DIMO நிறுவனத்திடமிருந்து TATA SIGNA 4018.S பிரைம் மூவர்களை தெரிவு செய்த ADVANTIS PROJECTS & ENGINEERING

இலங்கையில் TATA Motors Ltd இன் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தரான இலங்கையின் முன்னணி பாரிய நிறுவனங்களில் ஒன்றான DIMO, TATA SIGNA 4018.S பிரைம் மூவர்களின் 7 தொகுதிகளை சேதவத்தையில் அமைந்துள்ள Advantis Projects & Engineering (Pvt.) Ltd நிறுவனத்திடம் கையளித்தது.

Advantis Projects & Engineering (Pvt.) Ltd நிறுவனத்திற்கு விநியோகிக்கப்பட்ட பிரைம் மூவர்ஸ் தொகுதிகள்,  உயர்ந்த வலுவுக்கு – எடை விகிதத்தை வழங்குவதோடு, சக்கரங்களின் அதிக முறுக்கு விசை சிறந்த செயல்திறனையும் வழங்கும்  அதேவேளை, 3-mode FE உடன் கூடிய Cummins ISBe 5.9L என்ஜினுடன் கிடைக்கும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள டிரைவ்லைன் மற்றும் G750 கியர்பெட்டி அதிக எரிபொருள் வினைத்திறனையும் வழங்குகிறது. பொருத்தமான 2-எக்ஸல் டிரெய்லர், கியர் ஷிப்ட் எட்வைஸர் மற்றும் tilt & telescopic ஸ்டீரிங் கொலம் போன்ற சிறந்த டிரக்கிங் அனுபவத்தை வழங்கும் புதிய பெறுமதி மேம்படுத்தல் வரிசைகளுடன் இணைந்து 40 டன் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட GCW உடன் இந்த வாகனம் கிடைக்கின்றது.

Advantis Projects & Engineeringஇன் பணிப்பாளரும்/ பிரதான நிறைவேற்று அதிகாரியுமான ஷாதில் ரிஷான் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “DIMOவிலிருந்து TATA SIGNA 4018.S பிரைம் மூவர்ஸை நாங்கள் தெரிவு செய்தோம். ஏனெனில், இந்த வாகனங்கள் சிறந்த GCW உடன் கூடியமை, வீதியில் சிறப்பாக செயற்படுகின்றமை மற்றும் AC உடன் கூடிய விசாலமான டிரைவர் கெபின் மற்றும் குறைந்த செயற்பாட்டுச் செலவை வழங்குகின்றமையிலாகும். மிக முக்கியமாக, அவை DIMOவின் உத்தரவாதத்துடன் அதிக மீள்-விற்பனை பெறுமதி மற்றும் விற்பனைக்குப் பின்னரான விரிவான சேவை வலையமைப்புடன் கிடைக்கின்றன”, என்றார்.

இதன் கையளிப்பு விழாவில் DIMOவின் பணிப்பாளர் விஜித்த பண்டார அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “உலகத்தரமான TATA SIGNA 4018.S பிரைம் மூவர்கள் இந்தியாவில் வணிக நோக்கிலான வாகன உற்பத்தியில் புகழ்பெற்ற முன்னணி நிறுவனமான TATA Motors இடமிருந்து வருகின்றன. TATA SIGNA பிரைம் மூவர் இலங்கையில் அதன் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் குறைந்தபட்ச இயக்க மற்றும் பராமரிப்பு செலவீனங்கள் காரணமாக உள்நாட்டு லொஜிஸ்டிக் செயற்பாடுகளை மாற்றியமைத்து அபிவிருத்தி செய்துள்ளதுடன் இலங்கையில் மிக உயர்ந்த சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. மேலும், புதிய வடிவமைப்பு மற்றும் சௌகரியமாக குறைந்த அயர்ச்சியுடன் இயக்குவதற்கு சாரதிகளுக்கு அனுமதியளிக்கின்றது,” என்றார்.

TATA Motors இன் TATA SIGNA 4018.S பிரைம் மூவர்ஸ் உள்நாட்டு லொஜிஸ்டிக் செயல்பாட்டுத் துறைகளில் முன்னேற்றத்தை வழங்குவதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கடுமையான காலக்கெடுக்களுக்கு முகங்கொடுக்க புதிய திட்டங்களில் அண்மைய மற்றும் மிகவும் நம்பகமான தொழில்நுட்பத்தையும் சிறந்த உபகரணங்களையும் பயன்படுத்துவது மிக முக்கியம். இதனால், இந்தத் துறையின் கடுமையான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, TATA SIGNA 4018.S பிரைம் மூவர்ஸ் பவர் 179HP உடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த Cummins என்ஜின், transmissions form 6F, heavy-duty 7T ரிவர்ஸ் எலியட் வகை front axle மற்றும் single reduction RA110LD வகை rear axle மற்றும் front semi-elliptical / parabolic leaf spring மற்றும் பின்புறத்தில் multi-leaf spring suspension ஆகியவற்றுடன் வருகின்றது. SIGNA வரிசையின் ஸ்மார்டாக வடிவமைக்கப்பட்ட கெபின் பகுதி, மேம்படுத்தப்பட்ட பணிச்சூழலியல் மற்றும் NVH மட்டங்கள் ஒரு சிறந்த இன்-கேப் அனுபவத்தை வழங்குகின்றன. இந்த கெபினானது AC மற்றும் காற்றோட்ட தெரிவுகளுடன் வருவதனால், ஓட்டுநர்கள் நீண்ட நேரத்துக்கு சோர்வு இல்லாமல் செயல்பட முடியும். இது சிறந்த உற்பத்தித்திறன் மற்றும் பாதுகாப்பிற்கு வழிவகுக்கிறது.

DIMO விற்பனைக்குப் பின்னரான பராமரிப்பு உதவியுடன் உள்ளூர் வாடிக்கையாளர்களின் எந்தவொரு மொபிலிட்டி சார்ந்த கேள்விக்கும் பொருந்தும் முழு TATA வணிக வாகன வரிசையையும் DIMO இலங்கையில் வழங்குகிறது. TATA வணிக வாகன வரிசையானது, சிறிய வணிக டிரக்கள் ( தாங்குசுமை 1 டன்னுக்கும் குறைவு), சிங்கள் கெப்கள் ( குடும்ப மற்றும் பல வியாபார பயன்பாடுகளுக்கானது), இலகு ரக வணிக டிரக்கள் ( தள நீளம் 10 அடி முதல் 20 அடி வரை வேறுபடும்), கனரக வணிக டிரக்கள், கனரக வணிக டிப்பர்கள், பிரைம் மூவர்கள் மற்றும் பஸ்கள் (28 முதல் 54 ஆசனங்கள்) ஆகியனவற்றை உள்ளடக்குகின்றன.

முன்னர் Logiventures என்று அழைக்கப்பட்ட Advantis Projects & Engineering (Pvt) Ltd, நாடு மற்றும் பிராந்தியத்தில் பெரிய அளவிலான உட்கட்டமைப்பு திட்டங்களில் ஈடுபட்டுள்ள இலங்கை மற்றும் சர்வதேச ஒப்பந்தக்காரர்களுக்கு செயற்திட்ட லொஜிஸ்டிக் தீர்வுகளை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றது. கடந்த 16 ஆண்டுகளாக, Advantis Projects, முழுமையான செயற்திட்ட லொஜிஸ்டிக் தீர்வு வழங்கலில் முன்னணி மற்றும் புத்தாக்க நிறுவனமாகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளதுடன், freight & chartering, customs clearance & forwarding (C&F), கனரக தூக்குதல் – போக்குவரத்து, மாற்று தூக்கும் தீர்வுகள், கிரேன் வாடகை, உள்நாட்டு விநியோகம், திறந்த மற்றும் மூடப்பட்ட செயற்திட்ட சரக்கு சேமிப்பு வசதிகள் மற்றும் லொஜிஸ்டிக் சங்கிலிகள் தொடர்பான பல சேவைகளை வழங்குகின்றது. மேலும், இந்த சேவைகளை வழங்குவதற்காக நிறுவனம் அதன் நிலையங்களை கொழும்பு துறைமுகம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

“இந் நிறுவனம் லொஜிஸ்டிக் அரங்கிலும் கனரக பொறியியலிலும் அனுபவம் கொண்ட அர்ப்பணிப்புள்ள நிபுணர்களின் குழுவைக் கொண்டுள்ளது. இது தர்க்கரீதியான லொஜிஸ்டிக் தீர்வுகளை வழங்குவதனாலும் வாடிக்கையாளர்களின் திருப்தியை அதிகரிப்பதன் மூலமும் பல்வகைப்பட்ட கோரிக்கைகளை சாதகமாக பூர்த்தி செய்ய நிறுவனத்திற்கு உதவுகிறது. இந் நிறுவனம் பல்வேறு பிரிவுகளில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் செயற்திட்ட லொஜிஸ்டிக்களுக்கு ஓர் உத்வேகமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. எங்கள் மேம்பட்ட நிபுணத்துவத்தை பயன்படுத்துவதன் மூலம், இலங்கையைத் தாண்டி வெளிநாடுகளில், அதாவது தூர கிழக்கு மற்றும் ஆபிரிக்க பிராந்தியங்களில் நாம் தொடர்ந்து செயல்படுவோம். எங்கள் உலகளாவிய செயற்திட்ட லொஜிஸ்டிக் வலையமைப்புகள் மற்றும் அவற்றின் திறன்களின் வலுவான ஆதரவுடன், பிராந்திய போட்டி நிறுவனங்களுடன் போட்டியிடுவதற்கான எங்கள் திறனில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்,” என்று ஷாதில் மேலும் தெரிவித்தார்.

TATA Motors மற்றும் DIMO நிறுவனங்களுக்கு இடையில் 58 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வலுவான உறவு கட்டியெழுப்பப்பட்டுள்ளதுடன், பெருந்தொகையான இலங்கை மக்களின் அன்றாட வாழ்வில் TATA வர்த்தகப் பயன்பாட்டு வாகனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. TATA வர்த்தகப் பயன்பாட்டு வாகனங்கள் தனது தொழிற்பாட்டுப் பிரிவுகள் அனேகமானவற்றில் சந்தையில் முன்னிலை வகித்து வருகின்றன. Tata வாடிக்கையாளர்களுக்கு Tata விற்பனை, பராமரிப்புச் சேவை, அசல் உதிரிப்பாகங்கள், மற்றும் தனித்துவமான 24 மணி நேர வீதி உதவி சேவைகளை வழங்குவதற்காக நாடெங்கிலும் 22 இற்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் 350 இற்கும் மேற்பட்ட முகவர்களை DIMO – TATA தற்போது கொண்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *