உலக அரங்கிற்கு செல்லும் இலங்கையின் பாரம்பரிய அரிசி அடிப்படையிலான, முதலாவது சருமப் பராமரிப்பு தயாரிப்பு Vivya

உலகில் முதன்முதலாக இலங்கை பாரம்பரிய அரிசி உள்ளடங்கிய சருமப் பராமரிப்பு தீர்வு வகையான விவ்யா (Vivya), தெற்காசிய சந்தையிற்கும் அதனைத் தாண்டியும் செல்ல தயாராகியுள்ளது.

முற்றுமுழுதாக இலங்கையில் தயாரிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட விவ்யா, இலங்கையின் வீடுகள் மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands குழுமத்தின் புத்தாக்க கண்டுபிடிப்பாகும். விவ்யா தயாரிப்பு வகைகளானவை, தனித்துவமான, முற்றிலும் புரட்சிகரமான, சருமப் பராமரிப்பு தீர்வாகும். காரணம், விவ்யா பெண்கள் விரும்பும் சருமத்தின் இளமைப் பொலிவை உருவாக்குகின்ற, இலங்கையின் பாரம்பரிய அரிசியின் சக்தி வாய்ந்த மூலப்பொருளை அடிப்படையாகக் கொண்ட உலகின் முதல் சருமப் பராமரிப்பு வகைகளாகும்.

விவ்யா Day cream, Facial serum, Face wash, Night cream, Cleanser ஆகிய தயாரிப்பு வகைகளை உள்ளடக்கியதாகும். முழு தயாரிப்பு வகைகளிளும் இலங்கையின் இயற்கையான பாரம்பரிய அரிசியிலிருந்து கவனமாக பெறப்பட்ட போசாக்கு மற்றும் தோலை பிரகாசமாக்கும் பண்புகள் உட்செலுத்தப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்பட்ட இலங்கை அரிசி வகைகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட இம்மூலப்பொருட்கள், பின்னர் ஒரு தனித்துவமான தொழில்நுட்ப செயல்முறையின் மூலம் வலுப்படுத்தப்படுவதன் விளைவாக “Golden Trice Blend” எனும் சக்திவாய்ந்த தீர்வாக விவ்யாவில் உள்ளடக்கப்படுகிறது.

விவ்யா தயாரிப்புகள் ஏற்கனவே மாலைதீவு மற்றும் அமீரகத்தில் சருமப் பராமரிப்பு தீர்வுகளை தேடும் நபர்களின் இதயங்களை வென்றுள்ளன. உலக சந்தையில் விவ்யாவின் வருகையானது, இலங்கையின் ஏற்றுமதித் துறையில் அழகுசாதனப் பொருளொன்றின் புதிய இணைவை காட்டுகின்றது. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் சுரேஷ் டி மெல் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில்: “Hemas Consumer நிறுவனத்தின் புதிய முயற்சி தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கையின் பாரம்பரிய அழகுப் பராமரிப்பு மூலப்பொருட்களால் ஈர்க்கப்பட்ட நவீன கால சருமப் பராமரிப்பு தீர்வுகள், தற்போது உலகளாவிய சருமப் பராமரிப்பு சந்தைகளில் கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய புத்தாக்கமான தயாரிப்புகள் எமது சிறிய தீவை, உலக சரும பராமரிப்பு சந்தையின் இதயம் வரை கொண்டு செல்ல வழிவகுத்துள்ளன. இந்த  புரட்சியை ஏற்படுத்திய இலங்கை குழுவினருக்கு EDB தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.” என்றார்.

இலங்கையில் 1,500 இற்கும் மேற்பட்ட பாரம்பரிய அரிசி வகைகள் உள்ளதுடன், இவற்றில் பல அரிசிகள் அவை கொண்டுள்ள உயர் போசாக்கு பண்புகளுக்காக மட்டுமல்லாமல், சருமத்திற்கு உகந்த இளமையானதும், பிரகாசத்தை உருவாக்கும் (antioxidants), சருமத்தில் உள்ள கலங்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு உதவும் சக்தி காரணமாகவும் புகழ் பெற்று விளங்குகின்றன. விவ்யாவில் உட்செலுத்தப்பட்டுள்ள இவ்வாறான பாரம்பரிய அரிசிகளின் பண்புகள், பொலிவற்ற மற்றும் சோர்வான சருமத்தை, மீண்டும் அதன் அழகிய இளமைப் பொலிவுடன் மீட்டெடுக்கும் வகையிலான பராமரிப்பு சக்தியை அளிக்கிறது.

Hemas Consumer Brands இனது, வணிக அபிவிருத்தி மற்றும் புத்தாக்க பணிப்பாளர் சப்ரினா யூசுபலி தெரிவிக்கையில், “சந்தையில் உள்ள 90% இற்கும் அதிகமான தயாரிப்புகள் தோலை வெளிறச் செய்வதை இலக்காகக் கொண்டிருப்பதால், இலங்கையிலுள்ள பெண்கள் அவர்களது சருமப் பராமரிப்புத் தேவைகளை பூர்த்தி செய்ய, குறிப்பிட்ட ஒரு சில தெரிவுகளே காணப்படுகின்றன. Hemas Consumer Brands இனது விவ்யா தயாரிப்புகள் இவ்வாறான வழக்கமான கண்ணோட்டத்தை மாற்றியமைத்துள்ளது. பெண்களின் வயது, தோலின் நிறம் அல்லது தோலின் தொனி வேறுபாடுகளை கருதாமல், அவர்களின் தோலின் அழகு மற்றும் பன்முகத்தன்மையைப் பராமரிப்பதில் உயிர்ப்பாக செயற்படுகிறது. இங்கு முக்கிய விடயம் யாதெனில், இலங்கையின் பாரம்பரிய அரிசியில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பெறுமதி மிக்க சருமப்ப பராமரிப்பு கூறுகளின் சக்தியை, விவ்யாவினால் கண்டறியப்படும் வரை உலகளாவிய ரீதியில் அவை யாராலும் அறியப்படவில்லை. மூன்று வகையான பண்டைய இலங்கை பாரம்பரிய அரிசியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பொருட்களின் தீர்வானது விவ்யாவில் காணப்படும் தனித்துவமான “Golden Trice Blend” கலவையை விளைவிக்கிறது.” என்றார்.

இது கண்ணுக்கு தெளிவாக புலப்படும் மேம்பட்ட மாற்றத்தைக் காண்பித்ததாக, சந்தைக்கு தயாராகியுள்ள விவ்யா தயாரிப்புகளை பயன்படுத்தி சோதனை செய்த நுகர்வோர் தெரிவித்துள்ளனர். மருத்துவ பரிசோதனைகளின் போது, ​​தோலின் பிரகாசத்திற்கு அவசியமான முக்கிய கூறுகளான ஈரப்பதன், பிரகாசம், தோற்ற அமைப்பு ஆகியவற்றில் தெளிவாக தென்படக்கூடிய மாற்றங்களை இரண்டு வாரங்களில் விவ்யா  காண்பித்துள்ளது.

விவ்யா, தற்போது Hemas E-stores (இணையவழி) விற்பனையகங்களில் கிடைக்கிறது https://hemasestore.com/brand/vivya அத்துடன், ஃபேன்சி ஸ்டோர்கள், அழகுசாதன விற்பனையாளர்கள், பலசரக்குக் கடைகள், மருந்தகங்கள், பல்பொருள் அங்காடி வலையமைப்புகள், போன்ற தெரிவு செய்யப்பட்ட விற்பனை நிலையங்களிலும் கிடைக்கின்றன.

Hemas Consumer Brands பற்றி

Hemas Consumer Brands ஆனது, வீடு மற்றும் தனிப்பட்ட பராமரிப்புத் துறையில் மிகப் பெரும் இலங்கை நிறுவனமாகும். 70 ஆண்டுகளுக்கும் மேலான உயர்ந்த பாரம்பரியத்துடன், வலுவான நோக்கம் கொண்ட தரக்குறியீடுகள் கொண்ட தயாரிப்புகள் மற்றும் முற்போக்கான நிலைபேறான தன்மையான நடைமுறைகள் மூலம், நுகர்வோர் இதயங்களை அது வென்றுள்ளது. அது உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளின் வரிசைகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு தீர்வுகளை வழங்கி வருகிறது. வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட  புத்தாக்கம் மிக்க குழுக்கள் மூலம், உள்ளூர் தேவைகளை அறிந்து அதன் மூலம் சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவது தொடர்பில் அது பாராட்டைப் பெற்றுள்ளது.

பல முன்னணி தரக்குறியீடுகளை தன்னகத்தே கொண்டு வலுப்பெற்றுள்ள Hemas Consumer Brands ஆனது, Aya பெண்களின் சுகாதாரம், புற்றுநோயாளிகளுக்கான குமாரிகா சொந்துறு திரியவந்தி போலி சிகை நன்கொடைத் திட்டம், பேபி செரமியின் முற்போக்கான பெற்றோருக்குரிய முன்முயற்சி போன்ற பல சமூக ரீதியான திட்டங்களை முன்னெடுத்து, தனது முயற்சிகளின் மூலம் புதுமைகளை உருவாக்கி மக்கள் வாழ்க்கையில் இடம்பிடித்துள்ளது. Hemas Consumer Brands சிந்தனையின் மூலம் புரட்சிகரமான தயாரிப்புகளான Vivya பாரம்பரிய அரிசி அடிப்படையிலான சருமப் பராமரிப்பு தயாரிப்புகள் மாத்திரமன்றி இயற்கை மீது அக்கறை கொண்டு Dandex Handy, Kumarika Poddi ஷாம்பு வகைகளின் பொதியிடல் மூலம், ஒற்றை உபயோக பிளாஸ்திக் பொதிகளின் பயன்பாட்டை இல்லாதொழித்து, பசுமையான தேசத்திற்கான அதன் அர்ப்பணிப்பை அது காண்பிக்கிறது. அந்த வகையில், அனைத்து இலங்கையர்களுக்கும் மிகவும் நிலைபேறான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய எதிர்காலத்திற்கு பங்களிப்பதனை நோக்காகக் கொண்டு, நிறுவனம் பல வழிகளிலும் முற்போக்காக செயற்பட்டு முன்னணியில் திகழ்கிறது.

#ENDS#

Photo Caption :- 

(இடமிருந்து வலமாக) திருமதி. சித்ராஞ்சலி திஸாநாயக்க – பணிப்பாளர் நாயகம், ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, சுரேஷ் டி மெல் – தலைவர், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, திருமதி சப்ரினா யூசுபலி – Hemas Consumer Brands வணிக அபிவிருத்தி மற்றும் புத்தாக்க பணிப்பாளர், மொஹமட் ஷப்ராஸ் – Hemas Consumer Brands சர்வதேச வணிகத் தலைவர்

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *