புதிய இரண்டு உற்பத்தி தளங்களின் மூலம் உலகளாவிய தயாரிப்பு வலையமைப்பை மேம்படுத்தும் vivo

பாகிஸ்தான் மற்றும் துருக்கியில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட தனது உற்பத்தி தளங்களின் மூலம்  உலகளாவிய உற்பத்தி வலையமைப்பின் அண்மைய விரிவாக்கம் தொடர்பில் vivo இன்று அறிவித்தது. சர்வதேச சந்தையில் vivoவின் வேர்களை ஆழப்படுத்தும் அதே வேளையில் உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட அதன் “More Local, More Global” மூலோபாயத்திற்கு ஏற்ப உலகெங்கிலும் அதன் தடத்தை வலுப்படுத்தி வரும் நிலையில் புதிய அறிவார்ந்த உற்பத்தித் தளங்கள் vivoவின் ஏழு தொழிற்சாலைகளை குறிக்கின்றது.

பாகிஸ்தானில் உள்ள 16,000 சதுர மீட்டர் அளவிலான தொழிற்சாலையானது எட்டு பொருத்தும் வரிசைகளைக் கொண்டுள்ளதுடன், வருடாந்தம் 6 மில்லியன் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.  அதே நேரத்தில் துருக்கியில் 12,000 சதுர மீட்டர் அளவிலான தொழிற்சாலையானது ஒவ்வொரு ஆண்டும் 5 மில்லியன் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்யக் கூடியது. இரண்டு புதிய தளங்களின் உற்பத்தித் திறன்களும் உள்ளூர் சந்தைகளின் நுகர்வோர் தளத்தை ஈடுசெய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் உற்பத்தித் தளத்தை உருவாக்க vivo 10 மில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளதுடன், இது 1,500 க்கும் மேற்பட்ட உள்ளூர் வேலைகளைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், துருக்கியின் உற்பத்தித் தளத்திற்கு 20 மில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ள அதேவேளை, இது 2,000 க்கும் மேற்பட்ட உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இரண்டு தொழிற்சாலைகளும் உள்நாட்டு பொருளாதாரங்களை மேம்படுத்துவதிலும், உள்ளூர் வேலைவாய்ப்பை வலுவூட்டுவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்க முயல்கின்றன.

பாகிஸ்தான் (பைசலாபாத்) மற்றும் துருக்கி (கோஹேசெலி) ஆகிய இடங்களில் புதிதாகத் திறக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கு மேலதிகமாக, vivoவின் உற்பத்தி வலையமைப்பில் சீனாவில் (டோங்குஹான்,சோங்கிங், இந்தியா (கிரேட்டர் நொய்டா), பங்களாதேஷ் (டாக்கா), இந்தோனேசியா (தங்கெராங்) உற்பத்தித் தளங்கள் அடங்குகின்றன. இவை அனைத்தும் மொத்தமாக வருடத்திற்கு கிட்டத்தட்ட 200 மில்லியன் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்கின்றன. உற்பத்தியில் vivoவின் முற்போக்கான அபிவிருத்திகள் நிறுவனம் உலகளாவிய அளவில் தொடர்ந்து வளர அனுமதித்துள்ளதுடன், 400 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களுக்கு மேம்பட்ட மற்றும் உயர்தர ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை எளிதாக அணுக வசதியளிக்கின்றன.

“மாறிவரும் தேவைகள் மற்றும் புத்தாக்க தொழில்நுட்பத்தை நோக்கிய சர்வதேச நுகர்வோரின் வளர்ந்து வரும் தேவைகள் vivoவின் உலகமயமாக்கல் நகர்வுகளுக்கான காரணங்களாக உள்ளன. எங்கள் பாவனையாளர் நோக்குநிலை பெறுமதி மற்றும் “More Local, More Global”மூலோபாயத்தைத் தொடர்ந்து, விவோ உலகளாவிய சந்தையை தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றது, ” என்று vivoவின் சிரேஷ்ட துணைத் தலைவரும் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியுமான ஸ்பார்க் நி தெரிவித்தார். “எங்கள் உலகளாவிய உற்பத்தி வலையமைப்பு மற்றும் நீண்ட கால முதலீட்டை விரிவுபடுத்துவதன் மூலம், vivo பல்வேறு சந்தைகளைத் தழுவி, உள்நாட்டு மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்கி, உலகெங்கிலும் உள்ள பாவனையாளர்களுக்கு சிறந்த தயாரிப்புகளையும் சேவைகளையும் தொடர்ந்து உருவாக்குகிறது.”

2014 முதல், vivo அதன் “More Local, More Global” மூலோபாயத்தை கடைபிடித்து வருவதுடன், அதன் உலகளாவிய ஆராய்ச்சி அபிவிருத்தி மற்றும் உற்பத்தி வலையமைப்பை உடனடியாக ஸ்தாபித்து வருகின்றது. vivo அதன் உற்பத்தி நிபுணத்துவத்தை மேம்படுத்துவதுடன், ஆராய்ச்சி அபிவிருத்தியில் அதிக முதலீடு செய்வதன் மூலம் பாவனையாளர்களுக்கு சிறந்த ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்க இரண்டையும் ஒருங்கிணைக்கிறது. பாகிஸ்தான் மற்றும் துருக்கியில் நிறுவனத்தின் புதிய உற்பத்தித் தளங்களின் அபிவிருத்தியானது அதன் உலகளாவிய உற்பத்தி திறன்களை விரிவுபடுத்துவதற்கும் அதன் சர்வதேச வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்குமான vivoவின் உறுதியையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *