realme ஸ்மார்ட்போன் வகைகளில் உச்ச ப்ரீமியம் வகை மாடலான நவீன GT 2 Pro வினை அறிமுகப்படுத்துகிறது

உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான realme, இதுவரை வெளியிடப்பட்ட உச்ச ப்ரீமியம் முதன்மை சாதனமாக GT 2 Pro வினை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. GT 2 Pro ஆனது ஒரு அதிநவீன Snapdragon® 8 Gen 1 மொபைல் தளம் மூலம் இயக்கப்படுகிறது. இது உலகெங்கிலும் உள்ள இளம் பயனர்களின் எதிர்பார்ப்புகளைத் தாண்டியதாக அமைவதுடன், முதன்மையான ஸ்மார்ட்போன்களின் செயல்திறனின் எல்லைவரை சென்று செயற்படுகிறது. GT 2 Pro ஆனது Snapdragon® 8 Gen 1 மொபைல் தளத்துடன் கூடிய முதலாவது ஸ்மார்ட்போன் வகைகளில் ஒன்றாகும்.

Snapdragon Tech Summit 2021 இல், realme யின் உதவித் தலைவர் Chase Xu தெரிவிக்கையில், “Qualcomm Technologies ஆனது, எப்போதும் realme இன் மிக முக்கியமான ஒத்துழைப்பாளர்களில் ஒன்றாக இருந்து வருகிறது. realme ஆனது, சில மாதங்களுக்கு முன்பே realme GT 2 Pro இன் மேம்படுத்தல்களை ஆரம்பித்திருந்தது. அத்துடன், இது உலகெங்கிலும் உள்ள இளம் பயனர்களின் எதிர்பார்ப்புகளை தாண்டியவாறு, உண்மையான உயர்தர முதன்மை தயாரிப்பாக விளங்கவுள்ளது.” என்றார்

GT 2 Pro என்பது ஸ்மார்ட்போன் சாதனத்தின் சக்தியின் மையமாகும். இது கேமிங், AI மற்றும் 5G போன்ற அம்சங்களில் அதிக திறன்களைக் கொண்டுள்ளதுடன், பயனர் அனுபவத்தை புதிய நிலைகளை நோக்கிக் கொண்டு செல்கிறது. இதன் காரணமாக, GT 2 Pro ஆனது realme யின் முதலாவது ப்ரீமியம் வகை ஸ்மார்ட்போனாக மாறியுள்ளது. 4G இலிருந்து 5G சகாப்தத்திற்குச் செல்ல நுகர்வோருக்கு உதவிய சக்திவாய்ந்த ஸ்மார்ட் சாதனங்களின் வகைகளைக் கொண்டு வருவதற்காக, அதன் ஆரம்பத்திலிருந்தே realme ஆனது, Qualcomm Technologies உடன் மிக நெருக்கமாக இணைந்து பணியாற்றி வந்துள்ளது. realme பயனர்கள் GT 2 Pro மூலம் 5G தொழில்நுட்பத்தின் முழு சக்தியையும் தங்கள் கைகளில் பெறுகிறார்கள். ப்ரீமியம் வகை முதற்தர ஸ்மார்ட் சாதனமானது realme யின் “dare to leap” உயிர்நாடியை அதன் சிறந்த அமைப்பின் மூலம் காட்டுகிறது. இது realme GT தொடரின் முதலாவது Pro தயாரிப்பு என்பதுடன், realme யின் உச்ச ப்ரீமியம் வகை முதற்தர சாதனமுமாகும். அதன் சக்திவாய்ந்த செயற்றிறன் மற்றும் வலுவான 5G திறன்கள் மூலம், realme GT 2 Pro இன் வளர்ச்சியின் புதிய சாத்தியங்களைக் கொண்டுவருகிறது.

realme பற்றி:

realme ஆனது வளர்ந்து வரும்  உலகளாவிய நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமாகும். இது புதிய தொழில்நுட்பங்களை மிக இலகுவாக அடையும் வகையிலான உற்பத்திகளை வழங்கி, ஸ்மார்ட்போன் மற்றும் AIoT சந்தையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஸ்மார்ட்போன்கள் மற்றும் வாழ்க்கைமுறைகளுக்கு அவசிமான பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களை உயர்ந்த அம்சங்களை உள்ளடக்கியவாறு, காலத்திற்கு ஏற்ற போக்கில், சிறப்பான வடிவமைப்புகளுடன், இளம் நுகர்வோருக்கு கட்டுப்படியாகும் விலையில் வழங்குகிறது.

2018 ஆம் ஆண்டில் Sky Li இனால் நிறுவப்பட்டு, அதன் “Dare to Leap” (முன்னேற பயமில்லை) எனும் உயிர் நாடிக்கு ஏற்ப, realme ஆனது, உலகின் 6ஆவது மிகப் பெரும் ஸ்மார்ட்போன் நிறுவனமாக மாறியுள்ளதுடன், கடந்த மூன்றே வருடங்களில் உலகளாவிய ரீதியில் 22 சந்தைகளில் சிறந்த 5 ஸ்மார்ட்போன் வர்த்தக நாமங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

2021 இன் இரண்டாம் காலாண்டு நிலவரப்படி, உலகளாவிய ரீதியில் சீனா, தென்கிழக்கு ஆசியா, தெற்காசியா, ஐரோப்பா, ரஷ்யா, அவுஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா உள்ளிட்ட 61 சந்தைகளில் realme தனது கால்தடத்தை பதித்துள்ளதுடன், 100 மில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய பயனர்களையும் அது கொண்டுள்ளது. மேலதிக தகவலுக்கு, www.realme.com ஐப் பார்வையிடவும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *