அடுத்த தலைமுறை ஓடியோ அனுபவத்தின் முன்னோடியாகத் திகழும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Huawei தொழில்நுட்ப சாதனங்கள்

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, உயர் தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய புதிய தொழில்நுட்ப புத்தாக்கங்களுக்கு புகழ்பெற்றது. அடுத்த தலைமுறை ஓடியோ தொழில்நுட்பங்களுடன் கூடிய இதன் நவீன சாதனங்கள் இலங்கையில் தற்போது கிடைக்கின்றன.

உலகளாவிய தொழில்நுட்ப ஜாம்பவானான  இந்நிறுவனம், Huawei FreeBuds Studio, Huawei FreeLace Pro, Sound X  மற்றும் FreeBuds Pro  போன்ற நவீன தயாரிப்புகளின் அறிமுகத்தின் மூலம் முன்னோடியான ஓடியோ அனுபவத்தை வழங்கி  தனது புத்தாக தொழில்நுட்ப தீர்வுகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கின்றது.

உயர் தரமான ஓடியோவை வழங்கும் நோக்கில் Huawei FreeBuds Studio வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அறிவார்ந்த இரைச்சலைக் கட்டுப்படுத்தும் Active Noise Cancellation (ANC) அம்சமானது, இரைச்சல் மிக்க ரயில் பயணத்தின் போது, நகரத்தில் நடந்து செல்லும் போது அல்லது அலுவலக வேலையின் போது என எவ்விதமான சூழ்நிலைகளிலும்  அடுத்த கட்ட கேட்டல் அனுபவத்தை வழங்குகின்றது.

இது எட்டு omni-directional மைக்ரோஃபோன்களைக் கொண்ட இணைப்புத் தொகுதியுடன் வருகின்றமையானது சுற்றுப்புற ஒலியை துள்ளியமாகக் கண்டறிந்து இரைச்சல் இரத்துச் செய்யப்படுவதனை உறுதி செய்கின்றது. Huawei FreeBuds studio ஆனது ANC சிறப்பம்சத்துக்கு மேலதிகமாக,  Hi-Fi  தர ஓடியோ சிப் மற்றும் தொழில்தர ஒலிப்புலன் சார்ந்த பாகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளமையானது உயர் தெளிவுத்திறனுடன் கூடியோ ஓடியோவை உருவாக்குகின்றது. ஒவ்வொரு நுண்ணிய ஓடியோவும் 4Hz  மற்றும் 48Hz இற்கு இடைப்பட்ட  ultra-wide frequency response range உடன் விபரமாக செவிமடுக்கப்படுவதை இது உறுதி செய்கின்றது. இதன் L2HC உயர் தெளிவுத்திறன் codec ஒலியின் தரம் இழக்கப்படுவதனை குறைப்பதுடன், அசல் இசையை அதன் சிறந்த, முழு விபரத்துடன் மீட்டமைக்கிறது. இரட்டை antenna வடிவமைப்பு பரந்த சமிக்ஞை விஸ்தீரணம்  மூலம் நிலையான இணைப்பை உறுதி செய்வதுடன், பாவனையாளர்கள் இசையைக் கேட்கும்போது தங்கள் போன்களை கையில் வைத்திருக்க வேண்டியதில்லை. மேலும் இந்த ஹெட்போன்களை ஒரே நேரத்தில் இரு சாதனங்களில் இணைக்க முடிகின்றமையானது  பாவனையாளர்கள் வசதியாக பல பணிகளை முன்னெடுக்க வழி செய்கின்றது. ஒரே சார்ஜில் தொடர்ச்சியாக 24 மணித்தியாலங்கள் இசையைக் கேட்கும் (ANC செயற்படுத்தப்படாமல்) சௌகரியத்தை FreeBuds Studio வழங்குகின்றது.

Huawei இன் நவீன wireless earphone தயாரிப்பே FreeLace Pro ஆகும். இது dual-mic Active Noise Cancellation ஐக் கொண்டுள்ளது, பாவனையாளர்கள் எந்த குறுக்கீடும் இல்லாமல் இசை நிறைந்த உலகில் மூழ்குவதற்கு இது உதவுகிறது. அதன் 14mm dynamic driver, சுயாதீனமான குறைந்த அதிர்வெண் ஒலி குழாயுடன் இணைந்து அதிர்வு விளைவை அடைய செயல்படுகின்றமையானது வலுவான மற்றும் ஆழமான bass இற்குவழிவகுக்கிறது. FreeLace Pro அதன் சக்தி வாய்ந்த ஓடியோ தரத்துக்கு மேலதிகமாக அழைப்பு இரைச்சல் இரத்துச் செய்யும் அமைப்புடன் (call noise cancellation system) வருவதுடன், இது அழைப்புகளின் போது வெளிப்புற சூழல் சத்தத்தின் குறுக்கீட்டை திறம்பட குறைக்கிறது. ஒரே சார்ஜுடன் 24 மணி நேரம் தொடர்ச்சியாக இசையை கேட்டு இரசிக்கும் வாய்ப்பினை Huawei FreeLace Pro வழங்குகின்றது.

Huawei Devices Sri Lankaவின் நாட்டுக்கான தலைவர் பீட்டர் லியூ, Huaweiஇன் புதிய hi-fi range சாதனங்கள் தொடர்பில் கருத்துத்தெரிவிக்கையில்: “இந்த சகல சாதனங்களுடனும் தொடர்புபட்டுள்ள ஒரு பொது அம்சம் என்னவென்றால் அசல் தரமுள்ள ஒலியை அவை உருவாக்குவதாகும். Devialet முதலிய முதன்மையான ஓடியோ தொழிநுட்பத்தை இணைப்பதன்மூலம், மிகச்சிறந்த ஒலி உருவாக்கத்தை கட்டமைக்க எம்மால் முடிந்துள்ளது. பொழுதுபோக்கு மற்றும் அழைப்புக்களில் பங்குவகிக்கின்ற எக்டிவ் இரைச்சல் இரத்துச் செய்தல் (Active Noise Cancellation) தொழில்நுட்பமானது  முக்கிய அம்சமாகத் திகழ்கின்றது.  Huawei ஆனது தொடர்ந்து தமது சாதனங்களை எதிர்கால நோக்கம் கருதிய புதிய கண்டுபிடிப்புக்கள் மூலம் மேம்படுத்தி வருவதுடன், வாடிக்கையாளர்கள் எதிர்காலத்தில் இன்னும் பல தொழிநுட்ப முன்னேற்றங்களை எம்மிடமிருந்து எதிர்பார்க்கலாம்,” எனத் தெரிவித்தார்.

இதன்  இரட்டை sub woofers உடன் Huawei sound X ஆனது அதி உயர்ந்த தர ஓடியோ அனுபவத்திற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கையடக்கமான speaker ஆனது Devialet இன் ஓடியோ தொழிநுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதன் இரட்டை sub woofers உயர் நம்பகத்தன்மையான ஒலியை real time ஓடியோ சமிக்ஞையுடன் வெளிப்படுத்துகின்றது. 20mm வரையான வீச்சுடனும்  40Hz வரை குறைந்து செல்லும் bass  உடனும், பாவனையாளர்கள் ஒலியைக் கேட்பதுமட்டுமின்றி, அதனை உணரவும் முடியும். தனித்துவமான காந்த மூலப்பொருட்களால்  வடிவமைக்கப்பட்ட இரட்டை sub woofer, மகத்தான உயர்ந்த தெளிவான சத்தத்தை, குறைந்த வலு உள்வாங்கலுடன் உருவாக்குகின்றன. SPL 93 DB வரையான தெளிவுடன் நுணுக்கமான ஒலியை Huawei sound X வெளிப்படுத்துகின்றது.Devialet இன் push push acoustic வடிவமைப்பானது, எந்த ஒலி அளவிலும் சீரான ஓடியோ தரத்தை பேணும் பொருட்டு, ஒலிபெருக்கி அதிராமல் இருப்பதை உறுதி செய்கின்றது. இரட்டை sub woofers க்கும் மேலதிகமாக ஒலிபெருக்கியானது, பிரமிக்கவைக்கும் surround ஒலியை உருவாக்குவதற்காக Huawei இன் ஒலி வழிமுறையை பயன்படுத்தக்கூடிய ஆறு சக்திவாய்ந்த tweeters ஆல் நிரப்பப்பட்டுள்ளது. Sound X sleek வடிவமைப்பானது,  வர்ணமயமான  ஒளி விளக்குகள் பதிக்கப்பெற்ற power மற்றும் control buttons இன்னும் கவர்ச்சியாக ஆக உள்ளது.

FreeBuds Pro என்பது Huawei இடமிருந்து வரும் நவீன wireless earbuds ஆகும். இது உள்ளேயும் வெளியேயும் மிதமிஞ்சிய சத்தத்தை தடை செய்யும் கலப்பு எக்டிவ் இரைச்சல் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தை (Hybrid Active Noise Cancellation) கொண்டுள்ளது. இதன் உயர் சக்தி மிக்க  11mm driver உயர்ந்த தரமான ஓடியோ தரத்தை வழங்குகின்றது. அதன் செயற்கை நுண்ணறிவு வழிமுறைகள் நிகழ்நேர சமிக்ஞை மாற்றங்களைக் கண்டறிந்து சமநிலையை சிறந்த அளவுத்திருத்தத்திற்கு சரிசெய்கின்றன. உயர் தர ஓடியோ அனுபவத்திற்கு மேலதிகமாக, அதன் 3-mic அமைப்பு இரைச்சலை இரத்துச் செய்து அழைப்பின் தரத்தை உயர்த்த செயற்படுத்துக்கின்றது.

Huawei FreeBuds Studio ரூபா 59,999.00, Huawei FreeLace Pro ரூபா 19,999.00 , Huawei Sound X ரூபா 57,999.00 மற்றும் FreeBuds Pro ரூபா 34,999.00 எனவும் விலையிடப்பட்டுள்ளன. இந்த நான்கு சாதனங்களும் நாடுபூராகவும் உள்ள அதிகாரம் பெற்ற மீள் விற்பனையாளர்களிடம் கிடைப்பதுடன், Daraz.lk மற்றும் Wow.lk ஆகிய இணையத்தளங்கள் மூலமாகவும் ஓர்டர் செய்து பெற்றுக்கொள்ள முடியும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *