PEPSI® அதன் SWAG தத்துவத்தை மீண்டும் வலியுறுத்தும் புதிய பிரசாரத்துடன் கோடைகாலத்தை வரவேற்கிறது

– புதிய பிரசாரம் இலங்கை இளைஞர்களின் உறுதி மற்றும் தன்னம்பிக்கையை கொண்டாடுகிறது~

SWAG – ஒரு வார்த்தை. நான்கு எழுத்துகள். ஒரு மில்லியன் விசுவாசிகள். இக்கோடை காலத்தில், Pepsi® அதன் SWAG தத்துவத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையிலான புதிய பிரசாரத்தின் மூலம் இலங்கையிலுள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்த தயாராகி உள்ளது. இதற்கு முன் இளைஞர்கள் அதிக நம்பிக்கையுடன் இருந்ததில்லை. அவர்கள் எப்படி எதை செய்கிறார்களோ, அதை அப்படியே செய்கிறார்கள். ஆயினும் தற்போது, ​​அவர்கள் SWAG மூலம் எல்லாவற்றையும் செய்கிறார்கள். புதிய தலைமுறையின் இந்த உணர்வையே இக்கோடை காலத்தில் ‘#Pepsi யோடு SWAG’எனும் பிரசாரத்தை Pepsi® கொண்டாடுகிறது.

இந்த வீடியோ விளம்பரமானது, கல்லூரி ஒன்றின் சிற்றுண்டிச்சாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ஒரு மாணவர் சிற்றுண்டிச்சாலையில் தனது உணவையும் குளிர்ந்த பெப்சி போத்தலையும் கொள்வனவு செய்கிறார். இதன்போது குறித்த மாணவன் வழங்கும் பணத்தின் மீதத்திற்கு பதிலாக, சிற்றுண்டிச்சாலை முகாமையாளர் டொபி ஒன்றை வழங்குகிறார். மறுபடியுமா!? என மாணவர் கேட்க, முகாமையாளரும் தான் வெற்றி பெற்றது போல் நமட்டு புன்னகையை வெளிப்படுத்துகிறார். தனது பெப்சி பாட்டிலில் இருந்து SWAG யை எடுத்துக் கொண்ட மாணவன் புன்னகை செய்கிறார். தனக்கு வழங்க வேண்டிய மீதியை ஏற்பாடு செய்யும் வரை காத்திருப்பதாக முகாமையாளருக்கு மாணவர் சொல்கிறார். இதன் பின்னர் தனது நண்பர்கள் அனைவரையும் நம்பிக்கையுடன் பார்க்கும் மாணவன், முகாமையாளரிடமிருந்து மீதியை கேட்க சொல்கிறார். சிறிது நேரத்தில், ஒவ்வொரு மாணவரும் முகாமையாளரின் முன்பாக தங்களுக்கு வழங்கப்பட்ட டொபிகளின் குவியலுடன் மீதியை வழங்குமாறு வரிசையில் நிற்கிறார்கள். தன்னம்பிக்கை மற்றும் புதிய சிந்தனை மூலம் எதையெல்லாம் சாதிக்க முடியும் என்பதை வலியுறுத்தும் வகையில், மாணவர் முகாமையாளரைப் பார்க்கிறார். மாணவர் தனது குளிர்ந்த பெப்சியை அருந்தியவாறு முகாமையாளரை SWAG நிலைக்கு மாற்றுகிறார்.

இப்புதிய பிரசார ஆரம்பம் பற்றி, PepsiCo, Flavors, இலங்கை பிராந்தியத்தின் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் பணிப்பாளர் நசீப் பூரி கருத்து வெளியிடுகையில், “இன்றைய தலைமுறையினரின் குரலுடன் எப்போதும் எதிரொலிக்கும் ஒரு தரக்குறியீடாக Pepsi விளங்குகிறது. Pepsi இக்கோடை காலத்தில் இன்றைய மில்லேனிய இளைஞர்களை வரையறுக்கும் ஒரு வார்த்தையான SWAG யினை அங்கீகரித்து கொண்டாடுகிறது. ‘#Pepsi யோடு SWAG’ என்பது இந்த தருணத்தை வாழ்வது, புதியதை அடைவது, சுவாரஸ்யமான வாய்ப்புகளைப் பெறுதல், அனைத்தையும் SWAG உடன் செய்வதுமாகும். இன்றைய தலைமுறையினரின் தன்னம்பிக்கையை உண்மையாக பிரதிபலிக்கும் முற்போக்கான அணுகுமுறையை ஏற்படுத்தும் இப்பிரசாரம் இலங்கையின் இளைஞர்களால் விரும்பப்படும் என்று நாம் நம்புகிறோம்.” என்றார்.

புதிய Pepsi® TVC (கணொளி விளம்பரம்) ஆனது, தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்கள், வெளி நிகழ்வுகள், சமூக ஊடகங்கள் மூலம் வலுவான வகையில் 360 பாகை முழுமையான பிரசாரமாக முன்னெடுக்கப்படவுள்ளது. Pepsi® இலங்கையில் உள்ள அனைத்து நவீன மற்றும் பாரம்பரிய சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் முன்னணி இணைய வர்த்தகத் தளங்களில் தனியாகவோ, ஒன்றிணைந்த பொதிகளாகவோ கிடைக்கிறது.

Click here to view TVC- https://www.youtube.com/watch?v=wMrOZkAacw4

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *