31ஆவது FACETS Sri Lanka 2025 ஜனவரியில் ஆரம்பம்

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) – தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையுடன் (NGJA) இணைந்து ஏற்பாடு செய்துள்ள 31ஆவது FACETS இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியானது 2025 ஜனவரி 04 – 06 ஆம் திகதிக்கு இடையில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

புதிய வருடத்தை ஆரம்பிக்கும் வகையில், உலகெங்கிலும் உள்ள முக்கிய இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள், பட்டை தீட்டுவோர் மற்றும் இரத்தினக்கல் சேகரிப்பாளர்களை ஒன்றிணைக்கின்ற தொழில்துறையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வாக FACETS 2025 மாறியுள்ளது. 75 இற்கும் மேற்பட்ட வகையான வண்ண இரத்தினக் கற்களின் தாயகமாகவும், முதன்மையான இரத்தினக் கற்களின் மூலாதார நாடாகவும் உள்ள இலங்கையின் நீண்ட வரலாற்றின் ஒரு ஈர்ப்புமிக்க கொண்டாட்டமாக, பல வருடங்களாக இடம்பெற்று வரும் FACETS கண்காட்சி விளங்குகின்றது. உள்ளூர் ஆபரண வர்த்தகர்கள் மற்றும் வணிகர்களின் பங்கை முன்னிலைப்படுத்தும் இந்த நிகழ்வானது, செழுமையான பாரம்பரியம் மற்றும் புத்தாக்கமான நவீனத்துவத்தின் தனித்துவமான கலவையுடன் இலங்கையின் கைவினைத்திறனை உலகிற்கு வெளிப்படுத்துகிறது.

FACETS Sri Lanka 2025 கண்காட்சியானது இரத்தினபுரி, எலஹர, பேருவளை, எஹலியகொட, காலி, பெல்மதுளை, கஹவத்தை, கொழும்பு போன்ற இத்தொழில்துறையின் முக்கிய இடங்களைச் சேர்ந்த தொழில்முனைவோர்களுக்கு வாய்ப்பளிக்கவுள்ளது. இத்தொழில்துறையில் உள்ள தலைவர்களுக்கு உலகெங்கிலும் உள்ள தொழில் வல்லுநர்களுடன் இணைந்து இயங்குவதற்கும் தொடர்பை ஏற்படுத்துவதற்கும் ஒரு தளமாக செயல்படுவதன் மூலம், ஏற்றுமதியில் 1 பில்லியன் டொலர்களை அடையும் இலக்கை நோக்கி இத்தொழில்துறையை இயக்குவதற்கு FACETS கண்காட்சி பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வு இலங்கையின் நீலமாணிக்கம் மற்றும் பல்வேறு வண்ணமயமான இரத்தினக் கற்களின் பெருமையை முன்னிலைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் பன்முக கலாசாரம் மற்றும் பகிரப்பட்ட பாரம்பரியத்திற்கு ஒரு சாளரமாக செயற்படும். FACETS 2025 கண்காட்சியானது இரத்தினக்கல் மற்றும் ஆபரண மையமான இலங்கையின் நிலையை உறுதிப்படுத்தும் ஒரு களமாக அமையும் என்பதுடன், இரத்தினக்கல் மற்றும் சுற்றுலாத் தொழில்துறைகள் முழுவதும் புத்தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதோடு சர்வதேச ஒத்துழைப்புக்கான வாய்ப்பையும் ஊக்குவிக்கும்.

இவ்வருட நிகழ்வானது பார்வையாளர்களிடையே ஒரு வலையமைப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பையும் கூட்டாண்மைக்கான ஒப்பிட முடியாத வாய்ப்புகளையும் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. FACETS Sri Lanka 2025 கண்காட்சியின் முக்கிய நிகழ்வுகளில் Sapphire Night, முக்கிய அடையாளமான Ceylon Sapphire கொண்டாட்டம் மற்றும் தொழில்துறையில் உள்ள பெண் தலைவர்களை உற்சாகப்படுத்துவதற்கும் கொண்டாடுவதற்குமாக அர்ப்பணிக்கப்பட்ட Women’s Power Breakfast போன்றவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி மிகவும் பிரத்தியேகமான அனுபவத்தை வழங்கும் Mine Tour ஆனது, உள்நாட்டு சுரங்கங்கள் முதல் சந்தைப்படுத்துதல் வரையான நுண்ணறிவை வழங்கும். அத்துடன் கொழும்பு துறைமுக நகரிற்கான (Port City) விஜயம் உள்ளிட்டனவும் இதன் அங்கமாக விளங்குகின்றன. அது மாத்திரமன்றி VIP Golf Tournament போன்ற பிரத்தியேக நிகழ்வுகள் இந்நிகழ்விற்கு மேலும் கௌரவத்தை சேர்க்கும். அதேவேளை, Story Corner, கடந்த வருடத்தின் Sustainability Pavilion இவ்வணிகம் கொண்டுள்ள பொறுப்பான நடைமுறைகள் மற்றும் தொழில்துறையை வடிவமைக்கின்ற சமூகத்தினர் பற்றிய ஆழமான வரலாற்றை வழங்கும்.

FACETS Sri Lanka கண்காட்சியானது அதன் 31ஆவது ஆண்டில் நுழையும் இவ்வேளையில், எதிர்வரவுள்ள கண்காட்சியானது, பார்வையாளர்களுக்கு ஆழமான மற்றும் நுண்ணறிவுமிக்க அனுபவமாக அமையும் என்பது உறுதி. இலங்கைத் தொழில்துறையினரால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு நிகழ்வு எனும் வகையில், இலங்கையின் பொக்கிஷங்களின் அழகு, பன்முகத்தன்மை மற்றும் ஒப்பிடமுடியாத தரம் ஆகியவற்றைக் கொண்டாடுவதற்கும் அவற்றை கௌரவிப்பதற்கும் இந்த நிகழ்ச்சியில் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை ஒன்று சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிகழ்வு மற்றும் அதன் விசேட செயற்பாடுகள் பற்றிய மேலதிக தகவலுக்கு, www.facetssrilanka.com அல்லது Facebook மற்றும் Instagram தளங்களில் FACETS Sri Lanka எனும் பக்கத்தை பார்வையிடவும்.

இம்முறையும் சிறப்பான கண்காட்சியை சாத்தியமாக்கிய, FACETS 2025 கண்காட்சியின் செயற்குழுவின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக அவர்களுக்கு நன்றி.

ENDS

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *