திக்கோவிட்டவில் நிறுவியுள்ள புதிய கடல்சார் பட்டறை மூலம் உள்ளூர் மீன்பிடித் துறைக்கு சேவை வழங்கும் DIMO Marine Solutions

இலங்கையின் முன்னணியிலுள்ள பல்வகைப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான DIMO, அதன் கடல் பொறியியல் பிரிவான DIMO Marine Solutions மூலம், இலங்கை மீன்பிடித் துறைமுக கூட்டுத்தாபனத்தின் (CFHC) திக்கோவிட்ட வடக்கு முனையத்தில் அதிநவீன கடல்சார் பட்டறையை நிறுவுவதன் மூலம், உள்ளூர் மீன்பிடி துறைக்கான தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. DIMO குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கஹநாத் பண்டிதகே அவர்களால் இந்த கடல்சார் பட்டறை திறந்து வைக்கப்பட்டது.

DIMO நிறுவனத்தின் கடல்சார் பொறியியல் வர்த்தகத்தை மேற்பார்வையிடும் DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் விஜித பண்டார இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “இலங்கையின் கடல்சார் பொறியியல் துறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் மீன்பிடி, பொழுதுபோக்கு, கப்பல் தொழில்துறைகளில் பல்வேறு பாதைகளை ஆராய்வதுடன், இத்துறைகளில் உள்ள சமூகங்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை ஊக்குவிக்க எம்மால் வழியேற்படுத்த முடியும். DIMO Marine Solutions ஆனது, Four Seasons Explorer மற்றும் Cheval Blanc Randheli போன்ற பொழுது போக்குத் துறையில் உள்ள உலகளாவிய பிரபல நிறுவனங்களுக்கு, அவர்களது ஆடம்பரப் படகுகளுக்கான சேவை மற்றும் பழுதுபார்ப்பு உள்ளிட்ட விடயங்களை வழங்குகிறது. அது மாமத்திரமன்றி Sri Lanka Shipping போன்ற நிறுவனங்கள் மூலம் கப்பல் துறைக்கு சேவையாற்றுவதுடன், இலங்கை கடற்படை உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் உரிய வசதிகளையும் வழங்குகிறது. திக்கோவிட்டவில் உள்ள இந்த புதிய பட்டறை மூலம், நாட்டின் கடற்றொழில் துறையின் வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை வழங்க முடியும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்றார்.

உள்ளூர் மீன்பிடித் துறையின் வளர்ச்சிக்கு தனது பங்களிப்பை விரிவுபடுத்துவதற்காகவும், உள்ளூரிலுள்ள ஒரு நாள் மற்றும் பல நாள் மீன்பிடிப் படகுகள் மற்றும் வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களுக்கு வசதிகளை வழங்கும் நோக்கத்துடன் DIMO நிறுவனம் இவ்வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. எஞ்சின் தொடர்பான பழுதுபார்ப்பு, எஞ்சினை பிரித்து சோதனையிடல், இயந்திர இயக்க சோதனை மற்றும் அனைத்து வகையான பம்புகள், இன்ஜெக்டர்கள் மற்றும் ரேடியேட்டர்கள் பழுதுபார்த்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, ​​இப்புதிய கடல்சார் பட்டறை மூலம் குளிரூட்டிகள், ஹீட்டர்கள், வெப்பப் பரிமாற்றிகள், கண்டன்சர்கள், மின்சார மற்றும் ஹைட்ரோலிக் கியர் பொக்ஸ் ஆகியவற்றின் பழுதுபார்த்தல் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படுகின்றன.

DIMO நிறுவனம் MTU, Detroit Diesel, MG Duff, ROCHEM போன்ற சர்வதேச புகழ்பெற்ற வர்த்தக நாமங்களுடன் பல்வகை கூட்டாண்மைகளை உருவாக்கியுள்ளது. இவ்வர்த்தக நாமங்களை இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இரு நாடுகளிலும் DIMO பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த சர்வதேச கூட்டாண்மைகள், DIMO நிறுவனம் சர்வதேச மட்டத்தில் அடையாளம் பெறுவதற்கு DIMO நிறுவனத்திற்கு உதவியுள்ளதோடு, இது DIMO நிறுவனத்தின் கடல்சார் பொறியியல் நிபுணத்துவத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒரு ஒருங்கிணைந்த பங்கையும் வழங்கியுள்ளன. DIMO நிறுவனமானது இலங்கையில் உள்ள ISO 9001:14000 மற்றும் AERA USA சான்றிதழுடனான எஞ்சினை பிரித்து சோதனையிடுவதற்கான ஒரே நிறுவனமாகும்.

டிக்கோவிட்டவில் உள்ள இவ்வசதியானது, ‘NVQ மட்டம் 4’ தகுதி கொண்ட நிபுணத்துவ தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்டுள்ளது. இது அனைத்து நேரங்களிலும் உயர்தர சேவைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. டிக்கோவிட்டவில் உள்ள DIMO நிறுவனத்தின் கடல்சார் பட்டறையானது, நிறுவனத்தின் பொறியியல் விசேடத்துவம் மற்றும் கரையோர பகுதிகளில் உள்ள DIMO விற்பனை நிலையங்கள் மூலம் ஆதரவளிக்கப்படுவதோடு, இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இணையற்ற வசதியும் வழங்கப்படுகிறது.

படகுகளின் தகவல் தொடர்பாடல் தொகுதிகளை சரிபார்த்தலுக்கான சேவை, motor rewinding, servicing, varnishing செய்தல் மற்றும் அனைத்து வகையான எஞ்சின்களினதும் baking ஆகியவற்றை இந்த பட்டறை மேற்கொள்கின்றது. இந்த பட்டறையானது 80 அடி நீளம் கொண்ட கப்பல்களுக்கும் சேவை செய்யும் திறனையும் கொண்டுள்ளது. படகுகள் மற்றும் கப்பல்களுக்கான ஒரு நாள் சேவையை வழங்குவதன் அடிப்படையில் ஒரு மூலோபாய பிரதேசமாக இப்பிரதேசம் அடையாளம் காணப்பட்டுள்ளதால், கடல்சார் பட்டறைக்கான இடமாக, டிக்கோவிட்ட பிரதேசத்தை DIMO நிறுவனம் ஆராய்ந்து தெரிவு செய்துள்ளது.

DIMO நிறுவனமானது CFHC நிறுவனத்துடன் நெருக்கமாக இணைந்து, உள்ளூர் மீன்பிடித் துறைக்கு சமீபத்திய பொறியியல் தீர்வுகளை வழங்குவதில் உதவுகிறது. இத்தகைய முயற்சிகளின் விளைவாகவே கடல்சார் பட்டறையின் திறப்பும் விளங்குகின்றது. அத்துடன் CFHC இன் உதவியுடன் எதிர்காலத்தில் இவ்வாறான திட்டங்களை செயற்படுத்தவும், இத்தொழில்துறையை மேம்படுத்தவும் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

DIMO Marine Solutions ஆனது, பொறியியல், வடிவமைப்பு, திட்ட முகாமைத்துவம், நிறுவுதல், இயக்குதல், பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை, செலவு குறைந்த மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பரந்த தீர்வுகளாக வழங்குகிறது. அத்துடன் வெளிநாட்டிலுள்ள பழுதுபார்ப்புகளை மேற்கொள்ள, தயார் நிலையிலுள்ள குழுவையும் அது கொண்டுள்ளது.

Caption : டிக்கோவிட்டவில் உள்ள கடல்சார் பட்டறையில் DIMO நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள்

 END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *