தகநாமத்திற்கான இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட முகவருமான DIMO Healthcare நிறுவனம், அண்மையில் Lanka hospitals மருத்துவமனையில் ZEISS KINEVO 900 சாதனத்தை நிறுவியது.

துல்லியம் மற்றும் செயல்திறன் மூலம் மருத்துவமனையின் அறுவை சிகிச்சைத் துறை சேவைகளை மேலும் மேம்படுத்துவதே ZEISS KINEVO 900 சாதன நிறுவலின் முதன்மையான நோக்கமாகும். உயர்தர புகைப்படங்களை வழங்குவதன் மூலம், இந்த தனித்துவமான ZEISS KINEVO 900 சாதனமானது, தெளிவான முப்பரிமாண புகைப்படங்களை காண்பிப்பதோடு, அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் அதன் ஆதரவுக் குழுக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி தெளிவான புரிதலைப் பெறவும் துல்லியமாக அறுவை சிகிச்சை செய்யவும் உதவுகிறது.

இது தொடர்பில் Lanka Hospitals மருத்துவமனையின் சத்திரசிகிச்சை பிரிவின் தலைவர் வைத்தியர் தேவிகா கஸ்தூரியாராச்சி கருத்துத் தெரிவிக்கையில் , “ZEISS KINEVO 900 சாதனத்தின் நிறுவலானது, நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறையின் வசதிகளை மேம்படுத்த உதவும். இந்த புதிய தொழில்நுட்பமானது, எமது அறுவை சிகிச்சைக் குழுக்களுக்கு மிகவும் நுட்பமான செயற்பாடுகளை கூட துல்லியமாக மேற்கொள்ள உதவும் என நாம் எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் இலங்கையில் மருத்துவ பராமரிப்பு சேவை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை தரத்தை மேம்படுத்துவது தொடர்பான எமது அர்ப்பணிப்பு தெளிவாகக் காட்டப்படுகிறது. மருத்துவ தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள DIMO Healthcare மூலம் இந்த இலக்குகளை அடைய முடிந்தமை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார்.

PointLock எனப்படும் விசேட ரோபோ கட்டுப்பாட்டுத் தொகுதியைக் கொண்டுள்ள ZEISS KINEVO 900 சாதனத்தின் புத்தாக்கமான தொழில்நுட்பத்தின் மூலம், அதன் நுணுக்குக்காட்டி செயற்படும் போது கூட ஒரு குறிப்பிட்ட பகுதியில் கவனத்தை செலுத்த வாய்ப்பை வழங்குகிறது. அத்துடன், சிக்கலான அறுவை சிகிச்சை முறைகளில், பிழைகள் ஏற்படுவதை குறைப்பதோடு, அதிக தெளிவுத் தன்மையை உறுதி செய்கிறது.

ZEISS KINEVO 900 சாதனத்தின் டிஜிட்டல் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் துல்லியமான 4K கெமராவானது, வழக்கமான அறுவை சிகிச்சை நுணுக்குக்காட்டி கருவிகளுக்கு அப்பாற்பட்ட அனுபவத்தை வழங்குகிறது. அத்துடன், சத்திரசிகிச்சையின் போது சரியான முடிவுகளை எடுப்பதற்கு தேவையான பல்வேறு முக்கிய தகவல்களை இதன் மூலம் பெற முடியும் என்பதோடு, அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்ளவும், நோயாளிகள் விரைவில் குணமடையவும் இது பெரும் பங்கை வகிக்கிறது.

DIMO நிறுவனத்தின் பணிப்பாளரும் DIMO Healthcare பிரிவின் பொறுப்பாளருமான விஜித் புஷ்பவெல இது தொடர்பில் தனது கருத்தைத் தெரிவிக்கையில், “Lanka Hospitals மருத்துவமனையில் ZEISS KINEVO 900 சாதனத்தை நிறுவியுள்ளமையானது DIMO Healthcare இன் தனித்துவமான மைல்கற்களில் ஒன்று என குறிப்பிடலாம். புத்தாக்கமான சுகாதாரத் தீர்வுகளை அறிமுகப்படுத்துவதில் இப்பிரிவு முன்னணியில் உள்ளது. அவ்வாறே, ஆரோக்கியமான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக இலங்கையின் சுகாதாரத் துறைக்கு பங்களிப்பை வழங்குவதன் மூலம் எமது சமூகங்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை வலுப்படுத்த நாம் உறுதிபூண்டுள்ளோம்.” என்றார்.

இலங்கையின் மருத்துவத் துறைக்கு தொடர்ச்சியாக புதிய தொழில்நுட்பத்தை வழங்கி வரும் DIMO Healthcare பிரிவானது, அனைத்து மருத்துவ உபகரணங்களுக்கும் விரிவான விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை வழங்குவதோடு, உபகரணங்களின் சிறந்த செயற்பாட்டை உறுதி செய்யும் வகையிலும், தடையற்ற சுகாதார சேவையை முன்னெடுப்பதற்கும் அத்தியாவசியமான உதிரிப் பாகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 7 நாட்களும் 24 மணித்தியால ஆதரவை வழங்குகிறது.

ZEISS KINEVO 900 போன்ற அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை வழங்குவதன் மூலமும், ஒப்பிட முடியாத விற்பனைக்குப் பிந்தைய ஆதரவை வழங்குவதன் மூலமும், இலங்கையின் சுகாதாரத் துறையை வலுவூட்டி, நோயாளிகளுக்கு பல்வேறு வசதிகளை DIMO Healthcare வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *