இலங்கையில் தனது பிரத்தியேக காட்சியறையை ஆரம்பித்துள்ள ASUS

பிரபல பல்தேசிய தொழில்நுட்ப நிறுவனமான ASUS Sri Lanka, இலங்கையில் தனது முதலாவது பிரத்தியேக காட்சியறையை கொழும்பின் மையப்பகுதியில் திறந்து வைத்துள்ளது.

இலங்கையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான தீர்வுகளுக்காக மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டுள்ள யூனிட்டி பிளாசாவில் இந்த கடை வசதியாகவும், மையப்பகுதியிலும் அமைந்துள்ளது. மேலும் ASUS ZenBook தொடர், VivoBook தொடர் உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்கள், கணினி வன்பொருள் மற்றும் துணைப்பொருட்கள் ஆகியவற்றை வழங்குவதுடன், கேமிங் தொடர் மற்றும் வணிக, நிறுவன மற்றும் கோர்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கான தயாரிப்புகள் போன்றவற்றையும் கொண்டுள்ளது.

இந்த காட்சியறையானது பெப்ரவரி 23 ஆம் திகதி , ASUS Sri Lankaவின் இலங்கைக்கான விற்பனை முகாமையாளர் இஸ்கி இர்ஷாத் மற்றும் Unity Systems Solutionsஇன் உரிமையாளரும், பணிப்பாளருமான வசந்த தினுவன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டதுடன், பல்வேறு தயாரிப்புகளும் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

“நாட்டில் மிகவும் விரும்பப்படும் வர்த்தகநாமம் ஒன்றிற்கான முதல் பிரத்தியேக காட்சியறையை ஆரம்பிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைவதோடு, ASUS Sri Lanka அதன் தனிப்பட்ட கணனிகள் மற்றும் கேமிங் தீர்வுகளுக்கான கேள்வி – குறிப்பாக மில்லேனியல்கள் மற்றும் Z  தலைமுறையினரிடையே அதிகரித்து வருவதனை கண்டு வருகின்றது. மற்றும் இது போன்ற ஒரு வலுவான வர்த்தகநாமத்திற்கான ஒரு பிரத்தியேக வர்த்தகநிலையமாக இருப்பதும் பெமையளிப்பதாக உள்ளது,” என்று தினுவன், திறப்பு நிகழ்வின் போது தெரிவித்தார்.

“ASUS Sri Lanka இளைஞர்களுக்கான ஒரு வர்த்தகநாமமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. அதிகரித்து வரும் அதன் தயாரிப்புகளுக்கான  தேவை, குறிப்பாக இந்த மக்கள்தொகையினரிடையில் , நாட்டில் ஒரு பிரத்தியேக வர்த்தகநிலையத்துக்கான தேவையைத் தூண்டியதுடன், விரைவில் ஆரம்பிக்கப்படக் கூடிய பல காட்சியறைகளுக்கான ஆரம்பம் இதுவாகும். இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், எங்கள் இலங்கை நுகர்வோருக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கும் ஆதரவளிப்பதற்கும் நாங்கள் ஆர்வமாக உள்ள அதேவேளை, நாடுமுழுவதிலும் அதிக வர்த்தகநிலையங்களை ஆரம்பித்து எமது எல்லையை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகின்றோம்,” என இர்ஷாத் தெரிவித்தார்.

இலத்திரனியல் வணிகத்தின் வளர்ச்சி இருந்தபோதிலும், வர்த்தகநிலைய அனுபவங்கள் விற்பனைக்கு மிக முக்கியமானவை. ஏனென்றால், எந்தவொரு டிஜிட்டல் மாற்றீடும் வழங்க முடியாத ஒரு மறக்கமுடியாத, தொட்டுணரக்கூடிய மற்றும் உணர்ச்சிகரமான அனுபவத்தை பௌதீக ரீதியிலான வளாகங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும். இந்த காரணத்தினாலேயே,  ஒரு வர்த்தகநாமகாக எங்கள் நோக்கத்தை வலியுறுத்த எங்கள் கடைகளின் திறனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் நாடு முழுவதும் இன்னும் பல Asus-பிரத்தியேக வர்த்தக நிலையங்களைத் திறக்க உத்தேசித்துள்ளோம்,” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

நோட்புக்கள், நெட்புக்கள், மதர்போர்ட்கள், கிரபிக்ஸ் கார்ட்கள், ரவுட்டர்கள், நெட்வேர்க் சுவிட்சுகள் மற்றும் தொடர்புடைய பாகங்கள் உள்ளிட்ட தயாரிப்புகளுக்கான தரம் மற்றும் புதுமைக்காக ASUS மிகவும் புகழ்பெற்றது. எடுப்பான மற்றும் இளமையான வடிவமைப்புகள், எளிதான பெயர்வுத்திறன், துல்லியமான கைவினைத்திறன், சமரசமற்ற செயல்திறன், தயாரிப்பு பல்வகைமை மற்றும் புதுமையான தீர்வுகள் ஆகியவை இந்த வர்த்தகநாமத்தை தனித்து நிற்கச் செய்வதுடன், இளைய தலைமுறையினரை மிகவும் கவர்ந்திழுக்கின்றன.

ASUS மற்றும் அதன் தயாரிப்புகள் தொடர்பான மேலும் விபரங்களுக்கு:  www.asus.com/lk.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *