‘முன்னேற பயமில்லை’ DNA மூலம் ஸ்மார்ட்போன் தரவரிசையில் உச்சம் அடைந்த realme

realme ஆனது உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் அண்மையில் நுழைந்த ஒரு தரக்குறியீடாகும் என்பதுடன், வேறு எந்த புதிய தரக்குறியீடுகளை போலன்றி வெற்றியை ஈட்டி வருகின்றது. உலகளாவிய இளைஞர்களிடையே realme யின் பாதையையும் அதன் வெற்றிகளையும் பற்றி தெளிவூட்டும் கேள்விகளுக்கு realme இன் பிரதான நிறைவேற்று அதிகாரி Andy Wu வழங்கிய நேர்காணல்.

கே: உலகளாவிய ஸ்மார்ட்போன் துறையில் ஒப்பீட்டளவில் புதுமுகமான realme ஆனதுஇத்தகைய சலசலப்பை எவ்வாறு உருவாக்கியது?

: realme வளர்ந்து வரும் உலகளாவிய நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமாகும். இத்துறையில், ஸ்மார்ட்போன் மற்றும் AIoT சந்தைக்குள் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில், அதிநவீன தொழில்நுட்பங்களை குறிப்பாக உலகெங்கிலும் உள்ள இளைஞர்களுக்கு மேலும் ‘அணுகக்கூடியதாக மாற்றுவதன் மூலம், உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையானது ஏற்கனவே முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் ஒ2018 இல் realme நிறுவப்பட்டது. அப்போது, சந்தையில் 200 இற்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசி தரக்குறியீடுகள் காணப்பட்டன. இந்த நிலைப்பாடு இருந்தபோதிலும், தற்போது உலகில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடாக realme மாறியுள்ளது. பிரீமியம் அம்சங்கள், தரம் மற்றும் காலத்திற்கேற்ற போக்குடனான வடிவமைப்புகளுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்ற தொழில்நுட்ப சாதனங்களை நாம் கட்டுப்படியாகும் விலையில் வழங்குகிறோம். நாம் 2018 ஆம் ஆண்டில் ‘Dare to Leap’ (முன்னேறப் பயமில்லை) எனும் உயிர்நாடியுடன், எமது நிலைப்பாடு மற்றும் எமது தயாரிப்புகளில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை மேற்கொள்கிறோனம் என்பதைக் காட்டும் வகையில் சந்தைக்குள் நுழைந்தோம். அந்த வகையில் மூன்று ஆண்டுகளில், realme உலகின் 7 வது மிகப் பெரும் ஸ்மார்ட்போன் நிறுவனமாக மாறியது. Counterpoint Research நிறுவனத்தால், உலகளாவிய 5G ஸ்மார்ட்போன் விற்பனையின் அடிப்படையில், மிக வேகமாக வளர்ந்து வரும் தரக்குறியீடாக realme பெயரிடப்பட்டுள்ளது. இவ்வாண்டின் முதல் காலாண்டில், சீனா, தென்கிழக்காசியா, தெற்காசியா, ஐரோப்பா, ரஷ்யா, அவுஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்கா உள்ளிட்ட உலகளவிலான 61 சந்தைகளில் realme 70 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. அத்துடன் உலகெங்கிலும் உள்ள 13 நாடுகளில், முதல் ஐந்து இடங்களில் ஒருவராக தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த வருடத்தின் முதல் காலாண்டில் ஏற்றுமதிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், முதல்முறையாக, மூன்று ஐரோப்பிய நாடுகளில் முதல் நான்கு இடங்களுக்குள் பட்டியலிடப்பட்டுள்ளது.

கே: ஸ்மார்ட்போன் சந்தையில் realme எவ்வாறு தாக்கம் செலுத்தியுள்ளது?

: தொழில்நுட்பத்தில் புதிய முன்னேற்றங்களால் இன்று நாம் வாழும் உலகம் வேகமாக மாற்றமடைந்து வருகிறது. நாம் எம்மை வெளிக்கொணராவிட்டால் நாம் இவ்வுலகை விட்டு தூரமாக்கப்பட்டு விடுவோம். கையடக்க ஸ்மார்ட்போன் ஆனது அத்தகைய ஒரு தொழில்நுட்பமாக, நம் வாழ்வின் மையத்தில் உள்ளதுடன் நாளாந்தம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆயினும், இம்முன்னேற்றங்கள் அனைத்தும், ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டதாகவே வருவதால்,தொழில்நுட்ப ஆர்வலர்களாக இருக்கும் உலகெங்கிலும் உள்ள இன்றைய இளைஞர்கள் இவ்வாறான அதிக விலை காரணமாக, இந்நன்மையை அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற புத்தம் புதிய தொழில்நுட்பத்தை இளைஞர் மத்தியில், கட்டுப்படியாகும் விலையில் கொண்டு வருவதே realmeயின் வெற்றிப் புள்ளியாகும். இந்நோக்கத்தின் காரணமாகவே, நிறுவனத்தின் சமீபத்திய 5G உச்சிமாநாட்டில், இளம் பயனர்களை உலகளாவிய 5G இற்கு இசைவாக்கத்தை நோக்கிய வகையில் முன்னணியில் வைப்பதற்கான தனது விருப்பத்தை அறிவித்தது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் 100 மில்லியன் 5G தொலைபேசிகளை அவர்களுக்கு வழங்குவதோடு, தொழிற்துறையை முதன் முதலாக, அடுத்த சில வருடங்களில் 100 டொலரில் 5G கையடக்கத் தொலைபேசிகளை வெளியிடுவதை குறிக்கோளாகவும் கொண்டுள்ளது.

கே: realme யின் “Dare to Leap” (முன்னேற பயமில்லை) வலிமையைப் பற்றி எம்மிடம் கூறுங்கள்

: “Dare to Leap” வலிமையானது எம்முடையதல்ல, அது உலகெங்கிலும் உள்ள இளைஞர்களுக்கு உரித்தானது. புதிய தொழில்நுட்பத்தை நோக்கிய இந்த “Dare to Leap” உயிரோட்டத்திற்கு அதிகாரமளிக்கிறோம். அதை எமது DNA உடன் இணைந்தவாறு மிக நவீன தொழில்நுட்ப ஸ்மார்ட்போன்கள் ஊடாக ஒருங்கிணைப்பதன் மூலம், கையடக்கத் தொலைபேசிகளை அவர்களுக்கு கட்டுப்படியாக்குகின்றோம். நடுத்தர வகை விலையுள்ள realme தொலைபேசிகளில் 5G போன்ற மேம்பட்ட உயர் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவுடனான 3-4 உயர் துல்லியத்தன்மை கொண்ட லென்ஸ்கள், உலகில் ஸ்மார்ட்போன்களில் முதன்முறையாக TÜV Rheinland இனது உயர் நம்பகத்தன்மை சான்றிதழ் பெற்றமை போன்றவை, எமது “Dare to Leap” எண்ணக்கருவை எடுத்துக் காட்டுகின்றன.

கே: realme இளைஞர் சந்தையை குறிவைக்கிறது. இது பொதுவாக குறைந்த வருமான பிரிவுகளில் வரிசைப்படுத்தப்படுகிறது. எனவே மலிவான சாதாரண தொலைபேசி வரம்பிலா realme தொலைபேசிகள் வகைப்படுத்தப்படுகின்றன?

: இங்கு realme மற்றொரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. எமது கையடக்கத் தொலைபேசிகள் உயர் தொழில்நுட்பமாக இருந்தபோதிலும், இளைஞர்கள் விரும்பும் வகையில் கட்டுப்படியான விலையில் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும், நாம் இருக்கும் ஒரே பிரிவு இதுவே என்று அர்த்தமல்ல. எடுத்துக்காட்டாக, realme அதன் வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதன்மை ஸ்மார்ட்போன் ஆன realme GT 5G ஸ்மார்ட் போனை இந்த மாதம் அறிமுகப்படுத்தியிருந்தது. இது உலகளாவிய ரீதியில் realme இன் முதலாவது நடுத்தரத்திலிருந்து உயர் ரக பிரிவிற்குள் பயணம் செய்த ஸ்மார்ட்போன் ஆகும். இதில் முக்கியமானது யாதெனில், நாம் உலகளாவிய ரீதியில் நடுத்தர வகையிலிருந்து – உயர் ரக பிரிவில் நுழைவது மட்டுமல்லாமல், GT 5G மூலம், நடுத்தர வகையிலிருந்து உயர் ரக பிரிவு எனும் பிரிவொன்றை, வடிவமைப்பு மற்றும் விலை ரீதியில் தொழில்துறை ரீதியான புதிய பிரிவொன்றை அமைத்துள்ளோம். realme GT 5G ஆனது உண்மையில் உலகின் துணிச்சலான இளைஞர்களை நோக்கி எமது, ‘Dare to Leap’ எண்ணக்கருவை வெற்றிகரமாக பிரதிபலித்து நிற்கிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *