இலங்கையில் வாகனங்களுக்கான சேவைகளில் புரட்சியை ஏற்படுத்தவுள்ள Sterling Steorra செயலி

இலங்கையின் முன்னணி கார்களுக்கான சேவை வழங்குனரும் தொழிற்துறையின் முன்னோடியுமான Sterling Automobiles, எந்தவொரு காருக்கான சேவையினையும் விரல் நுனியிலேயே மேற்கொள்ளக் கூடிய  ‘Steorra’  மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. நவீன தொழில்நுட்பத்துக்கு இணையாக திகழும் வகையில் இந்த இலட்சிய டிஜிட்டல் முன்னெடுப்பை ஆரம்பித்துள்ளது. இலகுவாகவும் சௌகரியமாகவும் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் புத்தம் புதிய மொபைல் செயலியின் அறிமுகம் மற்றும் மேம்படுத்தப்பட்ட இணையதளம் தொடர்பில் Sterling Automobiles அறிவிப்பை மேற்கொண்டுள்ளது. டிஜிட்டல் மயமாக்கலுக்குள்ளாகி வரும் வேகமான உலகில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆதரவை வழங்குவதில் தொடர்ந்து உறுதியாக உள்ளதுடன், தனது புதுமையான Steorra மொபைல் செயலி மற்றும் sterling.lk இணையத்தளம் மூலம் வசதியான மற்றும் திறமையான சேவையை வழங்குவதை  Sterling Automobiles நோக்கமாகக் கொண்டுள்ளது.

புதிய மொபைல் செயலி மற்றும் இணையத்தளம் வாடிக்கையாளர்களுக்கு சேவை முன்பதிவு செய்ய, அவர்களின் வாகனங்களின் பராமரிப்பு விபரம், விபத்து பழுதுகளுக்கான மதிப்பீடுகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட வாகன சேவைக்கான கூறுவிலையை பெற, 24 மணி நேர வீதியோர உதவி குழுக்கள் அல்லது வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளவும். அணிகள், ஒன்லைனில் பணம் செலுத்தவும், கிளை வலையமைப்பை அணுகவும், மேலும் பல சேவைகளை அவர்களின் விரல் நுனிக்கே கொண்டு வரவும் உதவும். Steorra செயலியானது பாவனையாளர்களுக்கு நாளின் எந்த நேரத்திலும் சேவைகள் மற்றும் உதிரிபாகங்களின் விலை விவரங்களை முழுமையாக வழங்கி உதவுகிறது. செயலி மற்றும் இணையthதளம் வழியாக வாடிக்கையாளர்கள் ஒன்லைனில் பணம் செலுத்தலாம். இவை அனைத்து தொடு புள்ளிகளிலும் வசதியையும் செயல்திறனையும் உறுதிசெய்வதுடன், வாடிக்கையாளர்களுக்கு முன்னெப்போதையும் விட ஒரு சிறப்பான சேவையை அனுபவிக்க உதவுகிறது.

தனது தொழிற்பரப்பில் எப்போதும் புத்தாக்கத்தை மேற்கொள்ளும் நிறுவனம் என்ற வகையில், இந்த சேவைகளானது நுகர்வோரின் அனுபவத்தை மேம்படுத்தும் என நிறுவனம் நம்புகின்றது. Sterling Automobiles அதன் பயணத்தை ஆதரித்த வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே நேரத்தில் வாடிக்கையாளரின் சௌகரியம், வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை உறுதிசெய்கிறது. மேலும் அவர்களின் கார் தொடர்பான விடயங்களில் நேரத்தையும் சக்தியையும் மீதப்படுத்துகின்றது. இந்த புதுப்பிக்கப்பட்ட இணையத்தளம் மற்றும் “Steorra” மொபைல் செயலியின் அறிமுகத்தின் நோக்கம் எல்லா நேரங்களிலும் வசதியான சேவைகளை வழங்குவதாகும். இந்த முழு அளவிலான மொபைல் செயலி மற்றும் இணையத்தளம் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்கள் பற்றிய விரிவான தகவல்களை நிகழ்நேரத்தில் அணுக அனுமதிக்கிறது. இந்த இணையத்தளம் ஒரு தனித்துவமான நுட்பமானதுமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது எல்லா சாதனங்களிலும் எளிதாக இயங்குகின்றது. இந்த தளங்கள் வாடிக்கையாளர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் என்று நிறுவனம் தெரிவிக்கின்றது.

Sterling இன் புதிய இணையத்தளமானது வாடிக்கையாளர்களுக்கு நிறுவனத்தின் சமூக ஊடக பக்கங்களுடன் இணைவதற்கும், அண்மைய செய்திகள், எதிர்கால நிகழ்வுகள் மற்றும் ஊக்குவிப்பு சலுகைகள் பற்றியும் அறியத்தரும்.

இந்த டிஜிட்டல் தளங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், Sterling Automobiles – நம்பிக்கையுடன் வாகனம் செலுத்த உத்தரவாதம் அளிக்கும் உங்கள் மிகவும் நம்பகமான ஒட்டோமொபைல் பங்குதாரர் – உங்கள் அனைத்து ஒட்டோமொபைல் தேவைகளையும் விரைவாகவும் திறமையாகவும் பூர்த்தி செய்ய தயாராக உள்ளது. முழுமையான டிஜிட்டல் மயமாக்கப்பட்ட சூழலில் தானியங்கி வாகன சேவை மற்றும் பழுதுபார்க்கும் வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதன் மூலமும் இந்த நிறுவனம் எதிர்காலத்தில் தனது சேவை தளங்களை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்க்கின்றது.

Sterling மொபைல் செயலி தற்போது Google Play மற்றும் Apple App Store இல் தரவிறக்கம் செய்ய கிடைக்கின்றது. மேலும் விபரங்களுக்கு, www.sterling.lk இற்கு விஜயம் செய்யுங்கள் அல்லது அழையுங்கள் 0117 600 800.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *