Huawei அதன் மிகப் பாரிய பிராந்திய Seeds for the Future திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

இது எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான டிஜிட்டல் திறமையாளர்களை ஊக்குவிக்கிறது

– தாய்லாந்தின் துணைப் பிரதமர் மற்றும் ஆசியான் பொதுச் செயலாளர் ஆரம்ப நிகழ்வில் வாழ்த்து தெரிவிப்பு

[பெங்கொக், தாய்லாந்து] Huawei ASEAN Foundation மற்றும் தாய்லாந்து சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (TAT) இணைந்து Asia Pacific Seeds for the Future 2022 (எதிர்காலத்திற்கான ஆசிய பசிபிக் விதைகள் 2022) திட்டத்தை அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைத்தது. ஓகஸ்ட் 19 முதல் 27 வரை இடம்பெற்ற இந்நிகழ்வானது, தாய்லாந்து, இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், லாவோஸ், கம்போடியா, இந்தோனேஷியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த ஆசிய பசிபிக் பிராந்தியம் முழுவதிலுமுள்ள 120 சிறந்த மாணவர்களை தாய்லாந்தில் இடம்பெற்ற 09 நாள் டிஜிட்டல் ஆரம்ப முகாமுடன்  ஒருங்கிணைத்தது. இதில் பங்கேற்ற மாணவர்கள் தொழில்நுட்பங்கள் மற்றும் பல்வேறு கலாசார அனுபவங்களை பெற்றதுடன், Tech4Good திட்டங்களின் மூலம் சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தொழில்நுட்ப தீர்வுகளை முன்மொழியவுள்ளனர். இவ்வருடம் பங்கேற்கும் 120 பங்கேற்பாளர்களில் 56 பேர் பெண்கள் என்பதுடன், 2008 இல் இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் பிராந்தியத்தில் அதிக பாலின சமநிலை கொண்டதாக இவ்வருடமே (2022) அமைந்தது.

Asia Pacific Seeds for the Future 2022 நிகழ்ச்சியானது Huawei மற்றும் ASEAN அறக்கட்டளை ஆகியன 2021 ஆம் ஆண்டில் பரந்த புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டதைத் தொடர்ந்து முதன்முறையாக இடம்பெறும் நிகழ்வாகும். TAT ஆனது பங்கேற்பாளர்களை பெங்கொக்கின் கலாச்சார சுற்றுப்பயணத்திற்கான பங்களிப்பை வழங்குவதன் மூலம் இந்த ஆண்டு இத்திட்டத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து, பங்கேற்பாளர்களுக்கு இணையற்ற அனுபவத்தை வழங்கும் ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்க முயற்சிக்கின்றன.

இந்த ஆரம்ப விழாவில் உள்நாட்டு அரச அதிகாரிகள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பிராந்தியத்தின் டிஜிட்டல் திறமையாளர்களின் சூழல் தொகுதிக்கான உறுதியான அடித்தளத்தை உருவாக்குவதில், பல்தரப்பு ஒத்துழைப்பு வகிக்கும் முக்கிய பங்கை நிகழ்வின் பேச்சாளர்கள் எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்வில் தாய்லாந்தின் துணைப் பிரதமரும், வர்த்தக அமைச்சருமான Jurin Laksanawisit கருத்து வெளியிடுகையில், “2022 ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இடம்பெறும் Huawei Seeds for the Future ஆரம்ப விழாவிற்கு தலைமை தாங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைவதோடு, இதற்காக எனது நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறேன்.” என்றார்.

Seeds for the Future ஆனது Huawei நிறுவனத்தின் முதன்மையான பெருநிறுவன சமூகப் பொறுப்புத் திட்டமாகும். இது உலகெங்கிலும் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் உள்ள இளம் திறமையாளர்களை ஒன்றிணைக்கிறது. ICT திறமையாளர்களை ஊக்குவிக்கவும், டிஜிட்டல் தீர்வுகள் மூலம் சமூக ரீதியான சவால்களை சமாளிக்க அவர்களை ஊக்குவிக்கவும் 2008 ஆம் ஆண்டு தாய்லாந்தில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டின் இறுதியில், இத்திட்டம் 137 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் செயற்படுத்தப்பட்டதோடு, இது 500 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து 12,000 மாணவர்களை சென்றடைந்துள்ளது.

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *