Imou Wi-Fi கெமராக்களுக்கான இலங்கையின் ஏக பிரத்தியேக விநியோகஸ்தராக Singer நிறுவனம் நியமனம் பெற்றுள்ளது

நாட்டின் முதற்தர நுகர்வோர் சாதன விற்பனையாளரான Singer Sri Lanka,   சி.சி.டிவி கெமராக்கள், Smart Alarm  அமைப்புகள் மற்றும் மேலும் பல உபகரணங்களை உள்ளடக்கிய  Imouவின் விரிவான Smart IoT (Internet of Things) பாதுகாப்பு தீர்வுகளை இலங்கை முழுவதும் வழங்கும் ஏக விநியோகஸ்தராக அந்நிறுவனத்துடன் இணைந்து கொண்டுள்ளது.

Imou உலகளாவிய IoT பாவனையாளர்களுக்கு Imou Cloud, ஸ்மார்ட் சாதனங்கள் மற்றும் அறிவார்ந்த தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய “3-in-1” வணிக அமைப்பினை வழங்குகின்றது. வீடு, சிறிய மற்றும் நடுத்தர வணிக (SMB) பாவனையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட Imou பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ற விரிவான Smart IoT தீர்வுகளை வழங்குகிறது. அதன் Open Cloud தளம் மூன்றாம் தரப்பு ஒருங்கிணைப்புகளை அனுமதிப்பதானது, Smart IoT கட்டமைப்புகளை உருவாக்க Imou வை பொருத்தமான தெரிவாக மாற்றுவதுடன், பங்குதாரர்களுக்கும் பாவனையாளர்களுக்கும் அதிக பெறுமதியை உருவாக்குகிறது.

“இலங்கையில் Imou இன் நவீன பாதுகாப்பு தீர்வுகளுக்கான பிரத்தியேக விநியோகஸ்தராக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். Imou அதன் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு புகழ்பெற்ற ஒரு வர்த்தகநாமம் என்பதுடன், இது உலகளாவிய பாவனையாளர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளமையானது, கண்காணிப்பு துறையில் மிகவும் நம்பகமான பங்காளிகளில் ஒன்றாக இதனை மாற்றியுள்ளது. இந்த பங்குடமை மூலம், ஒவ்வொரு இலங்கையருக்கும் எளிமையான, பாதுகாப்பான மற்றும் ஸ்மார்ட்டான வாழ்க்கையை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்க நாம் எதிர்பார்க்கின்றோம்,” என்று Singer Sri Lanka வின் பிரதான நிறைவேற்று அதிகாரி, மஹேஸ் விஜேவர்தன தெரிவித்தார்.

உள்ளக கண்காணிப்பு, வெளியக கண்காணிப்பு, ஸ்மார்ட் அணுகல் மற்றும் முழு வர்த்தக நிலையத்தினதும் முகாமைத்துவம் ஆகியவற்றுக்கு Imou பரந்த அளவிலான ஸ்மார்ட் தீர்வுகளை வழங்குவதுடன், இது Wi-Fi Cameras, PoE (Power over Ethernet) Cameras, Smart Alarm Systems, , wireless network recorders, smart locks மற்றும் doorbells  போன்ற பல்வேறு உபகரணங்களை உள்ளடக்கியது. அனைத்து தயாரிப்புகளும் plug and play சாதனங்கள் என்பதுடன், இதன் மூலம் கேபிளிங் தொந்தரவை நீக்கி சிறந்த கொண்டு செல்லும் திறன் மற்றும் சௌகரியத்தை வழங்குகிறது.

Singer Sri Lanka வின் தற்போதைய Imou தயாரிப்பு வரிசையில் Wi-Fi திறன்கள் மற்றும் IoT தீர்வுகளுடன் கூடிய Security Camera மாதிரிகள் மற்றும் Alarm அமைப்புகள் உள்ளன. இந்நிறுவனம் வயர்லெஸ் தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை Imou வர்த்தகநாமத்தின் கீழ் விரிவாக்க எதிர்பார்ப்பதுடன், smart locks, doorbells போன்ற பல்வேறு உபகரணங்களுடன் நாட்டின் வயர்லெஸ் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யவுள்ளது. இந்த பங்குடமையின் இலக்கு 2022 ஆம் ஆண்டில் வயர்லெஸ் பாதுகாப்பு துறையில் முதலிடம் பெறுவதாகும்.

Singer Sri Lanka நிறுவனமானது நாடு முழுவதும் வளர்ந்து வரும் நுகர்வோர் தளத்திற்கு பரந்த அளவிலான முதற்தர உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகநாமங்களை வழங்குவதுடன், நியாயமான விலையில் சௌகரியங்களை வழங்குவதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருகின்றது. இந்த அருமையான புதிய பங்குடமை மூலம், Imou பாதுகாப்பு தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை இப்போது SINGER மற்றும் SINGER MEGA காட்சியறைகள், www.singersl.com மற்றும் நாடு முழுவதும் உள்ள விநியோகஸ்தர்கள்  ஊடாக பெற்றுக்கொள்ளலாம்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *