உத்தியோகபூர்வமாக உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது realme UI 3.0

முற்றிலும் மேம்பட்ட அனுபவம்

உலகின் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான realme, அதன் சமீபத்திய ஸ்மார்ட்போன் இயங்குதளமான realme UI 3.0 இனை கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டது. realme UI 3.0 ஆனது, இளைஞர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட ஒன்றாகும். இது  அன்ட்ரொய்ட் 12 இன் பல புதிய அம்சங்களைக் கொண்டுவருவதுடன், வடிவமைப்பு, தனிப்பயனாக்கம், தரவு தனியுரிமை, செயற்பாடு ஆகியவற்றில் பல்வேறு மேம்படுத்தல்களுடன் தங்கு தடையற்ற வேடிக்கையான தயாரிப்புக் எண்ணக்கருவை தொடர்ச்சியாக பேணிவருகிறது. மொத்தத்தில் இது realme பயனர்களுக்கு புத்தம் புதிய அனுபவத்தை வழங்குகிறது.

realme UI 3.0 இல், வடிவமைப்பு மிகவும் வெளிப்படையானதாகவும், அதன் தளவமைப்பு (layout) மிக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டுமொத்த UI அனுபவமானது, மிருதுவானதாக அமைந்துள்ளது. முதலாவதாக, புதிய 3D ஐகன் வடிவமைப்பின் காரணமாக ஐகன்கள் முற்றிலும் புத்துணர்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளன. அவுட்லைனிங் ஆனது, அதனை மேலும் எடுப்பாக காட்டுகிறது. அத்துடன் இளமையான உணர்வைக் கொடுக்கும் வகையிலான பாதியாக ஊடுருவித் தோன்றும் செமிட்ரான்ஸ்பரன்ட் முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த அனைத்து அம்சங்களும் உரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம், முழு ஐகன் வடிவமைப்பும் மிகவும் துடிப்பாகவும் முப்பரிமாணமாகவும் மாறியுள்ளது. UI 2.0 உடன் ஒப்பிடுகையில், இளைஞர்களின் பலதரப்பட்ட ஆளுமைகளுக்கு ஏற்றவாறு பரந்த அளவிலான வண்ணங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

அது மாத்திரமின்றி, realme UI 3.0 ஆனது, வெற்று இடத்தை வழங்கி (white space), தகவல் அடர்த்தியைக் குறைப்பதற்காக ஒரு இடம்சார்ந்த உணர்வைத் தரும் layout அமைப்பை கொண்டுள்ளது. அது மாத்திரமன்றி, தலைப்பின் அளவு மற்றும் குறியீட்டு சின்னம் மற்றும் எழுத்து மாறுபாடு ஆகியவை பயனர்களுக்கு அவர்கள் பெறும் தகவலின் முக்கியத்துவம் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்கான உணர்வை வழங்க மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் மிகவும் இனிமையான காட்சி அனுபவத்தை விளைவிக்கப்படுகிறது.

realme UI எப்பொழுதும் தனிப்பயனாக்கத்திற்கு அனுமதியளித்துள்ளது. ஐகன்கள், பின்புலங்கள், fonts உள்ளிட்ட ஏனைய அம்சங்கள் அனைத்தும் பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தனிப்பயனாக்கப்படக் கூடியதாக உள்ளது. தற்போது Realme UI 3.0 உலகளாவிய theme வண்ண தனிப்பயனாக்கலுக்கு இடமளிக்கிறது. பயனர்கள் தங்களுக்குப் பிடித்த எந்தவொரு வண்ண சாயல்களையும் theme நிறமாக தேர்ந்தெடுக்கலாம்.

இதன் AOD யும் மேம்படுத்தப்பட்டுள்ளது. பயனர்கள் ஒரு புகைப்படத்தைப் பதிவேற்றி, தனித்துவமான AOD வடிவமைப்பை அனுபவிக்கலாம். அதேசமயம், realme UI 3.0 ஆனது, எமது realme சின்னமான realmeow இன் AOD ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. பயனரை மிகவும் ஈர்க்கும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அனைத்து புதிய AOD பாணியை அனுபவிக்க முடியும்.

அது தவிர, realme UI 3.0 ஆனது பேய்கள், உணவுகள், அன்றாட வாழ்க்கை பொருட்கள் மற்றும் ஒரு பயனர் நினைக்கும் அனைத்தையும் உள்ளடக்கியவாறான பல Omoji களையும் ஆதரிக்கிறது. மேலும் realme UI 3.0 ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனங்களுக்கு சில புதிய டைனமிக் வோல்பேப்பர்களையும் கொண்டுள்ளது. எனவே பயனர்கள் இதன் மூலம் புதிய காட்சி அனுபவத்தை பெற முடியும்.

realme ஆராய்ச்சியின் படி, பெரும்பாலான பயனர்கள் realme UI 2.0 கொண்டுள்ள பாயி/திரவ நிலை அனுபவத்திற்கு அதிக விருப்பம் கொண்டவர்களாக காணப்படுகின்றனர். எனவே இது realme UI 3.0 இல் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. AI smooth engine (மிருதுவான எஞ்சின்) ஆனது, Realme UI 3.0 இல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது அனைத்திலும் மிருதுவான தன்மையையும் சேர்ப்பதுடன், அடிப்படை சுற்றில் மின் நுகர்வை குறைக்கிறது. நினைவக பயன்பாட்டின் மொத்த விகிதம் இதில் மேம்படுத்தப்பட்டுள்ளது. நினைவக முறையற்ற ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. AI நினைவக சுருக்கம்  ஒருங்கிணைந்த வள திட்டமிடல் ஆகியன காரணமாக, பல்வேறுபட்ட மென்பொருட்கள் புத்திசாலித்தனமான வகையில் தொடங்கப்படுகின்றன. இது நினைவகப் பயன்பாட்டை 30% குறைப்பதுடன், ஒட்டுமொத்த app-launch செயல்திறனை 10% இனால் அதிகரிக்கிறது அத்துடன் மின்கல ஆயுளை 12% ஆகவும் அதிகரிக்கிறது.

அத்துடன், அனிமேஷன்கள் சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளன. AI அனிமேஷன் எஞ்சின் ஆனது, ஒவ்வொரு அம்சங்களின் இயக்கம் மற்றும் வளைவுகளைக் கட்டுப்படுத்த, அதன் மாற்றத்தை தீர்மானிக்கிறது. அதன் வெளிப்பாடானது அதன் செயற்பாட்டு சைகையை மேலும் வசதியான வகையில் பின்பற்றுகிறது. இதனால், அது அதிக திரவ இயக்கத் தன்மையாக பேணப்படுகின்றது.

Floating Window 2.0 ஆனது realme UI 3.0 இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பயனர்கள் தங்கள் விருப்பப்படி மேலெழுந்த நிலையிலான விண்டோக்களை பேண உதவுவதுடன், பல்வேறு தொடர்பாடல் மற்றும் பயன்படுத்துகை சூழ்நிலைகளில் விண்டோக்களை நடைமுறை ரீதியாகவும் மேலும் வசதியானதாகவும் மாற்ற உதவும்.

பயனர்களின் தனிப்பட்ட தரவு மற்றும் தகவல் ஆகியன முன்னெப்போதையும் விட அதிக பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்த, realme UI 3.0 ஆனது அதன் தனியுரிமை செயல்பாடுகளையும் மேம்படுத்தியுள்ளது. realme UI 3.0 ஆனது உங்களுக்கு பிடித்த படங்கள் அல்லது வீடியோக்களை தனிப்பட்ட முறையில் பகிர அனுமதிக்கும் புதிய அம்சத்தைக் கொண்டுள்ளது. வாழ்க்கையின் தருணங்களைப் பாதுகாப்பாகப் பகிரும் வகையில், புகைப்படம் எடுக்கப்பட்ட இருப்பிடத் தகவல் மற்றும் நேரம், கெமரா மாதிரி மற்றும் settings உள்ளிட்ட புகைப்பட உள்ளடக்க தரவுகளை அழிக்க முடியும். செயலிகள் கோரும் அனுமதிகளுக்கான மேலதிக மட்டுப்பாடுகள் realme UI 3.0 இல் சேர்க்கப்பட்டுள்ளன. இருப்பிடத் தரவைப் பொறுத்தவரை, எடுத்துக்காட்டாக, இருப்பிடத் தனியுரிமையைப் பாதுகாக்க குறிப்பிடப்படாத இடங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன், வரைபட ரீதியான வழிமுறைகள் மூலம், செயலிக்கான தனியுரிமைச் செயற்பாடுகளைக் அவதானிக்க நுகர்வோரை அனுமதிக்கின்றன. பயனர்கள் செயலிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி எவ்வாறு பயன்படுத்தபடுகின்றன என்பதை ஆராய முடியும். செயலிகளின் அனுமதிகளின் பட்டியல் மற்றும் குறித்த ஒவ்வொரு செயலிகளினதும் பயன்பாடு பற்றிய விரிவான தகவல்களைப் பார்க்க முடியும். இதன் மூலம் பயனர்கள் அனைத்து அம்சங்களிலும் தனியுரிமைப் பயன்பாட்டில் தேர்ச்சி பெற அனுமதிக்கிறது.

###

realme பற்றி

realme ஆனது வளர்ந்து வரும்  உலகளாவிய நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமாகும். இது புதிய தொழில்நுட்பங்களை மிக இலகுவாக அடையும் வகையிலான உற்பத்திகளை வழங்கி, ஸ்மார்ட்போன் மற்றும் AIoT சந்தையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இது ஸ்மார்ட்போன்கள் மற்றும் வாழ்க்கைமுறைகளுக்கு அவசிமான பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களை உயர்ந்த அம்சங்களை உள்ளடக்கியவாறு, காலத்திற்கு ஏற்ற போக்கில், சிறப்பான வடிவமைப்புகளுடன், இளம் நுகர்வோருக்கு கட்டுப்படியாகும் விலையில் வழங்குகிறது.

2018 ஆம் ஆண்டில் Sky Li இனால் நிறுவப்பட்டு, அதன் “Dare to Leap” (முன்னேற பயமில்லை) எனும் உயிர் நாடிக்கு ஏற்ப, realme ஆனது, உலகின் 6ஆவது மிகப் பெரும் ஸ்மார்ட்போன் நிறுவனமாக மாறியுள்ளது. மேலும் இரண்டே வருடங்களில் உலகளவில் 15 சந்தைகளில் சிறந்த 5 ஸ்மார்ட்போன் தரக்குறியீடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. 2021 இன் இரண்டாம் காலாண்டு நிலவரப்படி, உலகளாவிய ரீதியில் சீனா, தென்கிழக்கு ஆசியா, தெற்காசியா, ஐரோப்பா, ரஷ்யா, அவுஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட 61 சந்தைகளில் realme தனது கால்தடத்தை பதித்துள்ளதுடன், 100 மில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய பயனர்களையும் அது கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலதிக தகவலுக்கு, www.realme.com இனைப் பார்வையிடவும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *