Huawei Nova 7 SE ஸ்மார்ட்போனுக்கு மாற ஐந்து காரணங்கள்

இலங்கையில் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய 5G ஸ்மார்ட்போன் ஆன Huawei Nova 7 SE ஆனது பல்வேறு விசேட உள்ளக அம்சங்களுடனும் மாறுபட்ட வடிவமைப்பையும் கொண்டுள்ளது. Nova 7 SE மூலம், Huawei நிறுவனம் நடுத்தர வகை 5G ஸ்மார்ட்போனை சந்தைகள் எங்கும் கிடைக்கும் வகையிலான புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ப்ரீமியம் வகை 5G திறனை, நடுத்தர வகை கையடக்கத் தொலைபேசிகளின் விலையில் கொண்டுவந்துள்ளதோடு, அதிலுள்ள அம்சங்களோ, அதன் புகழ்பெற்ற வடிவமைப்பு அமைப்புகளிலோ எவ்வித குறைகளையும் அது மேற்கொள்ளவில்லை

Huawei நிறுவனம், தனது பிரபலமான Nova தொடரில் மேற்கொண்டு வரும், புதிய அம்சங்களை புகுத்தும் விடயம், Nova 7 SE இலும் தொடர்கிறது. 7 SE இன் மிக முக்கியமான விடயமாக காணப்படுவது 5G அம்சமாகும். ஆயினும் அந்த அம்சத்துடன் நின்று விடாது, அதில் மேம்படுத்தப்பட்ட Quad AI கெமரா மற்றும் அதே போன்ற சக்தி வாய்ந்த புரொசசர் ஆகியவற்றை அது கொண்டமைந்துள்ளது. இதன் மூலம் Huawei தனது பயனர்களுக்கு 8GB RAM + 128 GB ROM மற்றும் 40w Huawei SuperCharge தொழில்நுட்பத்துடன் முற்று முழுதான ஸ்மார்ட் லைபை வழங்குகிறது. Nova 7 SE யின் நேர்த்தியான வடிவமைப்பானது, வருடாந்த ஸ்மார்ட்போன் மதிப்பீடுகளின் அடிப்படையில், Nova தொடர் தொடர்ந்தும் முதலிடத்தில் இருப்பதற்கான காரணத்தை பறைசாற்றுகிறது.

Huawei இன் தொழில்நுட்ப வலிமையின் உச்சத்தை காண்பிக்கும் Nova 7 SE ஆனது, முதலாவது நடுத்தர வகை 5G ஸ்மார்ட்போனாக தன்னை நிலைநிறுத்தவுள்ளது. இது 7nm Kirin 820 5G chipset உடன் வருவதோடு, அடுத்த கட்ட செயல்திறன் கொண்ட AI திறனை கொண்டுள்ளதோடு, வேகமான 5G இணையத்தை வழங்குகிறது. இவை அனைத்தும் ஸ்மார்ட்போன்களின் எதிர்காலமாக கருதப்படுபவையாகும். அதிக செயற்றிறன் கொண்ட விளையாட்டுகளை விளையாடுதல், ​​உயர்தர வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்தல், ​​இணையத்தில் திரைப்படங்களைப் பார்த்தல், ​​வேகமான பதிவிறக்க மற்றும் பதிவேற்றும் வேகத்தை வழங்குதல் ஆகிய அனைத்து செயற்பாடுகளின்போதும், Nova 7 SE ஆனது எவ்வித பின்வாங்கலும் இன்றி செயற்படுகிறது..

Nova தொடரானது எப்போதும் அதன் மேம்பட்ட கெமரா அம்சங்களுடன் ஒத்ததாகவே உள்ளது. அந்த வகையில் Nova 7 SE ஆனது, 64MB உயர் தெளிவுத்திறன் கொண்ட பிரதான கெமரா, 8MB அல்ட்ரா வைட் ஆங்கிள் கெமரா, 2MB பொக்கே லென்ஸ் மற்றும் புகைப்படத்தில் அதிக விபரங்களை வழங்கும் 2MB மெக்ரோ லென்ஸ், உள்ளிட்ட குவாட் AI கெமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ஒரு நீண்ட தூரத்திலுள்ள பொருள், இயற்கைக்காட்சி அல்லது மிக நெருக்கமான பொருளாக இருந்தாலும், AI கெமரா அதை தற்போதுள்ள வெளிச்சம் மற்றும் பொருளின் தெரியும் அளவு ஆகியவற்றை, சிறப்பான லென்ஸ் சரிப்படுத்தல் மூலம் அடையாளம் கண்டுகொள்கிறது. 4K high definition வீடியோ, DUAL-VIEW வீடியோ, மெதுவான சலனம் மற்றும் time-lapse (நேர இடையீட்டு) போன்ற எந்தவொரு தெரிவின் மூலமும், படைப்பாற்றல் கொண்ட வீடியோக்களை பதிவு செய்யும்போது எந்தவொரு மாறுபாட்டையம் அது வெளிப்படுத்தாது. படப்பிடிப்பு மற்றும் படப்பிடிப்புக்குப் பிறகு, Nova 7 SE இலுள்ள ‘Editing Function’ (எடிட்டிங் செயல்பாடு) மூலம் உங்கள் புகைப்படங்களையும் வீடியோக்களையும் நீங்கள் விரும்பும் வகையில் உடனடியாக மாற்றியமைக்க அதிலுள்ள AI அம்சம் உதவுகிறது!

Nova 7 SE காரணமாக, உங்கள் ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யப்படும் வரை நீங்கள் மணிக் கணக்கில் காத்திருந்த காலமெல்லாம் மலையேறிப் போயுள்ளது. Nova 7 SE ஆனது, 40W Huawei SuperCharge செயல்பாட்டை தன்னகத்தே கொண்டுள்ளதோடு, அது மின்கலத்தின் 70% ஐ 30 நிமிடங்களில் சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. 30 நிமிடங்களில் 70% மின்கலம் சார்ஜ் செய்யப்படுவதானது, இன்றைய வாழ்க்கை முறைக்கு ஒத்திசையும் மிகப் பொருத்தமான அம்சமாக அமைகிறது. தொடர்ச்சியான பயன்பாட்டிற்கான, நீண்ட நேர மின்கலத்தை எதிர்பார்க்கும் பயனர்களுக்கும் Nova 7 SE பொருத்தமாக அமைகிறது. 4,000mAh மின்கலத்தை கொண்டுள்ள Nova 7 SE ஆனது, குறைந்தபட்ச மின்கல நுகர்வுடன் நாளாந்த பணிகளை எளிதாக்குகின்றது.

நிறுவப்படும் அதிகமான செயலிகள் நினைவகத்திற்கு போட்டி போடும் நிலையில், Nova 7 SE ஆனது, மிகப் பெரும் RAM மற்றும் சேமிப்பகத்துடன் பொழுதுபோக்குக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டுவருகிறது. Nova 7 SE இன் 8GB RAM + 128GB ROM கலவையானது, உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஏனைய கோப்புகளுக்கு பாரிய சேமிப்பு பரப்பை வழங்குவதன் மூலம், வேலைகளை தங்கு தடையற்ற வகையில் மேற்கொள்ள வழிவகுக்கிறது. 8GB RAM மற்றும் 128GB சேமிப்பகம் என்பன Multi-tasking (ஒரே நேரத்தில் பல பணிகளை கையாளுதல்) என்பதை ஒரு தென்றலாக மாற்றுகின்றது என்றே கூறலாம்.

Nova 7 SE யின் தனித்துவமான வடிவமைப்பு தொலைபேசியின் சக்தியுடன் ஒன்றறக் கலக்கின்றது. அதன் அழகிய இழைநயம் கொண்ட முப்பரிமாண (3D) கண்ணாடி மேற்பரப்பு, கண்களுக்கு விருந்தாக அமைவதோடு, அதன் ஒவ்வொரு வண்ண மாறுபாடுகளும் மறக்க முடியாதவையாக அமைகின்றது. Nova 7 SE ஆனது, வெள்ளி (Space Silver), பச்சை (Crush Green), ஊதா (Midsummer Purple) ஆகிய தெரிவுகளை கொண்ட, வித்தியாசமான மூன்று வண்ணங்களில் வருகின்றது. ஒவ்வொரு வண்ணமும் ஆசையைத் தூண்டும் தனித்துவமானதாக அமைந்துள்ளது.  Nova 7 SE இன் திரையானது, சிறுதுளையுடனான (Punch) முழுத் திரை கொண்ட, 90.3% திரைக்கு உடல் விகிதத்தை கொண்ட எல்லையற்ற காட்சிகளை வழங்குவதோடு, வியக்க வைக்கும் அனுபவத்தை அளிக்கிறது. கைரேகை உணரியாக செயல்படும் அதன் பக்க வாட்டில் அமைந்துள்ள ஆளி (power button) பொத்தான், உள்ளங்கையில் கையடக்கத் தொலைபேசி இருக்கும் போது எவ்வித தொந்தரவு இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு நடுத்தர வகை சாதனம் என்ற வகையில், ஒட்டுமொத்த அனைத்து விதமான செயல்திறன், வடிவமைப்பு, உள்ளார்ந்த அம்சங்களைக் கருத்தில் கொள்ளும்போது, Huawei Nova 7 SE ஆனது, 2020ஆம் ஆண்டில் விலையின் அடிப்படையில் வெளிவந்துள்ள ஸ்மார்ட்போன்களின் அடிப்படையில், சிறந்த மதிப்பை பெறும் கையடக்க தொலைபேசிகளில் ஒன்றாகும்.

தகவல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் (ICT) உட்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்களின் முன்னணி உலகளாவிய வழங்குநரான Huawei நிறுவனம், முழுமையாக இணைக்கப்பட்ட, புத்திசாலித்தனமான உலகிற்காக, ஒவ்வொரு நபருக்கும், வீட்டுக்கும், நிறுவனத்திற்கும் டிஜிற்றல் தொழில்நுட்பங்களை கொண்டு சேர்ப்பதில் உறுதியாக உள்ளது. உலகளாவிய மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனமான Huawei, புகழ்பெற்ற விருது விழாக்களில் முறையாக கௌரவிக்கப்பட்டு, உலகளாவிய தரக்குறியீடுகளின் தரவரிசையில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. மிகவும் மதிப்புமிக்க உலகளாவிய தரக்குறியீடுகள் தொடர்பான, BrandZ Top 100 பட்டியலில் Huawei 45ஆவது இடத்தையும், Forbes உலகின் மிக மதிப்புமிக்க தரக்குறியீடகள் பட்டியலில் 79ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. அத்துடன் சமீபத்திய Brand Finance Global 500 மிகவும் மதிப்புமிக்க தரக்குறியீடுகள் பட்டியலில் முதல் 10 மதிப்புமிக்க தரக்குறியீடுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Interbrand இனது, சிறந்த உலகளாவிய தரக்குறியீடுகள் பட்டியலில் Huawei 68ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் Fortune உலகளாவிய 500 பட்டியலிலும் அது இடம்பிடித்துள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *