ICTA இனால் ‘10,000 Ideas’ அறிமுகம்

சிறந்த யோசனைகளைத் திரட்டி பங்காளர்களுடன் இணைந்து அடுத்த தலைமுறை தொழில்நுட்ப தொழில்முனைவோரை ஊக்குவிக்கிறது

இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமான ICTA, அரசாங்கத்தின் மிகச்சிறந்த ICT நிறுவனமும், தொடக்க தொகுதியை முன்னோக்கி கொண்டு செல்வதில் ஊக்கியுமாகும். அது அடுத்த தலைமுறைக்கு அதிகாரமளிக்கும் நோக்கிலான, தொழில்நுட்ப தொழில் முயற்சியாளர்களுக்கு, தொழில் முனைவுக்கான ஆரம்பத்தை வழங்கும் வகையில் ‘10,000 Ideas’ எனும் தேசிய தொழில்நுட்ப புத்தாக்க திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. தொடக்க தொகுதியின் ஆரம்பிப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான பங்காளர்களுடன் இணைந்து ICTA இனால் வசதியளிக்கப்படும் இந்த ‘10,000 Ideas’ திட்டமானது, 2024 இற்குள் 1,000 தொழில்நுட்ப தொடக்கங்களை நிறுவுவதற்கான ICTA வின் தொலைநோக்கு இலக்கை அடைய உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முயற்சியின் மூலம், ICTA ஆனது பாடசாலை மாணவர்கள் முதல் அனைவருக்கும்,  அவர்களது தொழில்முனைவுப் பயணத்தைத் ஆரம்பித்து, அவர்களது புத்தாக்க வணிக யோசனைகளின் மூலம், அவர்கள் அனைவரையும் உலகளாவிய ரீதியில் மதிப்பைப் பெறும் வகையிலான தளத்திற்கு கொண்டு செல்லும் வகையில், அவர்களது யோசனைகளை வெற்றிகரமான வணிகங்களாக மாற்றுவதை உறுதிப்படுத்துகிறது. அவ்வாறு செய்வதன் மூலம், ICTA அதன் பங்காளர்களுடன் இணைந்து நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் உயர் தரமான மற்றும் உலகளாவிய ரீதியில் மதிப்பிடக்கூடிய வணிக யோசனைகளை உருவாக்கி தொழில்நுட்ப தொழில்முனைவோருக்கு உலகளாவிய அந்தஸ்தை எட்ட உதவுமெனெ நம்புகிறது. இந்த தனிநபர்கள் அல்லது குழுக்களை, ICTA ஆனது அதன் பங்காளர்கள் வலையமைப்புடன் இணைந்து அவர்களுக்கு அவசியமான வழிகாட்டல், பயிற்சி, நெட்வொர்க்கிங், நிதி வசதி போன்றவற்றை வழங்கி அவர்களுக்கு உரிய வசதிகளை அளிக்கும்.

ICTA இனது இந்நவீன தொழில்முனைவோர் திட்டம் குறித்து, ICTA வின் பிரதான டிஜிட்டல் பொருளாதார அதிகாரி அநுர டி அல்விஸ் தனது கருத்தை பகிரும்போது, “அடுத்த தலைமுறைக்கான வெற்றிகரமான தொழில்முனைவோருக்கான மேடையை அமைப்பதில் நாம் பெருமை கொள்கிறோம். தொழில்நுட்பம் அல்லது தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் வர்த்தக முயற்சிகள், உலகளாவிய அரங்கில் வெற்றிபெறுவதற்கான பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளதோடு, இதற்காக எமது பங்காளர்களுடன் இணைந்து எம்மால் முடிந்தளவிலான உதவிகளை வழங்கவும் காத்திருக்கின்றோம். ICTA ஆகிய நாம், புத்தாக்கம் மிக்க வணிக யோசனைகளை ஊக்குவிப்பதோடு இந்த ‘10,000 Ideas’ முன்முயற்சியின் கீழ் தொழில்முனையும் உங்களது பயணத்திற்கு வழிகாட்ட அதன் பங்காளர்களுடன் இணைந்து உதவும் என்பதே எமது முக்கிய செய்தியாகும். இது உண்மையில் ஒரு கூட்டு முயற்சியாகும் என்பதுடன், இதன் மூலம் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு நாம் பங்களிக்க முடியும் என்பதுடன் முயற்சியாளர்கள் அவர்களது தனிப்பட்ட அபிலாஷைகளையும் அடைய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.” என்றார்.

’10, 000 Ideas’ ஆனது, நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மேலும் மேலும் பல்லாயிரம் யோசனைகள் தோன்றுவதற்கான ஒரு தளத்தை உருவாக்கும் அதே வேளையில், இலங்கையில் தொழில் முனைவோரின் செயற்பாடுகளுக்கு ஆதரவான கட்டமைப்பை உருவாக்கி, சமுதாய நிறுவலையும், கல்வித் துறையையும், தொழில் முனைவோர் மூலம் மேம்படுத்துகிறது. அத்துடன் தலைமைத்துவ அணுகுமுறை மூலம் தாங்கள் ஒரு சிறந்த தொழில்முனைவோராக மாற வேண்டுமெனும் ஆர்வத்தை அவர்களின் இளம் வயதிலிருந்தே இது உருவாக்குகிறது.

IEEE Sri Lanka Section, மாணவர் செயல்பாடுகள் தலைவரான தம்மிக மாரசிங்க இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “IEEE Sri Lanka Section இனது 20 பல்கலைக்கழக மாணவர் கிளைகளின் வலுவான வலையமைப்பின் மூலம், பல்கலைக்கழக ரீதியிலான Hackathons மற்றும் IEEE Innovation Nation Sri Lanka போன்ற தேசிய அளவிலான திட்டங்கள் உட்பட பல யோசனை-நிலை திட்டங்களை நாம் செயல்படுத்தியுள்ளோம். இவற்றின் மூலமான ஈடுபாட்டுடன், ஒரு சிறந்த தரத்துடனான கட்டமைப்புடன், வழிகாட்டுனர்கள் மூலம் அவர்களின் யோசனைகளை அடையாளம் காணக்கூடிய அளவிற்கு கொண்டு வருவதற்கு, ஒரு குறிப்பிடும்படியான உதவியளிக்கும் தொகுதியொன்று இருப்பது அவசியம் என்பதை நாம் அவதானித்தோம்.”

“ஒரு யோசனையை அதன் தயாரிப்பு நிலை வரை கொண்டு செல்வதற்கு இடையேயான இடைவெளியை நிரப்புதல் எனும் நோக்கத்திலான ‘10,000 Ideas’ பிரசாரம், எதிர்கால தொழில்முனைவோரை யோசனை நிலையிலிருந்து அவர்களை உயரச் செல்ல அனுமதிக்கிறது. இந்த முயற்சியானது, இத்திட்டத்திலுள்ள ஒத்துழைப்பாளர்களிடமிருந்து தொடக்கத் துறைக்கான பாரிய ஆதரவை வழங்கும். இதன்மூலம், IEEE எனும் வகையில், நாம் இலங்கையின் பொதுவான குறிக்கோள்களை ஒன்றிணைந்து அடைதல் எனும் நம்பிக்கையில் இம்முயற்சியில் களமிறங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

Yarl IT Hub, Yarl Geek Challenge, ஏற்பாட்டு தலைவர், அபர்ணா கிருபானந்தா இத்திட்டம் பற்றி கருத்து வெளியிடுகையில், “இளைஞர்களுக்கு சில முக்கியமான பிரச்சினைகளை அடையாளம் காணவும், தொழில்நுட்பத்தின் உதவியுடன் தீர்வுகளைக் கண்டறியவும் அவர்களை ஊக்குவிக்க 10,000 Ideas ஆனது, ஒரு சிறந்த தொடக்கமாகும். இத்திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கட்டமைக்கப்பட்ட செயல்முறையானது, வழிகாட்டல்கள் மற்றும் உதவிகளை வழங்குவதன் மூலம், நிச்சயமாக ஒருவர் தனது யோசனைகளை உயிர்ப்பிக்கவும் அவர் சொந்தமாக ஒரு தொழிலை ஆரம்பிக்கவும் உதவும். இந்த நிறுவனங்கள் வளர ஆரம்பித்தவுடன், அவற்றின் மூலம் மேலும் பல வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். இத்திட்டத்தை நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் எடுத்துச் சென்று அடிமட்டம் வரை கொண்டு செல்வது மிகவும் முக்கியமாகும்.” என்றார்.

ICTA பற்றி

இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமான ICTA, முற்றுமுழுதாக இலங்கை அரசாங்கத்தின் கீழ் உள்ள நிறுவனம் என்பதுடன் அரசாங்கத்தின் மிக உயர்ந்த ICT நிறுவனமாகும். 2003ஆம் ஆண்டு 27ஆம் இலக்க தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பச் சட்டம், (ICT சட்டம்) 2008 ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க திருத்தப்பட்ட சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், ICT தொடர்பான அரசாங்கத்தின் கொள்கை மற்றும் செயற்றிட்டங்களை செயல்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க ICTA ஆனது கட்டளையிடப்பட்டுள்ளது. அத்துடன் ICTA ஆனது, அமைச்சரவைக்கு ICT தொடர்பான தேசிய கொள்கையை உருவாக்க உதவுவதுடன், அதன் உருவாக்கத்திற்கு தேவையான அனைத்து தகவல்களையும் வழங்குகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *