Spectrum Trading மற்றும் LIOC இணைந்து அனைத்து வகை வாகனங்களுக்குமான SERVO ecoPLUS அறிமுகம்

– கட்டுப்படியான விலை; சூழலுக்கு உகந்தது

புகழ்பெற்ற Stafford குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான Spectrum Trading Company நிறுவனம், இலங்கையின் நம்பர் 1 பட்டியலில் உள்ள எரிசக்தி நிறுவனமான Lanka IOC உடன் இணைந்து, இலங்கையின் முதலாவது இணை முத்திரை கொண்ட, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மசகு எண்ணெயான, SERVO ecoPLUS யினை அறிமுகப்படுத்தியுள்ளது. SERVO ecoPLUS ஆனது, உள்ளூர் சந்தையில் உயர்தரம் கொண்ட மசகு எண்ணெய்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தி செய்யப்படும் நீண்ட ஆயுள், மலிவு விலை கொண்ட மசகு எண்ணெய் ஆகும்.

SERVO ecoPLUS ஆனது அமெரிக்க பெற்றோலிய நிறுவனத்தால் குறிப்பிடப்பட்டுள்ள, API SN செயற்றிறன் நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்படுகின்றது. இது தற்போது ஸ்பெக்ட்ரம் ட்ரேடிங்கின் முகவர் வலையமைப்பு மூலம் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த உயர்தர மசகு எண்ணெயானது, 2 சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், பயணிகள் கார்கள், வர்த்தக வாகனங்கள், கனரக வாகனங்கள் போன்ற அனைத்து வகையான வாகனங்களுக்கும் ஏற்ற வகையில் பல்வேறு வகைகளில் வருகிறது. SAE 20W-40 வகையானது, குறிப்பாக 4 ஸ்ட்ரோக் எஞ்சின்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. SAE 20W-50 வகையானது, 2 சக்கர மற்றும் 3 சக்கர 4 ஸ்ட்ரோக் எஞ்சின்கள் ஆகிய இரண்டிற்குமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. SAE 10W-30 வகையானது, பயணிகள் வாகனங்களுக்காகவும், SAE 15W-40 வகையானது கனரக வாகனங்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. SERVO ecoPLUS வகைகளில் உள்ள ஒவ்வொரு வகையும் உயர் மசகு எண்ணெய் பண்புகளை வலுப்படுத்த ப்ரீமியம் தரத்திலான சேர்க்கைகளை சேர்த்து தயாரிக்கப்படுகிறது., இது எஞ்சின்களைப் பாதுகாத்து, எஞ்சின்களின் ஆயுளை அதிகரிப்பதோடு, உயர் செயற்றிறனையும் வழங்குகிறது.

இந்த கூட்டாண்மை குறித்து Spectrum Trading நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி காலிங்க களுபெரும கருத்துத் தெரிவிக்கையில், “Lanka IOC உடனான பங்காளித்துவம் எதிர்வரும் வருடங்களில் அதிக பயனைத் தரும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. SERVO ecoPLUS வகைகளின் அறிமுகமானது, உயர்தரம் மற்றும் கட்டுப்படியான விலை ஆகிய அம்சங்களுடனான, மசகு எண்ணெய்களின் அடிப்படையில் சந்தையில் உண்மையிலேயே ஒரு பாரிய வெற்றிடத்தை நிரப்புகிறது. SERVO உள்நாட்டில் தயாரிக்கப்படுவதோடு, மிகவும் கட்டுப்படியான விலையிலும் கிடைக்கின்றது. அத்துடன் சந்தையில் உள்ள ஏனைய மசகு எண்ணெகளில் இருந்தும் வேறுபட்டதாக, பெற்றோல் மற்றும் டீசல் ஆகிய இருவகை வாகனங்களுக்கும் ஒரே மாதிரியான செயற்பாட்டை வழங்குகிறது. இந்த கூட்டாண்மையை விரிவுபடுத்தவும், எதிர்காலத்தில் இது போன்ற இன்னும் அதிகமான உற்பத்திகளை சந்தையில் அறிமுகப்படுத்தவும் நாம் எதிர்பார்ப்புடன் இருக்கிறோம்.” என்றார்.

Spectrum Trading நிறுவனம் ஆனது, வாகனங்களுக்கான தயாரிப்புகளின் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகத்தில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம் Stafford குழுமத்தின் ஒரு உறுப்பினராக உள்ளது. இக்குழுமத்திற்கு சரக்கு ஏற்றி இறக்கல் தீர்வு மற்றும் பொருட்கள் கையாளுகை உள்ளிட்ட ஆதரவை வழங்குவதற்கான ஒரு நிறுவனம் இதுவாகும். இது 2008 ஆம் ஆண்டில் கூட்டிணைக்கப்பட்டதோடு, இது இலங்கையில் TORCH Plugs & Filters, Puma Tyres, SHAKO தலைக்கவசங்கள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்திகள், உதிரிப்பாகங்கள், வாகன உபகரணங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட முகவரும் விநியோகஸ்தரும் ஆகும்.

லங்கா IOC ஆனது, இலங்கையின் நம்பர் 1 எரிசக்தி நிறுவனமாகவும், நாட்டில் கிரீஸ் உற்பத்தித் தொழிற்சாலையை நிறுவியுள்ள ஒரேயொரு நிறுவனமாகவும் உள்ளது. இது திருகோணமலையில் உள்ள அதிநவீன உற்பத்தி தொழிற்சாலையில் வாகன, தொழில்துறை மற்றும் கடல்சார் SERVO மசகு எண்ணெய்களை உற்பத்தி செய்கிறது. ecoPLUS ஆனது உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதோடு, இது மிகப்பெரிய அளவிலான அந்நியச் செலாவணியை நாட்டுக்காக சேமிக்க உதவுகிறது. Lanka IOC ஆனது, மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த விலையில் சிறந்த தரமான மசகு எண்ணெய்களை வழங்குவதில் எப்போதும் முன்னணியில் இருந்து வருகின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *