பெண்களின் பொதுவான 5 கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும் 100% இயற்கை மூலப்பொருட்கள் கொண்ட Kumarika Therapy எண்ணெய்

தரணியின் அன்றைய நாளுக்கான பணிகள் அதிகாலை 5.00 மணிக்கே ஆரம்பிக்கிறது. உடலை விரைவாக நீட்டி வளைத்த பின்னர், ஒரு குவளை நீரை பருகிவிட்டு, அவள் தனது காலை நேர தேநீரை தயாரிக்க சமையலறைக்குச் செல்கிறாள். அவள் தேநீரை குடித்தவாறு, அவளது அன்றைய நாளின் வேலைப்பளு மிக்க பணிகளை கண் முன்னே கொண்டு வருகிறாள். காலை உணவை தயார் செய்து, குழந்தைகளை எழுப்பி, குளித்து, 9 மணிக்குள் வேலைக்கு தயாராகி, Zoom வகுப்பில் குழந்தைகள் கவனம் செலுத்துகிறார்களா என பார்த்து, அவர்களை அதில் இணைத்து, மதிய உணவு தயாரித்து, அந்த அறிக்கையை முடித்து, இந்த மதிப்பீட்டை அனுப்பி, பணிக் குழுவுடன் விரைவான குழு அழைப்பொன்றில் இணைந்து, வீட்டுப் பாடம் செய்ய குழந்தைகளுக்கு உதவி, இரவு உணவை தயார் செய்து, நாளைய கூட்டங்களுக்கு தயாராகி என, காலையில் கால்கள் தரையைத் தொட்ட தருணத்திலிருந்து தரணியின் நாள் தொடர்ச்சியாக இவ்வாறே நகர்கிறது. அவள் தனது வெற்று குவளையை கழுவி, அவளது கூந்தலை முடிந்து கட்டியதைத் தொடர்ந்து தனது நாளை ஆரம்பிக்க முயற்சிக்கிறாள். இதன்போது அவளது விரல்களில் ஓரிரு முடிகள் சிக்கிக்கொள்கின்றன. தனது சேதமடைந்த, சிக்கு நிறைந்த கூந்தலில் விரல்களை விட்டவாறு, “நான் என் தலைமுடிக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும்,” என்று அவள் தனக்குத்தானே நினைத்துக்கொள்கிறாள். ஆயினும் அது இன்னொரு நாளாக கடந்து போகின்றது.

தரணியின் வழக்கமான நாட்களைப் போன்றதே, வேலைப்பளு கொண்ட, நூற்றுக்கணக்கான இவ்வாறான பெண்களின் தினசரி வாழ்க்கை அமைகின்றது. அவர்களின் வேலைப்பளு கொண்ட வாழ்க்கையானது, அவர்களின் ஆரோக்கியத்தை பாதித்துள்ளது. தற்போதைய தொற்றுநோய் நிலைமையின் போது, ​​ஒரு பெண்ணின் தினசரி வேலைகள் மேலும் அதிகரித்துள்ளன. அத்துடன், அதன் காரணமான மன அழுத்தமானது, பொதுவாக புறக்கணிக்கப்படுகின்ற கூந்தல் ஆரோக்கியத்தின் மூலம் நேரடியாக முடி பிரச்சினைகளைத் தூண்டுவதன் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. உரிய பராமரிப்பு வழங்கப்படாத கூந்தல் காரணமாக, கடுமையான வரட்சி, பொலிவின்றிய தன்மை, கூந்தல் உடைவு, கரடு முரடான தன்மை, பிளவடைந்த முனைகள் உள்ளிட்ட பிரச்சினைகளை பெண்கள் அனுபவிக்கிறார்கள்.

வெப்ப காலநிலைக்கு உரித்தான நமது நாட்டில் வெயில், மற்றும் தூசி, மாசடைந்த நீர், வாயு சீராக்கி (A/C) சூழல்களுக்கு தொடர்ந்தும் வெளிப்படுதல் போன்ற காரணங்களால் எமது கூந்தல் பல்வேறு போராட்டங்களை எதிர்கொள்கிறது. தொடர்ந்து மாற்றமடையும் வானிலை மற்றும் சூழல் காரணமாக, உங்கள் தலைமுடியிலிருந்து நீரிழப்பு ஏற்பட்டு, கூந்தல் வரட்சி மற்றும் பொலிவின்மைக்கு வழிவகுக்கிறது. அடர்த்தியாக எண்ணெய் தடவி, நம் கூந்தலுக்கு அவசியமான ஒரு மென்மையான மசாஜ் செய்து, அதன் பிரகாசத்தையும் ஆரோக்கியத்தையும் பேணி வந்த நாட்கள் கடந்துவிட்டன. எமது வேலைப்பளு மிக்க வாழ்க்கையில், நமது ஆரோக்கியமான சருமம் மற்றும் கூந்தலை பராமரிக்க நேரம் ஒரு பற்றாக்குறையாக அமைந்து வருகின்றது.

நுகர்வோரின் மாறிவரும் தேவைகளைப் புரிந்துகொண்டு, இலங்கையின் முதற்தர கூந்தல் பராமரிப்பு வர்த்தகநாமமான குமாரிகா, எளிதானதும், நேர விரயமற்றதுமான கூந்தல் பராமரிப்புடன் செயற்படுகிறது. புதிய Kumarika Therapy (குமாரிகா சிகிச்சை) எண்ணெய் வகையானது, இலங்கையர்களின் கூந்தல்களின் வகைகளுக்காக விஞ்ஞான ரீதியாக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், இது, பாதாம் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், செம்பருத்தி எண்ணெய், அர்கான் எண்ணெய், தூய தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து சக்திவாய்ந்த இயற்கை எண்ணெய்களின் கலவையாக தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய்கள் இலங்கை பெண்களின் அதிகரித்து வரும் கூந்தல் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஒன்றிணைந்து செயற்படுகின்றன. பாதாம் எண்ணெயானது, விற்றமின் B7 நிறைந்தது, அது முடியை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருப்பதுடன், சேதமடைந்த மயிர்க்கால்களை சரிசெய்கிறது. ஒமேகா-6 கொழுப்பமிலங்கள் நிறைந்த ஆமணக்கு எண்ணெய், கூந்தலின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தி, முடி வளர்ச்சியை உருவாக்குவதுடன், முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்கும் வகையிலான ஈரப்பதனை வளங்குகிறது. செம்பருத்தி எண்ணெய், கெரட்டினை உற்பத்தி செய்து சேதமடைந்த முடியை சரிசெய்து, முடியின் நிறத்தை பராமரிப்பதுடன், முடி உதிர்வதைக் குறைக்கும் வகையில் முடியை தடிப்பமாக்குகிறது. பிரபலமான அர்கான் எண்ணெய், ஒரு சிறந்த ஈரப்பதனாக்கியாக செயற்படுவதுடன், ஆரோக்கியமான கூந்தலை ஊக்குவிக்கும் வகையில் உச்சந்தலை வரண்டு போவதை எதிர்த்துப் போராடுகிறது. பல வருடங்களாக இலங்கை பெண்கள் பயன்படுத்தும் இயற்கையான கூந்தல் தீர்வான தூய தேங்காய் எண்ணெய், புரத இழப்பிலிருந்து முடியைப் பாதுகாக்க உதவுவதுடன், கூந்தல் உதிர்வதைக் குறைக்கிறது. அத்துடன் ஈரப்பதத்தை மீள வழங்குவதன் மூலம் முடி வளர்ச்சியைத் தூண்டுகின்றது. தேங்காய் எண்ணெயானது, தூசி, புகை மற்றும் நேரடி சூரிய ஒளி உள்ளிட்ட வெளிப்புற தீங்குகளிலிருந்து முடியைப் பாதுகாத்து, பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான தோற்றத்தை வழங்குகின்றது.

100% இயற்கை எண்ணெய்கள் கொண்ட குமாரிகா தெரபி எண்ணெய், முடி சேதத்தை சரிசெய்வதில் உறுதியாக உள்ளதுடன், அதன் வசதியான பயன்பாட்டிற்காக, எண்ணெயிடும் சீப்பு  முனையுடனான போத்தலில் வருகிறது. இந்த கூந்தல் சிகிச்சை எண்ணெயை குளிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன், உங்கள் தலைமுடியில் ஊறவிடுவதன் மூலம், உங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கலாம். குமாரிகா ஒரு உண்மையான இலங்கை வர்த்தகநாமம் ஆகும். இது இயற்கையை மையமாகக் கொண்ட குணப்படுத்தலின் பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்துகிறது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை பெண்களின் கூந்தல் பராமரிப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் இந்த பாரம்பரிய தரக்குறியீடானது, 21ஆம் நூற்றாண்டு பெண்களுக்கான நவீன தீர்வுகளுடன் பாரம்பரிய கூந்தல் பராமரிப்பு நடைமுறைகளை உள்ளடக்கியதாகும். 100% இயற்கை எண்ணெய்களுடன் வடிவமைக்கப்பட்ட புதிய Kumarika Therapy எண்ணெயானது, கட்டுப்படியாகும் கூந்தல் பராமரிப்பிற்காக, 70ml போத்தலில் ரூ. 300/- இற்கு கிடைக்கிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *