இலங்கையில் Shell Lubricantsஇன் புதிய பாரியவிநியோகஸ்தராக நியமிக்கப்பட்ட Delmege Forsyth Energy Pvt Ltd

Delmege Ltd இன் துணை நிறுவனமான Delmege Forsyth Energy Pvt Ltd, 2024 டிசம்பர் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கையில் Shell மசகு எண்ணெய்களுக்கான (Lubricants) ஒரேயொரு உத்தியோகபூர்வ விநியோகஸ்தராக, நியமிக்கப்பட்டதை பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்த மூலோபாய கூட்டாண்மையானது, இலங்கைச் சந்தைக்கு உலகத் தரம் வாய்ந்த வர்த்தகநாமங்களை வழங்குவதற்கான நிறுவனத்தின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.

வலுசக்தி மற்றும் பெற்றோலிய இரசாயன தயாரிப்புகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Shell ஆனது, வாகனம், தொழில்துறை மற்றும் கடல்சார் துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளுக்கு, புத்தாக்கமான மற்றும் உயர் செயல்திறன் கொண்ட மசகு எண்ணெய்களை விநியோகிப்பதில் பிரபலமானதாகும்.

இந்தக் கூட்டாண்மை தொடர்பில் கருத்துத் தெரிவித்த Delmege Forsyth Energy நிறுவனத்தின் பொது முகாமையாளர் ஜகத் காசிவத்த, “தற்போது இலங்கை வாடிக்கையாளர்கள் Shell இன் உயர் ரக மசகு எண்ணெய்களுக்கான மேம்பட்ட அணுகலைப் பெறுவார்கள். இதன் தயாரிப்புகளில் மேம்பட்ட synthetic oils, தொழில்துறை தரத்திலான மசகு எண்ணெய்கள், தனிப்பட்ட மற்றும் வணிக பாவனையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட நிலைபேறான தீர்வுகள் ஆகியன அடங்குகின்றன. Delmege இன் பரந்துபட்ட உள்ளூர் சேவை நிபுணத்துவம் மற்றும் வலுவான விநியோக வலையமைப்பு மூலம் இந்த ஒத்துழைப்பானது, வாடிக்கையாளர் திருப்தி, செயற்பாட்டு விசேடத்துவம் மற்றும் தொழில்துறையில் புதிய தரநிலைகளை அமைக்கத் தயாராகியுள்ளது.” என தெரிவித்தார்.

மூலோபாய வணிக மேம்பாடு மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் அம்ரித் அதிஹெட்டி தெரிவிக்கையில், “Delmege சிறந்த தரம் மற்றும் புத்தாக்கத்தை நிலைநாட்டும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த புதிய முயற்சியானது, இலங்கையில் முன்னணி எரிசக்தி தீர்வு வழங்குனர் எனும் நிறுவனத்தின் நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறது. புதிய விநியோகஸ்தர் எனும் வகையில் Delmege Forsyth Energy Pvt Ltd ஆனது, இலங்கையில் Shell இன் சந்தை இருப்பை விரிவுபடுத்துவதற்காக, அதன் நிபுணத்துவத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. தயாரிப்புகளின் தடையற்ற வகையிலான கிடைக்கும் தன்மை மற்றும் ஒப்பிட முடியாத சேவைத் தரங்களை இது உறுதி செய்கிறது. மாறிவரும் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்யும் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் புத்தாக்க தீர்வுகள் மூலம் தமது வாடிக்கையாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க நிறுவனம் உறுதி பூண்டுள்ளது.” என தெரிவித்தார்.

இது தொடர்பில் Vallibel One/Delmege Ltd நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி தினூஷா பாஸ்கரன் தெரிவிக்கையில், “உலகளாவிய ரீதியில் தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கு பெயர் பெற்ற வர்த்தகநாமமான Shell நிறுவனத்துடன் கூட்டிணைவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஒத்துழைப்பானது, இலங்கை நுகர்வோருக்கு உயர்மட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான எமது நோக்கத்துடன் ஒத்துப்போகிறது. ஒன்றிணைந்து, எரிசக்தி துறையில் நிலைபேறான வளர்ச்சியை ஏற்படுத்துவதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்றார்.

Delmege Forsyth Energy Pvt Ltd பற்றி

Delmege Forsyth Energy Pvt Ltd ஆனது இலங்கையில் ஒரு முன்னணி எரிசக்தி தீர்வு வழங்குநராகும். இது தரம், புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் திருப்திக்கான அர்ப்பணிப்புக்கு பெயர் பெற்றது. Delmege குழுமத்தின் ஒரு அங்கம் எனும் வகையில், நாட்டின் எரிசக்தி உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் நிறுவனம் தொடர்ச்சியாக முக்கிய பங்கு வகிக்கிறது. Delmege குழுமம் தொடர்பான மேலதிக தகவலுக்கு, www.delmege.com தளத்திற்கு பிரவேசிக்கவும்.

About Shell Lubricants பற்றி

Shell Lubricants ஆனது, நுகர்வோர் வாகனங்கள், வணிக வாகனங்கள் மற்றும் தொழில்துறை துறைகளில் சந்தைப் பங்கின் அடிப்படையில் தொடர்ச்சியாக 18 வருடங்களாக உலகின் முதலாவது நிறைவு செய்யப்பட்ட மசகு எண்ணெய் விநியோகஸ்தராக இருந்து வருகிறது. இந்த மூன்று துறைகளிலும் உலகளாவிய ரீதியில் விற்பனையில் சமமான இடத்தை அது பிடித்துள்ளது.[1][1] Shell இன் உயர் ரக மற்றும் மாறுபட்ட தயாரிப்புகளில் Shell Helix passenger car oil, Shell Advance motorcycle oil, Shell Rimula truck and heavy-duty oils, Shell Tellus and Shell Gadus industrial ஆகியன உள்ளடங்குகின்றன. இவை பல முக்கிய சந்தைகளில் விரும்பப்படும் வர்த்தகநாமங்களாக விளங்குகின்றன.


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *