Binance தனது முதல் ஒன்றுகூடலை கொழும்பில் நடத்தியது

Binance இலங்கையில் அதன் முதல் சந்திப்பை நவம்பர் 03ஆம் திகதி முன்னெடுத்திருந்தது. இதில் புளொக்செயின் தொழில்நுட்பத்தைப் பற்றிய சரியான அறிவின் மூலம் நாட்டிலுள்ள புளொக்செயின் மற்றும் Web3 ஆர்வலர்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கி, உள்நாட்டில் பல்வேறு தொழில்துறைகளில் அத்தகைய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கும் திறன் பற்றிய நுண்ணறிவைப் பகிர்ந்து கொண்டது.

Binance Colombo ஒன்றுகூடலானது, கிரிப்டோ மற்றும் புளொக்செயின் சுற்றுச்சூழல் தொகுதிக்குள் மக்களை அறிமுகப்படுத்தும் ஒரு நேரடியற்ற கற்பித்தல் நிகழ்வாகும். இதன்போது சுமார் 150 பங்கேற்பாளர்கள் புளொக்செயின் தொழில்நுட்பம் தொடர்பான தங்களது ஆர்வத்தை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உள்ளூர் Binance Angels யினது அனுபவப் பகிர்வு அமர்வு மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் Binance யின் கல்வி முயற்சிகள் பற்றிய கண்ணோட்டம் ஆகியனவும் உள்ளடங்கியிருந்தன.

புளொக்செயின் தொழிற்துறை மற்றும் இலங்கையில் அதன் சாத்தியமான சாதகமான ஒருங்கிணைப்புகள் பற்றி உள்ளூர் சூழலுடன் தொடர்புபடுத்தி, Binance யின் ஆசிய மற்றும் கிழக்கு ஐரோப்பாவிற்கான பிராந்திய மூலோபாய பணிப்பாளர் ராஜ் கரண் விளக்கமளித்தார். அவர் இங்கு தெரிவிக்கையில், “கிரிப்டோ தொழிற்துறை தொடர்பான பற்றிய கட்டுக்கதைகளை நீக்குவது மற்றும் இலங்கையில் உள்ள சமூகத்தினரிடையே Blockchain, Web3 தொழிநுட்பத்திற்கான ECOSYSTEM வழங்குநராக Binance செயற்படுவது தொடர்பான விழிப்புணர்வு இல்லாமை பற்றிய அறிவு இடைவெளிக்கான பாலத்தை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துவதுமே இலங்கையில் எமது பணியாகும். கிரிப்டோ ஆனது, எமது சேவையின் ஒருங்கிணைந்த அங்கமாக இருந்த போதிலும், நாம் கவனம் செலுத்தும் பல்வேறு தொழில்நுட்ப புத்தாக்க கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்றாகும். நாம் எமது கதையை NFT இற்கு விரிவுபடுத்தியுள்ளதோடு, தொழில்துறையில் மேல் நோக்கி விரிவாக்கமடைந்து செல்வதற்கான வழிகளில் எமது புத்தாக்க கண்டுபிடிப்புகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறோம்.” என்றார்.

தெற்காசிய பிராந்தியத்தில் Binance இன் கல்வி முயற்சிகள், 300 இற்கும் மேற்பட்ட அலகுகளிலான புளொக்செயின் தொழில்நுட்பத்தின் மூலம் தீர்க்கப்படக்கூடிய பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வுகளை வழங்க உதவியுள்ளதோடு, பிராந்தியத்தில் உள்ள 50 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள புளொக்செயின் தொழில்நுட்பத்தின் மூலம் தீர்க்கப்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தற்போதைய நிலையின் அடிப்படையில் தீர்வுகளையும் வழங்குகிறது. உள்ளூர் அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுடன் கைகோர்த்து, உள்ளூர் மாணவர் அமைப்புகளுக்கு புளொக்செயின் தொழில்நுட்பம் மற்றும் web3 நோக்கி மாற்றமடைதல் குறித்த உயர் அறிவை வழங்குவதில் இந்த நிறுவனம் ஆர்வமாக உள்ளது.

Blockchain மற்றும் Cryptocurrency பற்றி Binance Academy மூலம் மேலும் அறிய: https://academy.binance.com/en

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *