மாலைதீவுச் சந்தையில் காலடி எடுத்து வைத்துள்ளதன் மூலம் இலங்கையை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் Anton

இலங்கையின் PVC தொழில்துறை மற்றும் நீர்த் தாங்கிகள், கூரையிடல் உள்ளிட்ட கைத்தொழில் மற்றும் நுகர்வோர் துறைகளில் முன்னணி உற்பத்தியாளரான Anton, அண்மையில் தனது பரந்த தயாரிப்புகளை மாலைதீவிற்கு அறிமுகப்படுத்தியதன் மூலம் வரலாறு படைத்துள்ளது.

Anton 1958 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து, உள்ளூர்த் தொழில்துறையில் ஒரு முன்னோடியாகவும், பல்வேறு கண்டுபிடிப்புகளை முன்னெடுத்தும், பாரிய அளவிலான முதலீடுகளை மேற்கொண்டும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு செய்து வருகின்றது. இன்று இந்நிறுவனம் PVC குழாய்கள் மற்றும் இணைப்புகள் துறையில் முன்னணியில் திகழ்கின்றது. அழுத்தக் குழாய்கள் மற்றும் இணைப்புகள், நீர்த் தொட்டிகள், தேர்மோ CPVC குழாய்கள் மற்றும் இணைப்புகள், மழை நீர் பீலிகள் மற்றும் இணைப்புகள், வால்புகள், பசைகள், சீலிடல் உற்பத்திகள், கன்டியூட்கள் மற்றும் டிரக்கிங், வலைகள், ஹோர்ஸ் குழாய்கள் உள்ளிட்டவை நிறுவனம் சந்தைக்கு வழங்கும் உயர்தர தயாரிப்புகளில் சிலவாகும். Armor uPVC கூரைத் தகடுகள், uPVC கதவுகள், ஜன்னல்கள் மற்றும் Polar Insulation போன்ற பல்வேறு புத்தாக்கமான தயாரிப்புகளையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகெங்கிலும் உள்ள தனிநபர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு சவாலான இந்த காலகட்டத்திற்கு மத்தியில் Anton நிறுவனம் மாலைதீவுச் சந்தையில் தனது காலடியை வைத்துள்ளது. இவ்வாறான சூழலுக்கு மத்தியிலும், தமது கூட்டாளர்கள் மற்றும் நுகர்வோரிடமிருந்து இது தொடர்பில் பெறப்பட்ட சாதகமான கருத்துகள் பாராட்டுக்குரியதாக உள்ளதோடு நிறுவனத்திற்கு, ஊக்கத்தையும் அளிக்கிறது.

இந்த சமீபத்திய முயற்சி குறித்து, Anton நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி லஹிரு ஜயசிங்க தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டபோது, “மாலைதீவுக்கு எமது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். பல தலைமுறைகளாக இலங்கையில் எமது நிலையை உறுதியாக நிறுத்தியுள்ள நிலையில், எமது பிரசன்னத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், உலக சந்தையில் பிரவேசிப்பதற்கு இதுவே சிறந்த தருணம் என நாம் நம்புகிறோம். எமது வாடிக்கையாளர்களுக்கு புதிய தயாரிப்புகளை கொண்டு சேர்க்கும் வகையிலும், எமது சலுகைகளை விரிவுபடுத்துவதற்காகவும், உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம். எமது வாடிக்கையாளர்களின் வளர்ச்சியடைந்து வரும் தேவைகளை மிகவும் திறமையான வகையிலும் பாதுகாப்பான முறையிலும் பூர்த்தி செய்ய, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் (R&D) கவனம் செலுத்தும் அதேவேளையில், எமது தயாரிப்புகளின் மிக உயர்ந்த தரத்தை தொடர்ச்சியாக பேணுவதையும் நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என்றார்.

இந்நிறுவனம் தற்போது மாலைதீவு சந்தைக்கு அதன் பரந்த தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதோடு, தொழில்துறையினர் மற்றும் நுகர்வோர் ஆகிய பயன்பாட்டாளர்களுக்கு நீர்ப்பாசனம், உட்கட்டமைப்பு, குழாய் இணைப்பிடல் துறையில் அதன் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்துகிறது. இதன் மூலம், ஒரு உண்மையான இலங்கை வர்த்தகநாமமானது, உலகளாவிய மட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு, நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் விஸ்தரிப்பும் காரணங்களாக அமைகின்றன.

மிக உயர்ந்த தரம் மற்றும் பாதுகாப்பு, சிறந்த மூலாதார நடைமுறைகள், சமீபத்திய தொழில்நுட்ப நடைமுறைகளைப் பயன்படுத்தி அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை புரட்சிகரமானதாகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலைபேறானதாக வழங்குவதன் மூலம் அதன் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையை சிறப்பாக பேண உதவுகிறது.

லஹிரு இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை ரூபாவை நிலைநிறுத்துவதற்கு மிக அவசியமான இக்கால கட்டத்தில், கட்டுமான வாய்ப்புகளுடன் வேகமாக வளர்ந்து வரும் மாலைதீவுச் சந்தையில் நாம் நுழைவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது எமது வளர்ச்சியின் மற்றுமொரு உயர்ச்சி மட்டுமல்லாது, இத்தேசத்தினதும் அதன் மக்கள் மீதும் நாம் ஏற்படுத்தும் சிறந்த மாற்றத்தை வலுப்படுத்தும் ஒரு மைல்கல்லும் ஆகும்.” என்றார்.

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *