One Galle Face Mall இல் புதிய தோற்றத்துடன் புத்தாண்டுக்காக புதுப்பிக்கப்பட்ட Huawei Experience Store

இலங்கையிலுள்ள புத்தாக்க ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான Huawei, புத்தாண்டுக்காக One Galle Face Mall இல் புதிதாக புதுப்பிக்கப்பட்ட Huawei அனுபவ மையத்தை (Huawei Experience Store) திறந்து வைத்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட Huawei அனுபவ மையமானது, தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் அடிப்படையில் Huawei இன் ப்ரீமியம் புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் அதன் சலுகைகளைப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பை அனைத்து நுகர்வோருக்கும் வழங்குவதுடன், உயர் பயிற்சி பெற்ற ஊழியர்களிடமிருந்து உதவிகளையும் வழங்குகிறது.

One Galle Face Mall இல் அமைந்துள்ள Huawei அனுபவ மையமானது, கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் உள்ள ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்கும், இதனைப் பார்வையிடுவதற்கும் அனுபவிப்பதற்கும், அனைத்து அற்புதமான சலுகைகளைப் பெறுவதற்கும் ஏற்ற இடமாகும். Huawei அனுபவ மையத்தில் நுகர்வோருக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் பலதரப்பட்ட தொழில்நுட்பத் தயாரிப்புகள் கிடைக்கின்றன. ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி அவை கொண்டுள்ள அம்சங்கள் காரணமான உயர் கேள்வி மற்றும் பாவனையாளர் கவர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையிலான தயாரிப்புகளான டெப்கள், மொனிட்டர்கள், மடிகணனிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் மற்றும் ஓடியோ தயாரிப்புகள் உள்ளிட்டவையும் இங்கு கிடைக்கின்றன. Huawei அனுபவ மையங்களில் கிடைக்கும் ஒவ்வொரு தயாரிப்பும் இவ்வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டவை என்பதுடன், அவை உள்ளூர் நுகர்வோரின் தொழில்நுட்பத் தேவைகளையும் பூர்த்தி செய்கின்றன. உலகம் முழுவதிலுமுள்ள மக்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை வழங்குவதற்கும் தொழில்நுட்ப முன்னேற்றம் மூலமான சந்தோசத்தை பகிர்வதனை வெளிப்படுத்துவதில் Huawei தன்னை அர்ப்பணித்துள்ளது. Huawei நுகர்வோர், ஒப்பிட முடியாத விலை, மிக உயர்ந்த தரம், சிறந்த விற்பனைக்குப் பிந்தைய சேவை உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட தங்கள் கனவு Huawei ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் அணிகலன்களை அனுபவித்து மகிழவும், அவற்றை கொள்வனவு செய்யவும் சிறந்த வாய்ப்பை Huawei அனுபவ மையம் வழங்குகிறது.

சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட Huawei அனுபவ மையம் குறித்து, Huawei சாதனங்களுக்கான நாட்டின் தலைவர் பீட்டர் லியு கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் உள்ள எமது விசுவாசமான நுகர்வோருக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதில் நாம் எப்போதும் செயலூக்கமான பங்கேற்பாளராக இருந்து வருகிறோம். கொழும்பு நகரின் கவர்ச்சிக்கு மேலும் மெருகூட்டும் வகையில் சமீபத்தில் இணைந்துள்ள One Galle Face Mall ஆனது, Huawei கொண்டு வரும் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் ப்ரீமியம் சலுகைகள் குறித்து எமது நுகர்வோர் அறிந்துகொள்ள மிகவும் பொருத்தமான இடமாகும். எமது அனைத்து புத்தாக்கக் கண்டுபிடிப்புகளையும் இலங்கையிலுள்ள நுகர்வோர் மிக ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளதால், நாம் கொண்டு வரும் அனைத்து சமீபத்திய புதுப்பிப்புகள் மற்றும் புத்தாக்கங்களை அவர்களுக்கு வழங்க நாம் தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகிறோம்.” என்றார்.

லியு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “பல ஆண்டுகளாக தனது இருப்பை இலங்கையில் வெற்றிகரமாக மேலும் உறுதிப்படுத்த Huawei இனால் முடிந்துள்ளது. Huawei நிறுவனம் இலங்கையை ஒரு மூலோபாயச் சந்தையாக அங்கீகரித்துள்ளதுடன், நாட்டிற்குள் ஒரு விரிவான சந்தை தடத்தை நிறுவுவது தொடர்பில் முன்னோக்கிச் செல்ல நாம் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

நுகர்வோர் இந்த மையத்திற்குள் நுழைந்து, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள தயாரிப்புகளை அனுபவிப்பதற்கான வாய்ப்பைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் சாதனங்களின் கொள்வனவுக்கான முன்பதிவுகளையும் மேற்கொள்ளலாம் என்பதுடன், எந்தவொரு Huawei சாதனங்களையும் கொள்வனவு செய்யலாம். அவர்கள் Huawei அனுபவ மையத்திற்குச் செல்லும்போது, ​​அர்ப்பணிப்பு மற்றும் உயர் பயிற்சி பெற்ற விற்பனை உதவியாளர்களின் உதவியுடன் Huawei ஸ்மார்ட்போன்கள் மற்றும் சாதனங்கள் பற்றிய தகவல்களைப் பெறவும் ஆலோசனை மற்றும் உதவிகளைப் பெறவும் முடியும்.

தகவல் மற்றும் தொலைத் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் (ICT) உட்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்களின் முன்னணி உலகளாவிய வழங்குநரான Huawei, நான்கு முக்கிய களங்களில் ஒருங்கிணைந்த தீர்வுகளுடன், புத்தாக்கம் கொண்ட ஸ்மார்ட்போன் தரக்குறியீடாக அறியப்படுவது மட்டுமல்லாமல், பல்வேறு தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குவதில் உறுதியாக உள்ளது. அந்த வகையில் One Galle Face Mall இல் அமைந்துள்ள புதுப்பிக்கப்பட்ட Huawei அனுபவ மையத்தில், வாடிக்கையாளர்கள் Huawei யின் உண்மையான நுகர்வோர் அனுபவத்தைப் பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *