முதலீட்டில் பெரும் புரட்சிக்கு வழிவகுக்கும் வகையில் First Capital அறிமுகப்படுத்தும் Money Plus Fund

First Capital Holdings இன் ஒரு துணை நிறுவனமான First Capital Asset Management Limited ஆனது “First Capital Money Plus Fund” என்ற புத்தாக்கமான அலகு நம்பிக்கை நிதியை அறிமுகப்படுத்தி, முதலீட்டுக்கான வாய்ப்புக்களை மிகவும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லவுள்ளது. இப்புத்தாக்கமான முதலீட்டுத் தீர்வானது கவர்ச்சிகரமான வருமானத்தை ஈட்டுவதற்கான ஒப்பற்ற வாய்ப்பு மற்றும் தமது நிதிக்கு உடனடி அணுகலுக்கான வசதி என இரு தரப்பிலும் மிகச் சிறந்த தெரிவை முதலீட்டாளர்களுக்கு வழங்குகின்றது.      

First Capital Money Plus Fund ஆனது நிலையான வைப்புக்களுடன் ஒப்பிடுகையில் சிறந்த நன்மைகளை முதலீட்டாளர்களுக்கு வழங்குகின்றது. பாரம்பரியமான முதலீட்டுத் தெரிவுகளுக்கு மாறாக, ஹட்டன் நஷனல் வங்கியால் வழங்கப்பட்டுள்ள டெபிட் அட்டை மூலமாக பணத்தேவையின் போது உடனடியாக பணத்தைப் பெற்றுக்கொள்ள இந்நிதி இடமளிக்கின்றது. இவ்வசதியானது நாடளாவியரீதியிலுள்ள ஏடிஎம் மையங்களில் பணத்தை மீளப்பெறவும், இலகுவாக இணைய வழியில் கொடுப்பனவுகளை மேற்கொள்ளவும் முதலீட்டாளர்களுக்கு இடமளிக்கின்றது. 

இந்த புத்தாக்கம் கொண்ட நிதியின் பன்முக ஆற்றலானது, பல்வேறுபட்ட நிதி நோக்கங்களுக்கு உகந்ததொரு தெரிவாக இதனை மாற்றியுள்ளது. பெரும்பாலும் குறைந்தளவில் வருமானத்தை ஈட்டித்தருகின்ற பாரம்பரியமான சேமிப்புத் தீர்வுகளைப் போலல்லாது, First Capital Money Plus Fund ஆனது தினசரி வருமான கணிப்பீடுகள் மற்றும் வருமானத்தின் மீது வருமானம் ஈட்டும் அம்சங்கள் ஆகியவற்றுடன் வருமானத்தை உச்சப்படுத்தி, தமது செல்வத்தை திறன்மிக்க வழியில் பெருக்கிக்கொள்ள விரும்புகின்றவர்களை ஈர்க்கின்ற தெரிவாக மாறியுள்ளது. சம்பள வருமானத்தை உச்சப்படுத்திக் கொள்ளவோ, அவசர தேவைக்கான நிதியொன்றைக் கட்டியெழுப்பவோ, எதிர்பார்க்கப்படுகின்ற எதிர்காலச் செலவுகளுக்கான நிதியை தற்போதே ஒதுக்கிக் கொள்ளவோ அல்லது முதலீட்டு இலக்குகளை விரைவுபடுத்திக் கொள்ளவோ என எந்த நோக்கத்திற்கும் நெகிழ்வுடனான மற்றும் வெகுமதியளிக்கும் தீர்வை First Capital Money Plus Fund வழங்குகின்றது.             

மேலும், ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமையளித்து, இந்நிதியானது திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் அடங்கலாக, அரசாங்க பிணையங்கள் மீது பிரதானமாக கவனம் செலுத்தி, பல்வகைப்பட்ட துறைகள் மீது முதலீட்டை மேற்கொள்கின்றது. இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் ஒழுங்குமுறைகள் அடங்கலாக, கடுமையான ஏற்பாட்டு நடவடிக்கைகளின் கீழ் முதலீடுகள் பாதுகாக்கப்படுவதுடன், இதன் அறங்காவலர் என்ற வகையில் ஹட்டன் நஷனல் வங்கியின் சுயாதீனமான மேற்பார்வை மற்றும் First Capital நிறுவனத்தின் அனுபவம் வாய்ந்த நிதி முகாமையாளர்களின் பாண்டித்தியம் ஆகியவற்றின் பக்கபலமும் உள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், முதலீட்டாளர்களுக்கு மன நிம்மதியளித்து, தமது முதலீடு தொடர்பான தன்னம்பிக்கைக்கும் இடமளிக்கின்றன.   

First Capital Asset Management நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கவின் கருணாமூர்த்தி அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணம், மிகவும் பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் பல்கிப் பெருக வேண்டிய நிலையில், வெறுமனே பாரம்பரிய கணக்கில் கிடப்பதையிட்டு நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா?திட்டமிட்ட செலவுகளானாலும் அல்லது அவசர தேவைகளானாலும் தம்மிடமுள்ள பணத்தைக் கொண்டு மகத்தான அளவில் வருமானத்தை ஈட்டிக்கொள்கின்ற வாய்ப்பினை சேமிப்பில் ஈடுபட்டுள்ள பலரும் தவற விட்டு விடுகின்றனர். First Capital Money Plus Fund ஆனது வளர்ச்சி அனுகூலங்கள் மற்றும் உங்களுக்கு தேவையான நேரங்களில் உங்களுடைய நிதியை அணுகும் நெகிழ்வு ஆகிய இரு நன்மைகளையும் வழங்கி, நவீன நிதித் தீர்வை வழங்குகின்றது. இது வழக்கமான சேமிப்புக்கள் அல்லது முதலீட்டுத் தீர்வு அல்ல – உங்களுடைய பணத்தின் பயன்பாட்டையும், அது பல்கிப் பெருகுவதையும் உச்சப்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டார்.       

தற்போதைய வருமான விகிதத்தில் மாறுபாடுகள் மற்றும் மாற்றங்கள் ஏற்படலாம். முதலீட்டாளர் பிரதான தகவல் ஆவணத்தை (KIID) வாசித்து புரிந்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். அவற்றுள் முதலீட்டாளர்கள் சம்மந்தப்பட்ட கட்டணங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.

முற்றும்.

First Capital நிறுவனம் குறித்த விபரங்கள் 

ஸ்திரத்தன்மையைக் கட்டிக்காத்து, போட்டி அனுகூலத்தை வளர்த்து, மற்றும் தலைசிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதில் வலுவான கவனத்தைச் செலுத்தியுள்ள First Capital, அதன் பெறுபேற்றுத்திறனுக்கு முதலிடம்என்ற நெறிமுறையை உண்மையாக கட்டிக்காப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. வலுவான அடிப்படைகள், அர்ப்பணிப்புமிக்க அணிகள், மற்றும் ஜனசக்தி குழுமத்தின் பக்கபலம் ஆகியவற்றுடன் வலுவாகத் திகழ்ந்து வரும் First Capital, எதிர்வுகூற முடியாத சந்தை நிலைமைகளின் சவால்களை திறம்பட கையாண்டு வருகின்றது. தனது டிஜிட்டல் ஆற்றல்களை மேம்படுத்தி, அவற்றை தனது தொழிற்பாடுகளில் ஒருங்கிணைத்து தனது அடைவுமட்டம் மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றை இந்நிறுவனம் தீவிரமாக விஸ்தரித்து வருகின்றது. வாடிக்கையாளர்களின் அனுபவங்களை மாற்றியமைத்து, தொழிற்பாட்டுத் திறனை வளர்த்து மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் நிலைபேற்றியல் ஆகியவற்றை முன்னெடுப்பதில் இம்முயற்சிகள் கவனம் செலுத்தியுள்ளன.            

First Capital Holdings PLC நிறுவனம் ஒரு முதன்மை வணிகராகவும், நிறுவன நிதி ஆலோசகராகவும், செல்வ முகாமையாளராகவும் மற்றும் பங்குத்தரகராகவும் இயங்கி வருகின்றது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக முதலீட்டு வங்கிச்சேவைத் துறையில் மிகவும் மதிப்புமிக்க நுகர்வோர் வர்த்தகநாமம் என்ற அங்கீகாரத்தை Brand Finance இடமிருந்து First Capital சம்பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.        

மூலதன சந்தை தீர்வுகளை வழங்குவதில் நான்கு தசாப்தத்திற்கு மேலான நிபுணத்துவத்துடன், இலங்கையில், பங்குச்சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ள முழுமையான சேவைகளை வழங்கும் முதலீட்டு நிறுவனமாக First Capital Holdings PLC திகழ்ந்து வருகின்றது. First Capital Holdings PLC நிறுவனத்துக்கு LRA இடமிருந்து Positive outlook உடன் [SL] A கடன் தரமதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.         

First Capital Holdings PLC நிறுவனத்தின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் வருமாறு: இராஜேந்திரா தியாகராஜா (தலைவர்), மஞ்சுளா மத்தியூஸ் (பிரதித் தலைவர்), டில்ஷான் வீரசேகர (முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி), ரமேஷ் ஷாஃப்ட்டர், குடா ஹேரத், இனோஷினி பெரேரா, ரச்சினி ராஜபக்ச, மற்றும் திலேந்த்ர விமலசேகர.  

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *