அனைத்தும் அடங்கிய வாழ்வுக்கு Huawei Y7a, Huawei FreeBuds Pro, Huawei Sound X

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, அதன் ஸ்மார்ட்போன்கள் முதல் மடிகணினிகள், டெப்லெட்டுகள், ஸ்மார்ட்வொட்ச்கள், ஓடியோ சாதனங்கள் மற்றும் Huawei Share போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் வரை நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் தயாரிப்புகளின் வரிசைக்காக நன்கறியப்பட்ட நிறுவனமாகும். மாற்றத்தை உண்டாக்கும் புதிய கண்டுபிடிப்புகளின் மூலம், வேகமான வாழ்க்கைக்கு பழக்கப்பட்டுள்ள இன்றைய டிஜிட்டல் வாசிகளின் வாழ்க்கையை எளிதாக்க Huaweiவிரும்புகிறது.

Huawei Y7a, Huawei FreeBuds Pro மற்றும் Huawei Sound X பாவனையாளர்கள் தமது அன்றாட பணிகளில் திறமையாக ஈடுபட உதவும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று Huawei சாதனங்களாகும். இரைச்சலை இரத்துச் (Noise Cancellation) செய்யும் அம்சத்துடன் அழைப்புகளை பெறவும், இசையை இரசிக்கும் பொருட்டும் Huawei Y7aவினை Huawei FreeBuds Pro உடன் ஒரே தட்டலில் இலகுவாக இணைக்க முடியும். தவிர, Huawei ஸ்மார்ட்போன் பாவனையாளர்களுக்கு Huawei Sound X புதிய இசைத் துணையாக மாறியுள்ளது.ஏனெனில், இதை ஒரு முறை எளிதாக இணைத்தவுடன் உயர் தரமான இசையை வழங்குகிறது.

Huawei Y7aவின் செலுத்தும் பணத்துக்கான சிறந்த பெறுமதியை வழங்கும் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் கட்டுப்படியாகும் விலை போன்றன தொழில்நுட்ப ஆர்வலர்களை உற்சாகப்படுத்துவது மட்டுமன்றி அதன் 48MP Quad AI அமைப்பு, 5000mAh வலு கொண்ட சக்தி வாய்ந்த மின்கலம், 4GB RAM + 128GB சேமிப்பகம் மற்றும் சிறந்த வடிவமைப்பு ஆகியன இந்த சாதனத்தின் முக்கிய ஈர்க்கும் அம்சங்களாகும்.

இதன் 6.67 அங்குல திரை, 90.3% screen to body ratio உடன் கூடியதென்பதால் பாவனையளர்களின் ஈர்ப்பினை தக்கவைக்கும் திறன் கொண்டதென்பதுடன் முழுமையான காட்சி அனுபவத்தை வழங்குகின்றது. Y7a இன் வளைந்த விளிம்புகள் சாதனத்தை உள்ளங்கையில் வைத்திருக்கும்போது சௌகரியத்தை வழங்குவதுடன், நீண்ட பயன்பாட்டிற்கு ஏற்றது.

Huawei  Y7a இன் 48MP quad கெமரா அதன் விலையில் உள்ள மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். அதன் quad கெமரா அமைப்பில் எஃப் / 1.8 துளை கொண்ட 48MP பிரதான கெமரா, எஃப் / 2.4 துளை கொண்ட 8 எம்பி 8MP Ultra wide angle lens, எஃப் / 2.4 துளை கொண்ட 2MP Depth lens மற்றும் எஃப் / 2.4 துளை கொண்ட  2MP Macro lens ஆகியவை உள்ளன. Super Night mode அம்சத்தின் ஆதரவுடன், இரவு நேர  புகைப்படம் எடுப்பதற்காக குறைந்த / மங்கலான ஒளி நிலைகளில் கூட இந்த பின்புற கெமரா சிறப்பாக செயற்படக் கூடியது. திரையில் ஒரு பஞ்ச் துளை வழியாக பொருத்தப்பட்டுள்ள  8MP செல்ஃபி கெமரா சமமாக சக்தி வாய்ந்தது மற்றும் பகலோ இரவோ தெளிவான படங்களை பிடிக்கிறது.

Huawei Y7a,  Kirin 710A புரசசரைக் கொண்டுள்ளது. இது Y தொடர் ஸ்மார்ட்போன்களுக்கு உயர் தர செயல்திறனை வழங்குவதில் சிறந்தது. இதன் 4Gb RAM + 128GB சேமிப்பக கலவையானது ஒரு சிறந்த செயல்திறனை வழங்குகிறது, இது ஏனைய மத்திய ரக சாதனங்களுக்கு இணையாக உள்ளதுடன், பாவனையாளர்களுக்கு பலதரப்பட்ட மற்றும் அன்றாட நடவடிக்கைகளை எந்த பின்னடைவும் இல்லாமல் வசதியாக கையாள உதவுகிறது.

தொழில்நுட்ப பிரியர்கள் இடையே நவீன சாதனமாக Huawei FreeBuds Pro நன்கு அறியப்பட்டுள்ளது. FreeBuds Proவின் தனிச்சிறப்பு வாய்ந்த Intelligent Active Noise Cancellation (ANC) அம்சமாகும், இது அதன் பிரிவில் தனித்துவமானது மற்றும் பாவனையாளரின் சூழலுக்கு ஏற்றவாறு பின்னணி சத்தங்களை புத்திசாலித்தனமாக சரிசெய்வதன் மூலம் தெளிவான கேட்டல் அனுபவத்தை வழங்குகிறது. இரைச்சல் இரத்து செய்யப்பட்ட  Ultra mode போன்ற அதன் மாறுபட்ட முறைகள் பயணத்தின் போது இசையைக் கேட்பதற்கு மிகவும் பொருத்தமானது, ஏனெனில் இது பின்னணி இரைச்சலைக் கடுமையாகக் குறைக்கிறது. வசதியான பயன்முறை பாவனையாளருக்கு வேலை செய்யும் இடம், நூலகம் அல்லது குறைவான தொந்தரவான இடத்தில் இசையை கவனத்துடன் கேட்க உதவுகிறது. சனநெரிசல் நிறைந்த இடங்கள் உட்பட பெரும்பாலான சூழ்நிலைகளுக்கு ANC உடனான General mode சிறந்தது.

Huawei Sound X, இரட்டை துணை வூஃப்பர்களைக் கொண்ட ஒரு ஸ்பீக்கர் ஆகும். சிறிய நிகழ்வுகள் மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. இது Devialet’s Speaker Active Matching (SAM) தொழில்நுட்பத்துடன் வருவதுடன், high-fidelity  ஓடியோவை உருவாக்க நிகழ்நேர ஒலி சமிக்ஞைகளைக் கொண்டுவருகிறது. அதன் இரட்டை துணை வூஃப்பர்கள் அரிய பொருட்களிலிருந்து வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை பாரிய அதிர்வுகளை உருவாக்க உதவுகின்றன.ஸ்பீக்கர் அளவு சிறியதாக இருந்தாலும், இது ஆறு சக்திவாய்ந்த ட்வீட்டர்களைக் கொண்டுள்ளது.இது மிரளவைக்கும் சூழ் ஒலியை உருவாக்க Huawei Sound வழிமுறையைப் பயன்படுத்துகிறது மற்றும் அதன் bass, 40hz வரை செல்லக்கூடியது.

பாவனையாளர்களிடையே மிகவும் பிரபலமான பயன்முறையான புளூடூத் மூலம் Huawei Y7a ஐ Huawei Sound X உடன் இணைக்க முடியும். எனினும், மிகவும் எளிதான வழி Y7a இல் Huawei AI Life செயலியைத் திறந்து, Sound X உடன் எளிதாக இணைக்க தேடலைத் தட்டவும்.

Sound X உடன் இணைக்கப்படும்போது, ​​பாவனையாளர்கள் உயர் தரமான இசையை அனுபவிக்க முடியும். மேலும், இது குடும்ப பார்டிகள் மற்றும் நிகழ்வுகளுக்கான DJ போலவும் மாற்றிக்கொள்ளக் கூடியதாகும். இந்த சாதனங்கள் அனைத்தும் பொதுவான சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்கின்றன, அவை பாவனையாளர்கள் செலவழிக்கும் பணத்திற்கு அதிகபட்ச பெறுமதியை வழங்குவதற்காக ஒவ்வொரு சாதனத்திலும் உட்பொதிக்கப்பட்ட நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் ஒப்பிடமுடியாத அம்சங்கள் ஆகும். தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்கள் இந்த சாதனங்களில் பாராட்டு மழையைப் பொழிந்துள்ளதுடன், அவற்றின் புகழ் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

Huawei Y7a இனை ரூபா  39,999/- இற்கும், Huawei FreeBuds Pro இனை ரூபா 34,499/- இற்கும், Huawei Sound X இனை ரூபா 57999/- என்ற விலைக்கும், Huawei experience centers, நாடு பூராகவும் உள்ள Singer காட்சியறைகள், Daraz.lk மற்றும் Singer.lk தளங்களிலும் கொள்வனவு செய்யலாம்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *