DIMO விடமிருந்து TATA LPK 1618 டிப்பர்களை கொள்வனவு செய்யும் Edward & Christie குழுமம்

நாட்டின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றும் இலங்கையில் TATA வாகனங்களுக்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தருமான DIMO, அண்மையில் இருபத்தைந்து (25) TATA LPK 1618 டிப்பர்களை Edward & Christie குழுமத்திற்கு விநியோகித்துள்ளது. அத்துடன் மேலும் 15 டிப்பர்களை அந்நிறுவனம் கொள்வனவுக்காக கோரியுள்ளது.

Edward & Christie குழுமத்திற்கு வழங்கப்பட்ட 25 டிப்பர் வாகனங்களும் பிரதானமாக கட்டுமானம் மற்றும் சுரங்கத் தொழிலுக்காக வழங்கப்பட்டுள்ளன. இது Cummins ISBe 5.9 180 40 எஞ்சினைக் கொண்டுள்ளதுடன், இது உச்சபட்சமாக 180 குதிரை வலுவையும் கொண்டுள்ளது. TATA LPK 1618 டிப்பரின் மொத்த வாகன எடை 16,200Kg ஆகும். அதன் என்ஜின் திறன் 5883cc என்பதுடன், இது BS IV புகை வெளியேற்ற தரநிலைகளுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 6F இலிருந்து மாற்றமடைந்து, வலுவான reverse Elliot வகை முன் அச்சு மற்றும் TATA RA – 109 RX வலுவான முன் அச்சு, முன் மற்றும் பின்புற அதிர்ச்சி உறுஞ்சிகள், அரை-நீள்வட்ட ஸ்பிரிங் ஆகியவற்றுடனான இந்த டிப்பர்கள் வாயு சீராக்கி (A/C) மற்றும் காற்றோட்ட தெரிவுகளுடனான கெபினுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதன் மூலம், சாரதிகள் நீண்ட தூரத்திற்கு சோர்வின்றி பயணிக்க உதவுகின்றது. இதன் காரணமாக, இது சிறந்த உற்பத்தித்திறனுக்கு வழிவகுக்கிறது. TATA டிப்பர் ஆனது பவர் ஸ்டீயரிங் உடன் வருவதுடன், 42% எனும் உயர்தரத் திறனுடனான LPK 1618 டிப்பரானது, எளிதில் கையாளப்படக் கூடிய ஒரு அருமையான தெரிவாக அமைகிறது.

Edward & Christie குழுமத்தின் தலைவரான கிறிஸ்டி அரவ்வல தெரிவிக்கையில், “DIMO விடமிருந்து TATA LPK 1618 டிப்பர்களை நாங்கள் தெரிவு செய்யக் காரணம், இவ்வாகனங்கள் சிறந்த GVW இனை கொண்டுள்ளதனால் அவை வீதியில் வேகமாகச் செயற்படக் கூடியன. A/C உடன் கூடிய வசதியான சாரதி அறையுடன் வரும் இது, மிகக் குறைந்த பயன்பாட்டுச் செலவை கொண்டுள்ளன. மிக முக்கியமாக அதிக பெறுமதியுடன் கூடிய மீள் விற்பனை, DIMO உத்தரவாதம், விற்பனைக்குப் பின்னரான சேவை வலையமைப்பு ஆகிய காரணங்கள், நாம் எமது முடிவை எடுப்பதில் பெரும் பங்கை வகித்தன.” என்றார்.

வாகனங்களை கையளிக்கும் விழாவில், DIMO குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கஹநாத் பண்டிதகே தனது கருத்தை தெரிவிக்கையில், “உலகத் தரம் வாய்ந்த LPK 1618 டிப்பர் வாகனங்கள், இந்தியாவின் வர்த்தக வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ள TATA Motors நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன. அத்துடன், TATA LPK 1618 BLASTER டிப்பர் ஆனது, அதன் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் குறைந்தபட்ச பயன்பாட்டு மற்றும் பராமரிப்பு செலவுகளுடன் இலங்கையின் கட்டுமான மற்றும் சுரங்கத் தொழிலை மாற்றியமைத்து, அதனை மேம்படுத்தியுள்ளது. புத்தம் புதிய வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட சொகுசு நிலை ஆகியன காரணமாக, சாரதிகளுக்கு ஏற்படும் சோர்வு அதிகளவில் குறைக்கப்படுகிறது. DIMO வின் ஒப்பிட முடியாத விற்பனைக்குப் பின்னரான சேவையின் பங்களிப்புடன், இலங்கை வாடிக்கையாளர்களின் அனைத்து வாகன தேவைகளுக்கும் ஏற்றவாறான அனைத்து TATA வர்த்தக வாகன வகைகளையும் இலங்கைக்குக் கொண்டு வருவதற்கான அதிகாரத்தை DIMO கொண்டுள்ளது.” என்றார்

சிறிய வர்த்தக ட்ரக்குகள் (1 தொன்னுக்கும் குறைவான பாரத்தை ஏற்றும்), single cabs (குடும்ப தேவைக்கும் பல்வேறு வணிக பயன்பாடுகளிலும் பயன்படுத்த), இலகுரக வர்த்தக ட்ரக்குகள் (பெட்டி சட்டக நீளம் 10 அடி முதல் 20 அடி வரை மாறுபடும்), கனரக வர்த்தக ட்ரக்குகள், கனரக வர்த்தக டிப்பர்கள், பிரைம் மூவர்ஸ் மற்றும் பஸ்கள் (28 முதல் 54 ஆசனங்கள்) ஆகியன TATA வர்த்தக வாகன வகைகளில் அடங்குகின்றன.

Edward & Christie குழுமம் 1979 இல் உருவாக்கப்பட்டதுடன், தனது வாய்ப்புகளை அடையாளம் கண்டு, பலரையும் தாண்டி தங்கள் நிறுவனம் ஒரு நாள் நாட்டின் சந்தையில் முன்னணியில் திகழும் வகையிலான இலங்கைக்கான தொலைநோக்கு பார்வையை கொண்டுள்ளது. நிறுவனத்தின் ஆரம்ப வருடங்களில் ஏற்பட்ட பல்வேறு ஏற்றத் தாழ்வுகளின் மூலம், Edward & Christie குழுமம் தங்கள் தொலைநோக்கில் வலுவான நம்பிக்கையைப் பேணியதுடன், தமது வாடிக்கையாளர்களுக்கான அர்ப்பணிப்பு அல்லது தரத்தில் ஒருபோதும் விட்டுக்கொடுப்பை மேற்கொள்ளாது செயற்பட்டு வந்தது. அதன் பின்னரான வருடங்களில், இலங்கைக்கான அவர்களின் தொலைநோக்குப் பார்வை யதார்த்தமாக மாறத் தொடங்கியது. அதனுடன் இணைந்தவாறு கட்டுமானத் துறையில் ஒரு வளர்ச்சி ஏற்பட்டதுடன், நாடு ஒரு வணிக மையமான அங்கீகாரத்தைப் பெற்றது. ஆரம்பத்தில், நெடுஞ்சாலை கட்டுமானம், நீர்ப்பாசனம், நில ரீதியான வடிகாலமைப்பு, மழை நீர் வடிகாலமைப்பு கட்டுமானம், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு பணிகள், அகழ்வாராய்ச்சி மற்றும் நில சீரமைப்பு போன்ற சேவைகளை அரசாங்க துறை நிறுவனங்களுக்கு வழங்கிய Edward & Christie குழுமம், தனது மூலோபாயத்தில் இருந்து விலகி, தனியார் துறைக்கும் அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்க முடிவு செய்தது.  Edward & Christie குழுமம் அதிவேக வளர்ச்சியுடன் 1990 இல் பதல்கமவில் ஒரு முழுமையான இயந்திர தொழிற்சாலையை அமைத்தன் மூலம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர் தரமான தீர்வுகளை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தியது. Edward & Christie குழுமமானது, நெடுஞ்சாலை மற்றும் வீதி கட்டுமானத் துறையில், கட்டுமானத் தொழில்துறை அபிவிருத்தி அதிகாரசபையினால் (CIDA) வழங்கப்படும் கௌரவமிக்க CS2 தரத்தைப் பெற்றுள்ளது. இது இத்துறையில் மிக உயர்ந்த சான்றிதழ் என்பதுடன், அது தொழில்துறையில் மிகச் சிறந்தவர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகிறது. தற்போது Edward & Christie Engineering Solutions மற்றும் C-COM Equipment (Pvt) Ltd ஆகியன, குழும செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய நிறுவனங்களைக் கொண்ட குழுமமாக வலுவடைந்து நிற்கின்றன.

Edward & Christie குழுமத்தின் தலைவர் கிறிஸ்டி அரவ்வல மேலும் தெரிவிக்கையில், “கட்டுமானம் மற்றும் சுரங்கத் தொழில்துறை, கனரக பொறியியலில் அனுபவம் வாய்ந்த அர்ப்பணிப்புள்ள நிபுணர்களின் குழுவை நிறுவனம் கொண்டுள்ளதன் காரணமாக, நிறுவனம் வாடிக்கையாளர் திருப்தியை அதிகரிக்கும் வகையில் சேவையை வழங்குவதற்கு பலதரப்பட்ட கோரிக்கைகளை சாதகமான வகையில் பூர்த்தி செய்ய உதவுகிறது. அத்துடன் ஏற்கனவே காணப்படும் ஐம்பது (50) TATA வாகனங்களுடன், தற்போது புதிய டிப்பர்களை இணைப்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்” என்றார்.

TATA Motors India மற்றும் DIMO ஆகியவை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த ஒரு வலுவான உறவைக் கொண்டுள்ளன. TATA வர்த்தக வாகனங்கள் பலதரப்பட்ட இலங்கையர்களின் அன்றாட வாழ்வில் முக்கிய பங்ககு வகிகிக்கின்றன. TATA வர்த்தக வாகனங்கள், அது பயன்படுத்தப்படும் பெரும்பாலான துறைகளின் அடிப்படையில் சந்தையில் முன்னணியில் உள்ளது. DIMO – TATA தற்போது 19இற்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் 400 இற்கும் மேற்பட்ட முகவர்களுடன், நாடு முழுவதும் TATA விற்பனை, சேவை, அசல் உதிரிக் பாகங்களை வழங்குவதனை நோக்காகக் கொண்டு, அதன் மதிப்புமிக்க TATA வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான 24 மணிநேர வீதி உதவிச் சேவையையும் மேற்கொள்கின்றது.

END

Photo Caption

உத்தியோகபூர்வமாக வாகனங்களை கையளிக்கும் நிகழ்வில், கஹநாத் பண்டிதகே (Group CEO – DIMO) மற்றும் கிறிஸ்டி அரவ்வல (Group Chairman – Edward & Christie Group) ஆகியோருடன், DIMO, Edward & Christie, TATA Motors ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *