1958 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும், வீடுகளுக்கான தீர்வுகளை உற்பத்தி செய்கின்ற, முழுமையாக 100% இலங்கை உற்பத்தியாளரான Anton, PVC குழாய்கள் மற்றும் இணைப்புகள் துறையில் உள்நாட்டில் முன்னோடியாக திகழ்கின்றது. தனித்துவமான வடிவமைப்புகள், நிலையான புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தர நிலைகளைக் கடைப்பிடித்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
PVC தொழிற்துறையிலும் கைத்தொழில் மற்றும் நுகர்வோர் துறைகளில் நீர்த் தாங்கிகள், மேற்கூரைகள் ஆகிய உற்பத்திகளிலும் இலங்கையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றாக திகழும் Anton, அண்மையில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையிடமிருந்து (NWSNDB) HDPE முன் தகுதி (HDPE Pre-Qualification) சான்றிதழை பெற்றுள்ளது. HDPE குழாய்கள் அதிக அடர்த்தி கொண்ட பொலிஎதிலினைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதோடு, நீர், அபாயகரமான கழிவுகள், பல்வேறு வாயுக்கள், தீயணைப்புக்கான நீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படுகிறது. HDPE குழாய்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் வலுவான மூலக்கூற்று பிணைப்பானது, உயர் அழுத்த குழாய்களில் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக அமைகிறது.
HDPE குழாய்கள் அவற்றின் அபரிமிதமான வலிமை, இரசாயன நிலைப்புத்தன்மை மற்றும் அதிகளவான வலிமை-அடர்த்தி விகிதம் ஆகிய அம்சங்களுக்கு பெயர் பெற்றுள்ளன. அவை உறுதியான வளையும் ஆரையை கொண்டுள்ளது. அதாவது அவை மிகவும் நெகிழ்ச்சித் தன்மை கொண்டது என்பதோடு, பொதுவாக கசிவுகள் அற்றவையாக காணப்படுகின்றன. HDPE குழாய்கள் பாரம் குறைந்ததாகும். அதாவது அவற்றை இணைப்பதற்காக தூக்குவதற்கு கனரக உபகரணங்களைப் பயன்படுத்த அவசியமில்லை. நீர் வழங்கல் உள்ளிட்ட தொழிற்துறைகளில், HDPE குழாய்களைப் பயன்படுத்துவதும், உயரமான கட்டடங்களை நிர்மாணிப்பதும் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் போக்கை கொண்டுள்ளது. குறிப்பாக அவற்றின் பரந்த நன்மைகள் காரணமாக, எதிர்வரும் காலங்களிலும் இப்போக்கு தொடர்ந்தும் நீடிக்கும்.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் விரிவான சோதனைகள், மூலப்பொருட்கள், உற்பத்திச் செயன்முறை, தர உத்தரவாதங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த விடயங்கள் பற்றிய ஆய்வின் பின்னரே HDPE முன் தகுதி சான்றிதழானது வழங்கப்பட்டுள்ளது. EN 12201-2 மற்றும் ISO 4427 தரநிலைகளைக் கொண்ட HDPE குழாய்களை உற்பத்தி செய்யும் முதலாவது உற்பத்தியாளராக Anton உள்ளது. அத்துடன் SLS 1498-2015 (ISO 4427-2: 2007 (E)), ISO 9001:2015, WRAS போன்ற சான்றிதழ்களைக் கொண்ட Anton அதன் உயர் தரங்களை மீண்டும் நிரூபித்துள்ளது.
இச்சான்றிதழ் தொடர்பான தனது கருத்துகளை பகிர்ந்து கொண்ட St. Anthony’s Industries Group பிரதம செயற்பாட்டு அதிகாரி லஹிரு ஜயசிங்க, “நாம் 2012 ஆம் ஆண்டில் HDPE குழாய்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தோம் என்பதோடு, நாமே இலங்கையில் முதலாவது HDPE குழாய் உற்பத்தியாளர் எனக் கூறுவதில் பெருமையடைகிறோம். நாம் எப்போதும் மிக உயர்ந்த தரத்திலான தயாரிப்புகளை வழங்குகிறோம் எனும் உண்மையை இச்சான்றிதழ் மேலும் உறுதிப்படுத்துகிறது.” என்றார்.
Anton நிறுவனம் தரம் மற்றும் பாதுகாப்பின் உறுதிமொழியின் பக்கம் எப்போதும் நிற்கிறது. அத்துடன் புத்தாக்கமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான சிறந்த ஆதார நடைமுறைகளை அது கடைப்பிடித்து வருகிறது. எதிர்வரும் வருடங்களில் தமது சொந்த தொழிற்சாலைகளில் HDPE குழாய்கள் மற்றும் இணைப்புகளின் உற்பத்தியை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளது.
END