இலங்கையில் புதிய 12th Gen Gaming and Creator மடிகணனி தொடர்களை வெளியிடும் MSI

– “Gameverse” ஒன்லைன் நிகழ்வில் வெளியீடு

– 12th Gen Intel® Core™ H series processor; GeForce RTX 3080 Ti

விளையாட்டு, வடிவமைப்பு, வர்த்தக மடிகணனிகளில் (gaming, creator, business laptops) புத்தாக்கம் மிக்க கணனித் தயாரிப்பாளரான MSI, மிக நவீன 12th Gen Intel® H series processorகளுடனான மடிகணனிகளின் புதிய வரிசையை பெருமையுடன் வெளியிட்டுள்ளது. கேமிங் துறையில் உலகளாவிய முன்னணி நிறுவனமான MSI, 12th Gen (12ஆவது தலைமுறை) தயாரிப்பு வரிசை மடிகணனிகளை இலங்கைக்கு கொண்டு வரும் முதலாவது வர்த்தக நாமமாகும். இதன் மூலம் MSI ஆனது, metaverse எனும் எதிர்வரும் சகாப்தத்திற்கான அவர்களின் உறுதியையும் நோக்கையும் நிரூபித்துள்ளது. Meta-ready இலச்சினையைப் பெருமைப்படுத்தும் இப்புதிய மடிகணனிகள் Metaverse இற்கு இணக்கமான செயல்திறனை அனுபவிக்க விரும்பும் அனைவருக்காகவும், Intel® CoreTM i7 அல்லது அதற்கு அடுத்த processor மற்றும் NVIDIA GeForce RTX ™ 3070 அல்லது அதற்கு அடுத்த வகையிலான கிரபிக் வசதியையும் கொண்டுள்ளன.

புதிய கேமிங் லேப்டாப் வரிசையானது முந்தைய மாதிரிகளை விட குறிப்பிடத்தக்க செயல்திறன் மேம்பாட்டை கொண்டுள்ளது, இதில் CPU செயல்திறனில் 30% – 45% அதிகரிப்பு உள்ளது. மேலும் MSI ஆனது, Phase Change Liquid Metal Pad போன்ற அம்சங்களுடன் வெப்பமாதல் தொடர்பான தீர்வுகளில் புதுமைகளைச் சேர்த்துள்ளது. MSI யினது பிரத்தியேகமான குளிரூட்டல் அமைப்பானது, புதிய 12th Gen Intel processor களின் சக்தியை முழுமையாக வெளிப்படுத்த உதவுகிறது. இது திரவ உலோகத்தைப் போன்ற திறனான, ஆனால் பாதுகாப்பான மற்றும் நம்பகமான தீர்வை வழங்குகிறது.

MSI இன் Creator தொடர் தற்போது 17 அங்குலங்கள் வரையான திரையைக் கொண்ட உயர் வகையானதாக உள்ளது. புதிய Vapor Chamber Cooler (ஆவியாதல் தொகுதி குளிர்விக்கும் அறை) மூலம் ஒட்டுமொத்த CPU செயற்திறன் 45% ஆக மேம்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் MSI MSI Pen இற்கான தொடுதிறன் வசதி, Calman இனது True Pixel Display திரை மற்றும் DTS உடனான சிறந்த, அதிவேக surround ஒலி அனுபவத்திற்கான உள்ளடக்கத்தை விரும்புபவர்களுக்கான அம்சங்களையும் இணைத்துள்ளது. .

இப்புதிய மடிகணனிகளின் விபரங்கள் வருமாறு:

நேர்தியான, அதிநவீன GS77 / 66 Stealth மடிகணனிகள் விருது பெற்ற Stealth GS தொடரின் ஒரு பகுதியாகும். அவை கேமிங் மற்றும் தொழில்துறைப் பயன்பாட்டிற்கான இலகுரக, சக்திவாய்ந்த மடிகணனிகளாகும். GS77 ஒரு புதிய கறுப்பு (“core black”) வண்ணம் மற்றும் மடிக்கும் இடத்தில் நீடித்து நிலைக்கும் zinc alloy உடனான சுழலிடத்துடன் வருகிறது. அடிச் சட்டத்திலிருந்தான (Z height) 21mm இற்கும் குறைவான உயரம், துல்லியமான மற்றும் வசதியான தட்டச்சு அனுபவத்திற்காக MSI ஆனது touchpad மற்றும் keycap அளவை பெரிதாக்கியுள்ளது. மிருதுவான treble மற்றும் சக்தி வாய்ந்த bass இற்கான ஆறு ஸ்பீக்கர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. வணிக ரீதியாக விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு webcam lock switch மற்றும் சிறந்த பாதுகாப்பு மற்றும் இயக்கத்திற்காக 100W வரையான PD சார்ஜிங் வசதிகள் மூலம் பயன் பெற முடியும்.

MSI Raider GE Series (GE76 / 66) ஆனது கண்கவர் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இது panoramic aurora ஒளி உணர்திறனை கொண்டுள்ளதுடன், இது ஒரு கவர்ச்சியான விஞ்ஞானவியல் காட்சிச் சூழலை உருவாக்குவதுடன், இதன் செயற்றிறன் இன்னும் வியக்க வைக்கிறது. MSI இன் புத்தாக்கமான வெப்ப எதிர்ப்பு வடிவமைப்புடன், Raider GE தொடரின் செயற்றிறன் MSI OverBoost ஊடாக GeForce RTX 3080 Ti மூலம் 220W[1] வலு வரை செல்லலாம். Phase Change Liquid Metal Pad ஆனது, செயற்றிறன் மேலும் 10% ஆக அதிகரிப்பதுடன், Discrete Graphic Mode உதவியுடன் 4K வரையிலான காட்சிகளுடன், MSI Raider தொடரில் விளையாட்டாளர்கள் வேகமான மற்றும் மிருதுவான அனுபவத்தைப் பெற முடியும்.

Vector GP Series (GP76 / 66) ஆனது, செயற்றிறன் அடிப்படையிலான மடிகணனிகள் ஒரு புதிய எண்ணக்கருவுடன் உருவாக்கப்பட்டுள்ளன; “Vector” எனும் பெயர், விளையாட்டு, பொறியியல் அல்லது விஞ்ஞான ரீதியான கணனி செயற்பாடு ஆகியவற்றில் திருப்திகரமான அனுபவத்துடன் முன்னேறத் தேவையான அனைத்து ஆற்றலையும் GP தொடருக்கான MSI இன் எதிர்பார்ப்பைக் குறிக்கிறது. Cooler Boost 5 தொழில்நுட்பத்துடன், Vector யின் செயற்றிறன் ஆனது, MSI OverBoost வழியாக 210W வரை அடையலாம்.

Crosshair GL Series ஆனது, MSI மற்றும் Ubisoft இடையேயான கூட்டுப்பணியாகும். இத்தொடரானது விளையாட்டின் உணர்வு மற்றும் மனநிலையால் ஈர்க்கப்பட்ட பிரத்யேக விஞ்ஞான ரீதியான கூறுகளுடன் கூடிய எதிர்கால வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் Intel® CoreTM i9 processor கள் மற்றும் Cooler Boost 5 தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கிரபிக் செயற்றிறன் உச்சபட்ச மட்டத்தில் உள்ளமையானது, Crosshair தொடரை அதன் போட்டியிலிருந்து வேறுபடுத்துகிறது. Crosshair GL தொடர் மூன்று வகைகளில் வருகிறது. Crosshair 15, Crosshair 17 மற்றும் பிரத்தியேக அம்சங்களுடனான, மட்டுப்படுத்தப்பட்ட பதிப்பான Crosshair 15 Rainbow Six Extraction பதிப்பு ஆகியன இதில் அடங்குகின்றன.

Creator Z17 என்பது pen touch இனை ஆதரிக்கும் உலகின் முதல் 17 அங்குல மடிகணனியாகும். அத்துடன் 16:10 திரை விகிதத்துடன் மெல்லிய சட்டக ஓர வடிவமைப்பு மற்றும் True Color தொழில்நுட்பம் ஆகியன, படைப்பாளர்களுக்கு சிறந்த உதவியாக இருக்கும். Creator Z16P ஆனது Vapor Chamber Cooler உடன் மேலதிக 20% செயற்றிறன் boost இனை கொண்டுள்ளது. இது 76% மேலதிக குளிர்விக்கும் பகுதியையும், 65% மேலதிக காற்றோட்டத்தையும் உருவாக்குவதுடன், மேற்பரப்பு வெப்பநிலையை 2°C (3.6°F) ஆக குறைக்கிறது. போட்டித்திறன் மற்றும் CNC-சீரமைக்கப்பட்ட அலுமினியம் சட்டத்துடன், Creator Z தொடர் மடிகணனிகள் ஆனவை, NVIDIA Studio மடிகணனிகளாகும். இவை படைப்பாளிகள், ஆர்வம் மிக்க தொழில் வல்லுநர்கள் அல்லது உயர்தர, ப்ரீமியம் தயாரிப்புகளை அனுபவிக்கும் நுகர்வோர்களுக்காக உருவாக்கப்பட்டவையாகும்.

MSI அதன் வன்பொருளுடன் மட்டும் புத்தாக்கமான விடயங்களை உருவாக்கவில்லை என்பதுடன், எப்போதும் இல்லாத புத்திசாலித்தனமான மடிகணனிகளை உருவாக்கும் நோக்கத்துடன் MSI மையப்படுத்திய மென்பொருளையும் கொண்டுள்ளது. MSI Smart Auto ஆனது, உங்கள் பயன்பாட்டைப் பொறுத்து பொருத்தமான முறைகளை தானாக மாற்றும் அதே நேரத்தில், Ambient Silent AI ஆனது, மடிகணனி விசிறியின் வேகத்தை சரிசெய்வதற்காக சுற்றுப்புற இரைச்சலின் அளவை (dB) கண்டறிந்து, ஒப்பீட்டளவில் அமைதியான விசிறியாக அதனை மாற்றி உங்களுக்கு சிறந்த செயற்றிறனையும் வழங்குகின்றது.

MSI யின் புதிய Gaming மற்றும் Content Creation தொடர்கள், MSI இனது தனித்துவ அழகியல் அம்சத்துடன் தொடர்ந்து சக்திவாய்ந்த செயற்றிறன், புதுமையான வெப்ப தடுப்பு தொடர்பான தீர்வுகள் மற்றும் புதிய அம்சங்களின் தொகுப்பை வழங்குகிறது.

MSI MSIology Virtual Event: msi.gm/MSIology2022

MSI 12th gen products: https://msi.gm/12thGenGaming

MSI Twitch:         twitch.tv/msigaming

MSI GAMING:      https://www.msi.com/

MSI Facebook:   https://www.facebook.com/MSIGamingSriLanka/

MSI Instagram:    https://www.instagram.com/msigaming/

MSI YouTube:      https://www.youtube.com/user/MSIGamingGlobal

MSI Twitter:          https://twitter.com/msitweets

உடனுக்குடனான செய்திகள் மற்றும் மேலதிக தயாரிப்பு தகவலுக்கு: https://www.msi.com/rss  ஊடாக MSI RSS இணைப்பில் இணையவும்

MSI GAMING பற்றி

உலகின் முன்னணி கேமிங் தரக்குறியீடான, கேமிங் மற்றும் இணைய விளையாட்டுகளில் MSI மிகவும் நம்பகமான பெயராகும். வடிவமைப்பில் முன்னேற்றம், விசேடத்துவங்களை தொடர்ந்து கொண்டு வருதல், தொழில்நுட்ப புத்தாக்க கண்டுபிடிப்புகள் ஆகியவற்றின் கொள்கைகள் தொடர்பில் நாம் உதியாக இருக்கிறோம். விளையாட்டாளர்கள் மிக விரும்பும் தீவிர செயற்றிறன், யதார்த்தமான காட்சி வெளிப்பாடுகள், உண்மையான ஒலி, துல்லியமான கட்டுப்பாடு, மிருதுவான ஸ்ட்ரீமிங் செயல்பாடுகளை அதன் கேமிங் அம்சங்களில் ஒருங்கிணைத்து, MSI ஆனது விளையாட்டாளர்களை கடினமான சோதனைகள் மற்றும் பிழைகளிலிருந்து விடுவித்து, கேமிங் செயற்றிறனை அதன் எல்லைகளுக்கு அப்பால் கொண்டு செல்கிறது. கடந்தகால சாதனைகளை முறியடிக்கும் உறுதி காரணமாக, தொழில்துறை முழுவதும் கேமிங் உணர்வைக் கொண்ட ஒரு ‘True Gaming’ தரக்குறியீடாக MSI மாறியுள்ளது! தயாரிப்புகள் தொடர்பான மேலதிக  தகவலுக்கு: https://www.msi.com

●இந்த செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்ட தொழில்நுட்பம், படங்கள், வசனங்கள் மற்றும் ஏனைய உள்ளடக்கத்தின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. முன்னறிவிப்பு இல்லாமல் இந்த உள்ளடக்கங்கள் மாற்றங்களுக்கு உள்ளாக்கப்படலாம்.


[1]  NVIDIA GeForce RTX 3080 Ti பொருத்தப்பட்டிருக்கும் போது GE76 ஆனது 220W செயல்திறனை அடைகிறது

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *